Thursday, 31 May 2018
B.P. cure!!!
இரத்தக்_கொதிப்பு
#குணமாக……
1, கண்ணாடி பாத்திரத்தில் தேவையான அளவு எலுமிச்சை சாறு ஊற்றி எடுத்துக் கொள்ளவும்
தேவையான அளவு சீரகத்தை வெறும் வாணலியில் போட்டு லேசாக சூடு படுத்தி (பொன்னிறமாக வறுக்க வேண்டாம் லேசாக சூடு படுத்தினால் போதும் ) எடுத்துக் கொள்ளவும்
கண்ணாடிப் பாத்திரத்தில் உள்ள எலுமிச்சை சாற்றில் மூழ்கும்படி சூடு படுத்திய சீரகத்தைப் போட்டு பாத்திரத்தின் வாயை வெள்ளைத் துணியால கட்டி மூடவும்
எலுமிச்சை சாறு வற்றி சீரகம் நன்கு காயும் வரை இதை அப்படியே நாள் தோறும் வெயிலில் வைத்து வரவும்
நன்கு காய்ந்த இந்த சீரகத்தை
(லேசாக சூடு படுத்தி எலுமிச்சை சாற்றில் ஊறி காய்ந்த ))
நன்கு அரைத்து தூளாக எடுத்து பத்திரப் படுத்தவும்
இந்த மருத்துவ குணம் நிறைந்த சீரகத்தை நாள்தோறும் காலை மாலை என இரண்டு வேளைகள் ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வர உயர் இரத்த அழுத்தம் அற்புதமாக கட்டுக்குள் வரும்.
2, சர்ப்பகந்தா மாத்திரை என்று ஒரு மருந்து சித்தா மருந்துக் கடைகளில் கிடைக்கும்
அந்த மாத்திரையை வாங்கி வைத்துக் கொண்டு நாள்தோறும் காலையில் ஒரு மாத்திரை சாப்பிட்டு வர உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும் கட்டுப் படுத்த முடியாத உயர் இரத்த அழுத்தம்
உள்ளவர்கள் மட்டும் கட்டுப் படும் வரை நாள் தோறும் மாலையும் ஒரு மாத்திரை என தினமும் இரண்டு வேளைகள் வேளைக்கு ஒரு மாத்திரை என சாப்பிட்டு வந்து குறைந்தவுடன் ஒரு நாளைக்கு ஒரு மாத்திரை என்று குறைத்துக் கொள்ளலாம்
நோய் கட்டுக்குள் வந்ததும் மாத்திரை சாப்பிடுவதை படிப்படியாகக் குறைத்து நிறுத்தி விடலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment