Tuesday, 22 November 2016

வெந்தயபச்சடி (Fenugreek)

Venthaya Pachadi(Fenugreek)

#வெந்தயபச்சடி : இந்த #பச்சடி நான்கு வகை சுவைகளான இனிப்பு, காரம், கசப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட ஒரு குழம்பு வகையாகும். ராஜஸ்தானில் பொதுவாக செய்யப்படும் ஒரு குழம்பு ஆகும். #வெந்தயம், உலர்ந்த திராட்சை மற்றும் பேரீச்சம் பழம் ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது.
வெந்தயம் கசப்புத்தன்மை உடையதால் அதிகமாக நாம் உணவில் சேர்த்துக்கொள்ள தயங்குவோம். ஆனால் வெந்தயம் தன்னகத்தே பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. தண்ணீரில் கரையக்கூடிய நார் சத்து கொண்டுள்ளது. இது செரிமானத்திற்கும் மல சிக்கலை தவிர்ப்பதற்கும் பேருதவியாக இருக்கிறது. வெந்தயத்தை ஊறவைத்து முளை கட்டி பயன் படுத்தினால் அதன் கசப்பு தன்மை வெகுவாக குறையும். மேலும் புரத சத்தும் நமக்கு அதிகமாக கிடைக்கும்.
இந்த குழம்பின் செயல் முறையை ஒரு தொலை காட்சி நிகழ்ச்சியில் பார்த்தேன். என்னிடம் இருந்த பொருட்களை கொண்டும் எனது ருசிக்கு தக்கவாறும் சிறிது மாற்றங்களை செய்து தயாரித்துப் பார்த்தேன். சுவை மிக மிக அருமை.



Venthaya pachadi

தேவையானவை :
1/4 cupவெந்தயம் முளைகட்டியது
2 Tbspஉலர்ந்த திராட்சை [ kishmish ]
1/2 Tspமிளகாய்த்தூள் [ adjust ]
1/2 Tspசீரகத்தூள்
2 Tspகொத்தமல்லி தூள்
1 Tspஆம்சூர் பொடி ( மாங்காய் பொடி ) [ adjust ]
1 Tspவெல்லம்
2 Tspஉப்பு [ adjust ]
1/2 Tspகடுகு
1/2 cupசீரகம்
8 - 10கருவேப்பிலை
3 Tspநல்லெண்ணெய் [ sesame / till oil ]

செய்முறை :
முதல் நாள் காலையிலேயே வெந்தயத்தை கழுவிய பிறகு ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.
மாலையில் தண்ணீரை முழுவதுமாக வடித்து விட்டு மூடி போட்டு அடுப்பங்கரையில் இரவு முழுவதும் வைத்திருக்கவும்.
மறுநாள்காலையில் வெந்தயம் முளை கட்டியிருப்பதை காணலாம்.

வெந்தய பச்சடி செய்யத் துவங்குவதற்கு முன் முதலில் உலர்ந்த திராட்சையை வெதுவெதுப்பான தண்ணீரில் ஊறவைக்கவும்.

முளை கட்டிய வெந்தயத்தை குக்கரில் போட்டு ஒரு கப் தண்ணீர் விட்டு இரண்டு விசில் வரும் வரை வேக விடவும்.
ஆவி அடங்கும் வரை காத்திருந்து குக்கரை திறக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் கடுகு மற்றும் சீரகம் போட்டு வெடிக்க விடவும்.
அடுத்து வேக வைத்த வெந்தயத்தை தண்ணீருடன் வாணலியில் சேர்க்கவும்.
இப்போது மிளகாய் தூள், மஞ்சத்தூள், சீரகத்தூள், மற்றும் கொத்தமல்லி தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கலக்கி விடவும்.
பிறகு ஊறவைத்துள்ள உலர்ந்த திராட்சையை போட்டு கலக்கவும்.
ஓரிரு நிமிடங்கள் கழித்து ஆம்சூர் பொடி மற்றும் உப்பு சேர்த்து கலக்கி சிறிய தீயின் மீது வைத்திருக்கவும்.
எண்ணெய் மேலே மிதக்க ஆரம்பித்ததும் வெல்லம் சேர்த்து ஒரு கொதி  வந்தவுடன் கருவேப்பிலையை கிள்ளி போட்டு அடுப்பை அணைத்து விடவும்.
துவர்ப்பு தவிர எல்லா வகையான சுவையும் நிறைந்த வெந்தய பச்சடி தயார்.

பரிமாறும் கிண்ணத்தில் எடுத்துவைக்கவும்.
பருப்பு சாதம், பொடி கலந்த சாதம் மற்றும் தயிர் சாதம் ஆகியவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.

குறிப்பு :
உலர்ந்த திராட்சையுடன் உலர்ந்த பேரீச்சம் பழமும் சேர்த்து செய்யலாம்.

No comments: