30 வகை ஈஸி ரெசிப்பி!
காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பறக்கும் இந்த அவசர யுகத்தில், 'சமையலறையில் செலவழிக்கும் நேரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும்’ என்று விரும்புபவர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் கைகொடுக்கும் விதத்திலும், திடீரென்று வரும் நண்பர்கள், உறவினர்களை உபசரிக்க உதவும் வகையிலும்...
குறைந்த நேரத்தில் செய்யக்கூடியதாக, அதேசமயம் சுவைமிக்கதாக இருக்கும் 'ஈஸி ரெசிப்பி’க்களை இங்கே உங்களுக்காக தயாரித்து வழங்கும், சமையல்கலை நிபுணர் லக்ஷ்மி ஸ்ரீநிவாசன், ”சட்டுபுட்டுனு சமையலை முடிங்க... மிச்சமாகுற நேரத்துல படிக்கிறது, எழுதறது, என்டர்டெய்மென்ட்னு லைஃபை என்ஜாய் பண்ணுங்க!'' என்று உற்சாகம் பொங்கக் கூறுகிறார்.
அரிசி வடை
தேவையானவை: பச்சரிசி மாவு - 200 கிராம், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், சிறிய பச்சை மிளகாய் - 4 (நறுக்கவும்), சீரகம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 250 கிராம், பெருங்காயத்தூள், உப்பு - சிறிதளவு.விரைவில் பொரிந்துவிடும் இந்த வடை. இது, விரத நாட்களுக்கேற்றது.
அவல் - பொட்டேட்டோ மிக்ஸ்
தேவையானவை: கெட்டி அவல் - 200 கிராம், உருளைக்கிழங்கு - 2, கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை, வறுத்த வேர்க்கடலை - சிறிதளவு, எண்ணெய் - 150 கிராம், மஞ்சள்தூள், உப்பு - சிறிதளவு.
ரவா - சீரகம் நொறுக்ஸ்
தேவையானவை: ரவை - 200 கிராம், மைதா - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மிளகுத்தூள், பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.இது, ஒரு வாரம் வரை மொறுமொறுப்பாக இருக்கும்.
சன்னா - பொரி டிலைட்
தேவையானவை: வேகவைத்த வெள்ளைக் கொண்டைக்கடலை - 50 கிராம், பொரி - ஒரு கப், நறுக்கிய வெங்காயம் - 2 டீஸ்பூன், டொமேட்டோ சாஸ் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, மிளகாய்த்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - சிறிதளவு.குறிப்பு: டொமேட்டோ சாஸை பரிமாறும் சமயத்தில்தான் சேர்க்க வேண்டும்.
பூரி ஸ்வீட் ரோல்ஸ்
தேவையானவை: பொரித்த பூரிகள் - 6, தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், பொடித்த சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, நெய் - ஒரு டீஸ்பூன், லவங்கம் - 6, டூட்டி ஃப்ரூட்டி - 2 டீஸ்பூன்.
கோவைக்காய் சிப்ஸ்
தேவையானவை: கோவைக்காய் - கால் கிலோ, ரெடிமேட் பஜ்ஜி மிக்ஸ் - 150 கிராம், எண்ணெய் - 200 கிராம்.குறிப்பு: விருப்பப்பட்டால், பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவி பரிமாறலாம். பஜ்ஜி மிக்ஸில் உள்ள காரம், உப்பு போதா விட்டால், கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம்.
ஸ்பைஸி பப்பட்
தேவையானவை: மிளகு - சீரக அப்பளம் - 4 (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) நெய் - அரை டீஸ்பூன். காராபூந்தி - 2 டேபிள்ஸ்பூன், வெங்காயம், வெள்ளரி, கேரட் - தலா ஒன்று (நறுக்கவும்), எலுமிச்சைச் சாறு, மிளகாய்த்தூள், உப்பு - சிறிதளவு.
அவசர மோர்க்குழம்பு
தேவையானவை: கடைந்த தயிர் - ஒரு கப், கடுகு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 4, வெந்தயம், சீரகம் - தலா ஒரு சிட்டிகை, தக்காளி - 2 (நறுக்கவும்), கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, மஞ்சள்தூள் - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.அரைக்க: பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, சீரகம் - ஒரு சிட்டிகை.
லெமன் - ஜிஞ்சர் பிக்கிள்
தேவையானவை: தோல் நீக்கி, பொடியாக நறுக்கிய இளம் இஞ்சி (நாரின்றி வாங்கவும்) - அரை கப், சிறிய பச்சை மிளகாய் - 6, (பொடியாக நறுக்கவும்), கேரட் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப.இஞ்சியுடன் உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்ப்பதனால் ஊறுகாய் சிறிது நிறம் மாறி இளம் சிவப்பாகும். இதுபற்றி கவலைப்பட வேண்டாம். இந்த ஊறுகாய் வாய்க்கசப்பு, பித்தம், வயிறுப் பொருமல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கும். இஞ்சிக்குப் பதிலாக, மாங்காய் இஞ்சி உபயோகித்தும் செய்யலாம்.
மல்ட்டி பர்ப்பஸ் வேர்க்கடலைப்பொடி
தேவையானவை: வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 8 பூண்டுப் பல் - 3, நெய் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
புதினா - முந்திரி பக்கோடா
தேவையானவை: உடைத்த முந்திரி - 50 கிராம், கடலை மாவு - 100 கிராம், அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய புதினா - அரை கப், எண்ணெய் - 250 கிராம், மிளகாய்த்தூள், உப்பு - தேவைக்கேற்ப.குறிப்பு: நறுக்கிய வெங்காயம் சிறிதளவு, நசுக்கிய பூண்டுப் பற்கள் இரண்டு ஆகியவற்றை மாவில் சேர்த்துக் கலந்தும் செய்யலாம்.
வெள்ளரி விதை மில்க்ஷேக்
தேவையானவை: வெள்ளரி விதை - 2 டீஸ்பூன், முந்திரி, பாதாம் - தலா 2, ஏலக்காய் - ஒன்று, சர்க்கரை - 3 டீஸ்பூன், காய்ச்சி, ஆறவிட்டு, குளிரவைத்த பால் - 200 மில்லி.குறிப்பு: சர்க்கரை தேவையில்லை என்றால், அதற்குப் பதில் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்துப் பருகலாம்.
பொரித்த அப்பளக் குழம்பு
தேவையானவை: பொரித்த உளுந்து அப்பளம் - 4, புளித்தண்ணீர் - ஒரு கப், சாம்பார் பொடி - 4 டீஸ்பூன், பொடித்த வெல்லம், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, நல்லெண்ணெய் - 50 கிராம், உப்பு - தேவைக்கேற்ப.இந்த அப்பளக் குழம்பின் வாசனையில் வீடே மணக்கும்.
டிரைஃப்ரூட் ரைஸ்
தேவையானவை: வடித்த சாதம் - ஒரு கப், வறுத்த முந்திரி, பாதாம், உலர்திராட்சை - தலா 2 டீஸ்பூன், லவங்கம், ஏலக்காய் - தலா 2, நெய் - 3 டீஸ்பூன், பொடித்த சர்க்கரை - 4 டீஸ்பூன்.
தயிர் சேமியா
தேவையானவை: சேமியா - 200 கிராம் (வேகவிட்டு், நீரை வடிக்கவும்), தயிர் - ஒரு கப், சர்க்கரை - ஒரு சிட்டிகை, மாதுளை முத்துக்கள், பச்சை திராட்சை, நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, வெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன்.செய்முறை: தயிருடன் உப்பு, சர்க்கரையை சேர்த்துக் கடையவும். இதனுடன் வெந்த சேமியாவைச் சேர்க்கவும். வெண்ணெயை உருக்கி, தாளிக்கும் பொருட்களைத் தாளிக்கவும். இதனை சேமியா கலவையுடன் சேர்க்கவும். பிறகு, மாதுளை முத்துக்கள் பச்சை திராட்சை, கொத்தமல்லித்தழை சேர்த்துப் பரிமாறவும்.
நூடுல்ஸ் பான் கேக்
தேவையானவை: தோசை மாவு - ஒரு கப், பிளெய்ன் நூடுல்ஸ் - அரை பாக்கெட், கேரட் - ஒன்று (துருவவும்), நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), இட்லி மிளகாய்ப்பொடி - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 50 கிராம், உப்பு - சிறிதளவு.
கேபேஜ் துவட்டல்
தேவையானவை: துருவிய கோஸ் (கேபேஜ்) - ஒரு கப், நறுக்கிய புதினா - அரை கைப்பிடி அளவு, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
மாவற்றல் ரசம்
தேவையானவை: மாவற்றல் (காதி கிராஃப்ட் கடைகள், டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 10 துண்டுகள், பருப்பு நீர் - ஒரு கப் (50 கிராம் துவரம்பருப்பை வேகவைத்து, நீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்), மஞ்சள்தூள், நறுக்கிய கொத்தமல்லித்தழை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.தாளிக்க: நெய் - ஒரு டீஸ்பூன், பொடித்த மிளகு, சீரகம் (சேர்த்து) - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு.
குறிப்பு: இந்த ரசத்துக்கு புளியும் தக்காளியும் தேவையில்லை.
ரவா டோக்ளா
தேவையானவை: ரவை - 200 கிராம், கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், ஃப்ரூட் சால்ட் (டிபார்ட்மென்ட் கடைகளிள் கிடைக்கும்) - அரை டீஸ்பூன், சர்க்கரை - ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, பச்சை மிளகாய் - இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, கடுகு - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2 (கீறவும்), நறுக்கிய கொத்தமல்லித்தழை, கேரட் துருவல், தேங்காய்த் துருவல், எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, எண்ணெய் - 50 கிராம், உப்பு - தேவைக்கேற்ப.கடுகு, பச்சை மிளகாயை எண்ணெயில் தாளித்து, டோக்ளாவின் மீது ஊற்றி... கொத்தமல்லித்தழை, தேங்காய் துருவல், கேரட் துருவல் கொண்டு அலங்கரிக்கவும். எலுமிச்சைச் சாறை பரவலாக ஊற்றிப் பரிமாறவும்.
பச்சை மிளகு ஊறுகாய்
தேவையானவை: பச்சை மிளகு - 100 கிராம் (பெரிய காய்கறிக் கடைகளில் கிடைக்கும்), பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - ஒன்றரை டீஸ்பூன்.இது தயிர் சாதத்துக்கு நல்ல காம்பினேஷன். இதை ஃப்ரிட்ஜில் வைத்து சில நாட்கள் பயன்படுத்தலாம்.
சிவப்புப் பூசணி வெல்லப் பச்சடி
தேவையானவை: சிவப்பு பூசணி - கால் கிலோ (நறுக்க வும்), வெல்லம் - 50 கிராம், புளி - நெல்லிக்காய் அளவு (கரைத்துக் கொள்ளவும்), மஞ்சள்தூள், உப்பு - தேவையான அளவு.செய்முறை: சிவப்பு பூசணித்துண்டுகளை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிட்டு, புளித்தண்ணீர் சேர்க்கவும். நன்கு கொதித்த பின் வெல்லம் சேர்த்து கெட்டியானதும் இறக்கவும். தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்துச் சேர்க்கவும்.
தயிர் நெல்லி
தேவையானவை: முழு நெல்லி - 10 (வேகவிட்டு கொட்டை நீக்கவும்), கடைந்த தயிர் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பச்சை மிளகாய் - ஒன்று (நறுக்கவும்).
டொமேட்டோ - கார்லிக் தொக்கு
தேவையானவை: நாட்டுத் தக்காளி - கால் கிலோ (பொடியாக நறுக்கவும்) உரித்த மலைப்பூண்டு - 15 பற்கள், துருவிய இளம் இஞ்சி - 50 கிராம், மிளகாய்த்தூள் - 4 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - 100 கிராம், உப்பு - தேவையான அளவு.
பூரி கார ரோல்ஸ்
தேவையானவை: பொரித்த பூரிகள் - 6, உருளைக்கிழங்கு - ஒன்று (வேகவிட்டு, தோல் நீக்கி, துருவவும்), கேரட் - ஒன்று (துருவவும்), லவங்கம் - 6, பனீர் துருவல், மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்லித்தழை, நெய், உப்பு - சிறிதளவு.
ஜவ்வரிசி வெல்லப் பாயசம்
தேவையானவை: ஜவ்வரிசி - 100 கிராம், தேங்காய்ப்பால் - ஒரு கப், வெல்லம் - 150 கிராம் (கரைத்து, கொதிக்கவிட்டு, வடிகட்டவும்), ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, வறுத்த முந்திரி, திராட்சை - சிறிதளவு, நெய் - ஒரு டீஸ்பூன்.
முளைகட்டிய வெந்தயக் கறி
தேவையானவை: முளைகட்டிய வெந்தயம் - 3 டீஸ்பூன், வேகவைத்த துவரம்பருப்பு - 50 கிராம், தேங்காய்த் துருவல், - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, சர்க்கரை - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, பெருங்காயத்தூள் - சிறிதளவு.
திடீர் போண்டா
தேவையானவை: இட்லி / தோசை மாவு - ஒரு கப், ரெடிமேட் பஜ்ஜி - போண்டா மிக்ஸ் - 50 கிராம், வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, நறுக்கிய பச்சை மிளகாய், நசுக்கிய இஞ்சி - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 200 கிராம், உப்பு - அரை டீஸ்பூன்.குறிப்பு: மேற்கூறிய மாவை பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து, நறுக்கிய காய்களைத் தோய்த்து பஜ்ஜியும் போடலாம்.
கேழ்வரகு கீர்
தேவையானவை: கேழ்வரகு மாவு - 5 டீஸ்பூன், வறுத்துப் பொடித்த பாசிப்பருப்பு மாவு - 3 டீஸ்பூன், பால் - 2 கப், சர்க்கரை - 150 கிராம், நெய் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, சீவிய முந்திரி - ஒரு டீஸ்பூன்.
ஈஸி பாஸந்தி
தேவையானவை: ஃபுல்கிரீம் மில்க் - ஒரு பாக்கெட் (500 மில்லி), சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், சோள மாவு - அரை டீஸ்பூன், சீவிய முந்திரி - சிறிதளவு, குங்குமப்பூ - சில இதழ்கள்.
சீஸ் அவல்
தேவையானவை: அவல் - 200 கிராம், சீஸ் - 50 கிராம், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 250 கிராம், உப்பு - சிறிதளவு.