Sunday, 26 April 2015

கசப்பு மற்றும் துவர்ப்பு!!!

கசப்பு மற்றும் துவர்ப்பு சிகிச்சை :-
+++++++++++++++++++++++++++++
( நெருப்புப் பிராணன், இருதயம், சிறுகுடல், நாக்கு .சந்தோஷம் )
நாம் சாப்பிடுகிற உணவில் உள்ள கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகள் நாக்கில் படும்பொழுது நாக்கிலுள்ள சுவை மொட்டுகள் அதை நெருப்புப் பிராணனாக (சக்தி) மாற்றி உடல் முழுவதும் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் அனுப்பி வைக்கிறது, நெருப்பு சக்தி மூலமாக இயங்கும் உறுப்புகள் இருதயம், இருதயத்தின் மேல் உறை, சிறுகுடல் மற்றும் உடல் வெப்பக் கட்டுபாட்டு உறுப்பு. இதற்கான வெளி உறுப்பு நாக்கு இதற்கான உணர்ச்சி சந்தோஷம்.
நம்மில் பலருக்குத் திடீரென சந்தோசம் வந்தால் உடனே நெஞ்சு பட படக்கும் வியர்வை வரும், இது எதனால் ஏற்படுகிறது? அளவுக்கு அதிகமான சந்தோஷம் உடலிலுள்ள நெருப்புச் சக்தியை சாப்பிடுகிறது, உடலில் நெருப்புச் சக்தி குறைவானால் இருதயத்திற்குத் தேவையான சக்தி கிடைக்காததால் இருதயம் படபடக்க ஆரம்பிக்கிறது, திடீரென நம்மை யாராவது மேடையில் ஏறி பேச சொன்னாலோ அனைவர் மத்தியிலும் நமக்கு ஒரு பாராட்டு கிடைக்கும் பொழுதோ, பள்ளிகளில் கல்லூரிகளில் திடீரென மேடை ஏற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலோ இந்தப் படபடப்பு ஏற்படும். எனவே கசப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இரு சுவைகளுக்கும். சந்தோஷத்துக்கும் நெருங்கிய தொடர்புள்ளது.
நாக்கும் இருதயமும் ஒரே வடிவத்தில் இருக்கும் இருதயத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் அது நாக்கில் தெரியும் மருத்துவர்கள் நோயாளிகளின் நாக்கை ஏன் பார்க்கிறார்கள் என்றால் நாக்கில் நிறம் அதில் ஏற்படும் மாற்றத்தை வைத்து இருதயத்தில் ஏற்படும் கோளாறுகளைக் கண்டுபிடிக்க முடியும்.
இப்பொழுது நம்மில் பலருக்குத் தைரியமும் கிடையாது துணிவும் கிடையாது. நாம் அனைவரும் கோழைகளாக இருக்கிறோம், பல விஷயங்களில் நாம் தைரியமாக எந்த வேலையும் யாரும் செய்வதில்லை இதற்கு அடிப்படைக் காரணம் நம் உணவில் கசப்பு. மற்றும் துவர்ப்புச் சுவைகளைச் சேர்த்துக் கொள்வதே கிடையாது, கசப்பான பொருள்களை அதிகமாக சாப்பிடுபவர்கள் தைரியசாலியாக இருப்பதைப் பாருங்கள். இன்றைய குழந்தைகள் கோழைத்தனமாக இருக்கிறார்கள் தைரியம் யாருக்கும் இருப்பதில்லை இதற்கும் காரணம் குழந்தைகள் யாரும் கசப்பு துவர்ப்பு சாப்பிடுவதே கிடையாது, எனவே நமது நாக்கு எவ்வளவு கசப்பைக் கேட்கிறதோ அந்த அளவுக்குக் கசப்பான பொருள்களை மற்றும் துவர்ப்பான பொருள்களைச் சாப்பிடுவதன் மூலமாக இருதயம் சம்பந்தப்பட்ட மற்றும் தைரியம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும்.
நம்மைப் பாம்பு கடித்தால் பாம்பின் விஷம் உடல் முழுவதும் பரவும்
உடலிலுள்ள அனைத்து செல்களும் பாம்பு விஷத்தை வெளியேற்றுவதற்காக
இருதயத்திடம் க்ஷஞ கேட்கும், இருதயம் க்ஷஞ யை அதிகரிக்கும் அப்பொழுது உடலிலுள்ள நெருப்பு சக்தி குறையும் உடலில் எப்பொழுது நெருப்பு சக்தி குறைகிறதோ நாக்கு என்ற மருத்துவர் கசப்பு, துவர்ப்பு என்ற சுவையைக் கேட்பார். பாம்பு கடித்தால் கொடுக்கும் மூலிகையின் பெயர் சிறியா நங்கை, பெரிய நங்கை, இந்த முலிகைகள் மிகவும் கசப்பானதாக இருக்கும். அந்த மூலிகையில் மருந்து இருக்கிறதோ இல்லையோ அதிலுள்ள கசப்பான சுவை நாக்கில் பட்டு நாக்குக்கு நெருப்பு சக்தி கிடைத்து. அந்த நெருப்பு சக்தி இருதயத்திற்கு கொடுப்பதன் மூலமாக இருதயத்தை நன்றாக வேலை செய்ய வைத்து, உடலிலுள்ள விஷத்தை வெளியேற்றுகிறது.
எனவே யாருக்காவது பாம்பு கடித்தால் பாகற்காய் அல்லது வேப்பிலையைச் சாப்பிடுங்கள். பாம்பின் விஷம் உடலில் இருக்கும் பொழுது பாகற்காய் சாப்பிட்டால், பாகற்காய் கசக்காது. இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், நாக்குக் கசப்பு என்ற மருந்தை கேட்கிறதே தவிர மருந்து மாத்திரைகளைக் கேட்பது கிடையாது. இப்படிப் பாகற்காயும், வேப்பம் இலையையும் சாப்பிட்டுக் கொண்டு வரவேண்டும். நிறைவாக சாப்பிட வேண்டும். எப்பொழுது நாக்கில் கசப்பு தெரிகிறதோ சந்தோஷப்படுங்கள். உடலில் உள்ள விஷம் வெளியேறி விட்டது என்று. ஏனென்றால் நாக்குக்குத் தெரியும். எப்பொழுது எந்தச் சுவை வேண்டுமென்று விஷம் வெளியேறிய பிறகே நாக்குக் கசப்பு சுவையின் தேவை தீர்ந்து விடவே பாகற்காய் கசக்க ஆரம்பிக்கிறது.
எனவே பாம்பு கடித்தால் முதலில் நமக்குத் தேவைப்படுவது தைரியம், இரண்டாவது கசப்பானச் சுவையை சாப்பிடவேண்டும், ஆனால் பலர் பாம்பின் விஷத்தால் இறப்பது கிடையாது, பாம்பு கடித்து விட்டது என்ற எண்ணம் மனதில் பயத்தை ஏற்படுத்தி பயம் சிறுநீரகத்தைப் பாதித்து சிறுநீரகம் எந்த வேலையும் செய்யாமல் இருந்தால் பாம்பு விஷத்தை வெளியேற்ற முடியாது, ஏனென்றால் பாம்பின் விஷத்தை வெளியேற்றுவது சிறுநீரகம், எனவே பாம்பு மட்டுமல்ல எந்த விஷப்பூச்சியும் கடித்தால் முதலில் நாம் நம் உடல் நம்மைக் காப்பற்றும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும்.
ஒருவருக்குத் தோட்டத்தில் வேலை செய்யும் பொழுது பாம்பு கடித்து விட்டது அவர் அதை பார்க்கவேயில்லை. மூன்று நாட்களுக்குப் பிறகு நண்பர் ஒருவர் காலைப் பார்த்து பாம்பு கடித்தது போல் இருக்கிறதே என்று கேட்டார், அதைப் பார்த்தவுடன் அவரும் ஆமாம் இது பாம்பு கடித்த பற்கள் போல் இருக்கிறதே என்று நினைத்து உடனே அவர் மயங்கி கீழே விழுந்து இறந்து விட்டார், இது போல நிறைய கதைகள் உலகத்தில் உள்ளது, பாம்பு கடித்த பிறகு அந்த விஷம் அவரைக் கொலை செய்யவில்லை ஆனால் இரண்டு நாட்களுக்குப் பின்பு பாம்பு கடித்து விட்டது என்று அவருக்கு எப்பொழுது புரிந்ததோ அவர் மனம் பயத்தை உண்டு செய்து பயம் சிறுநீரகத்தை பாதித்து சிறுநீரகம் வேலையை நிறுத்தும் பொழுது உயிர் பிரிகிறது. எனவே தயவு செய்து எந்த விஷப்பூச்சி கடித்தாலும் நம் உடம்பிற்கே அந்த விஷத்தை முறியடிக்கும் மருந்தைக் கண்டுபிடிக்கத் தெரியும் அதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் நமது நாக்கு எந்தச் சுவையைக் கேட்கிறதோ அந்த சுவையை உடனே தாராளமாகக் கொடுப்பது மூலமாகக் குணப்படுத்தமுடியும் என்ற நம்பிக்கையில் அந்தக் காரியத்தை மட்டுமே செய்வதால் நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளலாம்.
உடனே பாம்பு கடித்தவுடன் வேப்ப இலையையும், பாகற்காயும் சாப்பிட்டுக் கொண்டு வீட்டில் இருக்க வேண்டாம். இது ஒரு தற்காப்பு வைத்தியம். மனதில் தீர்க்கமான தைரியமும் கசப்பானச் சுவையை சாப்பிட்டால் கண்டிப்பாகப் பாம்பு விஷம் முறியடிக்கும். இருந்தாலும் பாம்பு கடித்தால் பாகற்காயைச் சாப்பிடுங்கள் அதே சமயத்தில் மருத்துவமனைக்கும் செல்லுங்கள், ஏனென்றால் ஒரு சில பாம்புகள் இந்தக் கசப்பான சுவைக்கும் மீறி வேலை செய்ய வாயப்புள்ளது.
கோவில்களில் திருவிழாவின் போது முதுகில் கொக்கி போட்டுத் தேரை இழுப்பது, வாயில் அலகு குத்துவது, நாக்கில் அலகு குத்துவது, தீச்சட்டி எடுப்பது போன்ற வேலைகளைச் செய்பவர்கள் முழு எலுமிச்சம் பழத்தை வாயில் வைத்துச் சாப்பிடுவார்கள், வேப்பம் இலையை வாயில் போட்டு மென்று சாப்பிடுவார்கள், ஏன் அவ்வாறு சாப்பிடுகிறார்கள், ஏனென்றால் உடலுக்கு இந்த சக்தியால் சில காயங்களை ஏற்படுத்தும் பொழுது அந்த உறுப்புகளிலுள்ள செல்கள் தன்னைக் குணப்படுத்திக் கொள்ள க்ஷஞ யை அதிகரிக்கும் பொழுது உடலில் நெருப்பு சக்தி தீர்ந்து போகும், நெருப்புச் சக்தியை மீண்டும் நம் உடலுக்குத் தேவைப்படும் என்பதால் நாக்குக் கசப்பானச் சுவையைக் கேட்கிறது, எனவே அவர்கள் கசப்பான பொருட்களை மென்று சாப்பிடும் பொழுது அவர்களுக்கு ஒன்றும் தெரிவதில்லை, அதே நபர்கள் அடுத்த நாள் வீட்டில் தனியாக உட்கார்ந்து இருக்கும் பொழுது வேப்பிலையைக் கொடுத்துப் பாருங்கள், அவருக்கு அது கசக்கும்.


எனவே கசப்பு சுவைக்கும் நெருப்புப் பிராணனுக்கும் இருதயம், இருதயத்தின் மேலுறை, சிறுகுடல், உடல் வெப்ப கட்டுப்பாட்டு உறுப்பு, நாக்கு, சந்தோஷம் ஆகிய இவ்வளவு விஷயத்திற்கும் சம்பந்தமுண்டு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த சம்பந்தங்களைப் புரிந்து கொண்ட மருத்துவரால் மட்டுமே உங்கள் நோடீநுகளைக் குணப்படுத்த முடியும். இந்த சம்பந்தம் தெரியாத மருந்துவர்கள் ஒரு குறிப்பிட்ட உறுப்பில், ஆராய்ச்சி செய்து ஆபரேஷன் செய்து மருந்து, மாத்திரை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.

புரோகிராம்களை இன்ஸ்டால் செய்ய!!!

புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திடும் இணையதளம்

உங்க கம்ப்யூட்டருக்குத் தேவையான புரோகிராமை அதுவே டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொடுக்கிறது ஒரு இணையதளம்.அந்த இணையதளத்தின் பெயர் நினைட்.காம். இந்த வெப்சைட்ல போய் உங்களுக்கு தேவையான புரோகிராமை டிக் அடிச்சிட்டு கடைசியில இருக்கிற Get Installer பட்டனை அமுக்கினா போதும்.

உடனே ஒரு EXE பைல் டவுன்லோட் ஆகும். அதை ஓப்பன் பண்ணி இன்ஸ்டால் பண்ணுங்க போதும்.

அந்த வெப்சைட்ல நீங்க என்னென்ன புரோகிராம் தேர்ந்தெடுத்தீங்களோ, அதை எல்லாத்தையும் இந்த இன்ஸ்டாலர் உங்களோட கம்ப்யூட்டர்ல டவுன்லோட் செய்து இன்ஸ்டாலும் செய்துடும்.

புது வெர்சனா அப்டேட்டிவ் சாப்ட்வேரா பார்த்து இன்ஸ்டால் செய்யும். இது நமக்கு ரொம்ப கெயினா இருக்கும்.

இலவசமான சாப்ட்வேர் கூட வர்ற டூல்ஸ், வைரஸ் இன்ன பிற வகையறாக்களை எல்லாம் ஓரங்கட்டிட்டு பியூரா என்ன சாப்ட்வேர் புரோகிராம் தேவையோ அதை மட்டும் இன்ஸ்டால் பண்ணுது...

இதுதான் இந்த வெப்சைட்டோட சிறப்பம் - ஸ்பெஷாலிட்டி.

யூஸ் பண்ணி பாருங்க... கண்டிப்பா யூஸ்புல்லா இருக்கும். சந்தேகமில்லை.

தமிழில்: 

நீங்கள் புதியதாக வாங்கிய கம்ப்யூட்டரில் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திட பயன்படும் ஒரு பயன்மிக்க இணையதளம் நினைட். 



இந்த தளத்தில் சென்று, உங்களுக்குத் தேவையான புரோகிராம்களை தேர்ந்தெடுத்து "Get Installer" என்பதை கிளிக் செய்திட வேண்டும்.

                                  


உடனே உங்கள் கம்ப்யூட்டிரில் .exe பைல் தரவிறங்கும். அதை திறந்து இயக்கினால், நீங்கள் தேர்ந்தெடுத்த புரோகிராம்கள் டவுன்லோட் ஆகி இன்ஸ்டால் செய்யப்படும். 


புதியவர்களுக்கு இந்த தளம் மிக பயனுள்ளதாக இருக்கும். புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திட மிகவும் நம்பகமான இணையதளம். 


புரோகிராம் தரவிறக்கி இன்ஸ்டாலும் செய்து கொடுக்கும் இந்த தளம் உண்மையிலேயே ஆச்சர்யமிக்கதுதான்.

இணையதளத்திற்கான சுட்டி: www.ninite.com
 
 






Saturday, 25 April 2015

கிராமத்து சமையல்!!!

கிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல் – பட்ஜெட் சமையல்’ நங்கநல்லூர் பத்மா.
சுலபமா வாங்கலாம்… சுவையா சமைக்கலாம்…
“கிராமத்துல இருந்தவரைக்கும், நம்ம வீட்டுத் தோட்டத்துல விளையற காய்கறிங்க, சுலபமா வாங்கக்கூடிய வகையில இருக்கற காய்கறிங்கனு கிடைக்கறத வச்சே, சுவையா சமைச்சு சாப்பிடுவோம். குடும்பமா உட்கார்ந்து சாப்பிட்டு, அம்மாவோட கைப்பக்குவத்துல கிறங்கிப் போவோம். அந்த சந்தோஷம்… கோடி ரூபா கொட்டிக் குடுத்தாலும் கிடைக்காது…”
– காலவெள்ளத்தில் நகர்ப்புறங்களில் அடைக்கலமாகிவிட்ட பலரும், இப்படி பெருமூச்சுவிடத் தவறுவதில்லை.
‘விலை மலிவு’, ‘சுலபமாகக் கிடைக்கும்’ என்ற காரணங்களோடு, ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்கிற உன்னதத் தத்துவமும் அம்மாவின் கிராமத்துச் சமையலில் சேர்ந்தே இருக்கும் என்பது மிகமுக்கியமாக கவனிக்க வேண்டிய ஓர் அம்சமாகும்.
‘அதெல்லாம் ஒரு காலம்’ என்றாகிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில்… அந்த ஒரு காலத்தில் நம் முன்னோர்கள் ரசித்து, ருசித்த கிராமத்துச் சமையலை இங்கே விருந்தாக்கி, மலரும் நினைவுகளுக்குள் மூழ்கடிக்கிறார் ‘பட்ஜெட் சமையல்’ நங்கநல்லூர் பத்மா.
“பீட்ஸா, பர்கர், சோளாபட்டூரானு ஊர், பேர் தெரியாத விதவிதமான சமையல் ரெசிபிங்க நம்ம வீட்டுக்குள்ள வந்துட்டாலும், காலகாலமா நம்ம கிராமத்து அடுப்புகள்ல கொதிச்சுக்கிட்டிருக்கற எளிமையான சமையலுக்கு இருக்கற ருசி… அது கொடுக்கற திருப்தி… வேற எங்கயுமே கிடைக்காது. நீங்களும் இதையெல்லாம் செஞ்சு பாருங்க… வீடே வயிறார உங்களைப் பாராட்டும்” என்று உத்தரவாதம் கொடுக்கிறார் பத்மா.
அப்புறமென்ன… உங்க வீட்டையும் கிறங்கடிங்க!
கம்புதோசை
தேவையானவை: கம்பு – 100 கிராம், பாசிப்பருப்பு – 1 கப், அரிசி – 1 கப், இஞ்சி – சிறிய துண்டு, மிளகு – 10, பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கப், பச்சை மிளகாய் – 1, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கம்பு, பாசிப்பருப்பு, அரிசி ஆகியவற்றை 4 மணி நேரம் ஒன்றாக ஊற வைத்து, பின்பு இஞ்சி, மிளகு, பச்சை மிளகாய் சேர்த்து நைஸாக தோசை மாவு பதத்தில் அரைக்கவும். அதில் உப்பு சேர்த்து, நறுக்கிய வெங்காயத்தையும் போட்டு, தோசைக்கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை தோசைகளாக வார்க்கவும்.
சோள ரவை உப்புமா
தேவையானவை: சோளம் – 1 கப், அரிசி ரவை – 1 கப், கோதுமை ரவை – 1 கப், பெரிய வெங்காயம் – 1, கறிவேப்பிலை – சிறிதளவு, இஞ்சி – சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 1, கடுகு – 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் – சிறிதளவு, தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: சோளத்தை ரவையாக உடைக்கவும். அரிசி ரவை, கோதுமை ரவை, சோள ரவை மூன்றையும் ஒன்று சேர்க்கவும். கடா யில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து… பொடியாக நசுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றைச் சேர்க்கவும். கலந்து வைத்திருக்கும் ரவையின் அளவில் 1 பங்குக்கு மூன்று பங்கு என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றவும். பிறகு உப்பு சேர்த்து, கொதித்ததும்… கலந்து வைத்திருக்கும் ரவையைத் தூவிக் கிளறி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டுக் கிளறி இறக்கவும்.
குறிப்பு: காய்கறிகள் சேர்த்தும் தயாரிக்கலாம். இதற்கு சட்னி, சாம்பார் சிறந்த காம்பினேஷன்.
அவரைக்காய் பருப்பு உசிலி
தேவையானவை: அவரைக்காய் – கால் கிலோ, துவரம்பருப்பு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6, கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: அவரைக்காயைப் பொடியாக நறுக்கி, சிறிது உப்பு சேர்த்து, வேக விட்டு தண்ணீரை வடிகட்டவும். துவரம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, அத்துடன் காய்ந்த மிளகாய் சேர்த்து, கெட்டியாக அரைத்து, சிறிது உப்பு சேர்க்கவும். கடாயில் எண்ணெய்விட்டு… கடுகு தாளித்து, அரைத்த பருப்பை சேர்த்து நன்கு உதிரி உதிரியாக வரும் வரை கிளறி, வேக வைத்த அவரைக்காயை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
பாசிப்பருப்பு பெசரட்
தேவையானவை: பச்சரிசி – 1 கப், பாசிப்பருப்பு – 200 கிராம், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 1, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசி, பாசிப்பருப்பை சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து தோசை மாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும். அதில் கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிப் போட்டு, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் தயாரித்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை தோசைகளாக வார்த்து, இருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: இந்த தோசைக்கு எந்த சைட் டிஷ்ஷூம் வேண்டாம். அப்படியே சூடாக சாப்பிடலாம். பாசிப்பருப்பு, வயிற்றுப் புண்ணை ஆற்றும் குணமுடையது.
கருப்பட்டி அப்பம்
தேவையானவை: கருப்பட்டி – 100 கிராம், தினை மாவு – 100 கிராம், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, நெய் – 100 மில்லி, தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன்.
செய்முறை: கருப்பட்டியை நசுக்கி தினை மாவில் போட்டு, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். குழிப்பணியாரக் கல்லில் சிறிது நெய் தடவி மாவை விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து அப்பத்தை தயாரிக்கவும்.
குறிப்பு: மாவுடன் வாழைப்பழத்தை நன்கு மசித்துப் போட்டும் தயாரிக்கலாம். பண்டிகைகளுக்கு மிகவும் ஏற்றது இந்த அப்பம்.
ராகி மோர்க்கூழ்
தேவையானவை: ராகி மாவு 100 கிராம், மோர் மிளகாய் – 2, சிறிது புளித்த மோர் – 200 மில்லி, கடுகு – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: ராகி மாவுடன் மோர், உப்பு சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு… கடுகு, மோர் மிளகாய் தாளித்து, கரைத்த மாவை ஊற்றி நன்கு கிளறி இறக்கவும்.
குறிப்பு: இட்லி மிளகாய்ப் பொடி இதற்கு சிறந்த காம்பினேஷன். மோருடன் ராகி மாவைக் கலந்து, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து அப்படியே குடிக்க… பசி அடங்கும்.
உளுந்து அடை
தேவையானவை: புழுங்கல் அரிசி – 250 கிராம், கறுப்பு உளுந்து – 100 கிராம், துவரம்பருப்பு – 1 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கப், காய்ந்த மிளகாய் – 5, இஞ்சி – சிறு துண்டு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசி, கறுப்பு உளுந்து, துவரம்பருப்பை தனித்தனியாக ஊற வைக்கவும். அரிசியுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி சேர்த்து கரகரப்பாக ரவை பதத்தில் அரைக்கவும். உளுந்து, துவரம்பருப்பை சேர்த்து அரைத்து, பிறகு எல்லா மாவையும் ஒன்று சேர்த்து தேவையான உப்பு சேர்த்துக் கலக்கவும். இதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு அடை மாவு தயாரிக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, சிறிது கெட்டியாக மாவை வார்த்து, இருபுறமும் மொறுமொறுப்பாக வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: கறுப்பு உளுந்து, புரதச் சத்து மிக்க தானியம் ஆகும். பருவமடையும் பெண்களுக்கு உளுந்து களி தயாரித்து கொடுப்பது வழக்கம். எலும்புகள் வலுவடைய இது உதவும். எனவே… துவையல், அடை, இட்லி மிளகாய்ப்பொடி போன்றவற்றைத் தயாரிக்கும்போது கறுப்பு உளுந்து சேர்ப்பது நல்லது.
கொள்ளு உருண்டை காரக்குழம்பு
தேவையானவை: கொள்ளு – 200 கிராம், காய்ந்த மிளகாய் – 6, துவரம்பருப்பு – 4 டீஸ்பூன், கறுப்பு உளுந்து – 4 டீஸ்பூன், புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்பு, கறுப்பு உளுந்து, கொள்ளு ஆகியவற்றை சேர்த்து ஊற வைத்து உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்துக் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு, அரைத்த விழுதைப் போட்டு நன்கு கிளறி எடுத்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். புளியைக் கரைத்து உப்பு, சாம்பார் பொடி போட்டு கொதிக்க வைத்து குழம்பாக தயாரிக்கவும். உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து, ஆவியில் வேகவிட்டு எடுத்து, குழம்பில் போட்டு இறக்கவும்.
குறிப்பு: கொள்ளு, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புச் சத்தைக் குறைக்கும். குழம்பை சாதத்தில் போட்டு உருண்டைகளைத் தொட்டுக் கொள்ள வைத்துக் கொள்ளலாம். உருண்டையை சாதத்துடன் பிசைந்து கொண்டு, குழம்பு தொட்டும் சாப்பிடலாம். இது ஒரு டூ-இன்-ஒன் குழம்பு.
வெள்ளரிக்காய் கூட்டு
தேவையானவை: வெள்ளரிக்காய் – 3, பாசிப்பருப்பு – 1 கப், தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன், சீரகம் 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 1, கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: வெள்ளரிக்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். பாசிப்பருப்பை குக்கரில் வைத்து வேகவிடவும். காய்ந்த மிளகாய், சீரகம், தேங்காய் துருவல் மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வெள்ளரித்துண்டுகளை உப்பு சேர்த்து வேகவிட்டு, அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலா மற்றும் வேக வைத்திருக்கும் பாசிப்பருப்பு இரண்டையும் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் போட்டு தாளித்துக் கொட்டி, கறிவேப்பிலையை பொடியாக கிள்ளிப்போட்டு நன்கு கலந்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
குறிப்பு: வெள்ளரிக்காய் உடலுக்கு குளிர்ச்சி. வெள்ளரிக்காயில் சாலட், தயிர்ப்பச்சடியும் தயாரிக்கலாம்.
புளிப் பொங்கல்
தேவையானவை: அரிசி – 250 கிராம், புளி – ஒரு நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் – 2, மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, எண்ணெய் – 100 மில்லி, கடுகு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: 1 பங்கு அரிசிக்கு 4 பங்கு என்ற விகிதத்தில் தண்ணீர் எடுத்து, புளியை கரைத்துக் கொள்ளவும். அதில் அரிசியைப் போட்டு, தேவையான உப்பு சேர்த்து குக்கரில் வைத்து, 5 விசில் வந்ததும் இறக்கவும். சாதம் வெந்து நன்கு குழைந்து இருக்கும். கடாயில் எண்ணெய்விட்டு… கடுகு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் போட்டு தாளித்து, வெந்த சாதத்துடன் கலந்து நன்கு மசிக்கவும்.
குறிப்பு: புளிப்பு, காரம் எல்லாம் சேர்ந்த இந்த புளிப் பொங்கலை, கருவுற்ற பெண்கள் மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
எண்ணெய் கத்திரிக்காய் மசாலா
தேவையானவை: சிறிய கத்திரிக்காய் – கால் கிலோ, மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, கரம் மசாலாத்தூள் – சிறிதளவு, எண்ணெய் – 100 மில்லி, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு எல்லாம் கலந்து கொள்ளவும். கத்திரிக்காயின் அடிப்பாகத்தை அரைப்பாகம் கத்தியால் கீறி, கலந்து வைத்திருக்கும் மசாலாவை அதனுள்ளே வைத்து அடைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கத்திரிக்காயைப் போட்டு வதக்கவும். கத்திரிக்காய் பொன்னிறமாக, இருபுறமும் வெந்த பிறகு எடுத்து பரிமாறவும்.
குறிப்பு: எண்ணெய் கத்திரி மசாலாவை, சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சுட்ட அப்பளம் இதற்கு சிறந்த காம்பினேஷன்.
பாசிப்பருப்பு கோசுமல்லி
தேவையானவை: பாசிப்பருப்பு – 100 கிராம், துருவிய கேரட் 1 கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, பொடியாக நறுக்கிய வெள்ளரித்துண்டுகள் – 1 கப், எலுமிச்சம்பழம் – 1 மூடி (பிழிந்து கொள்ளவும்), உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை 1 மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்து, துருவிய கேரட், வெள்ளரித்துண்டுகள், கொத்தமல்லி, உப்பு போட்டு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கினால்… கோசுமல்லி ரெடி!
குறிப்பு: இதை வெங்காயம், தக்காளி சேர்த்தும் தயாரித்துச் சாப்பிடலாம்.
பிடிகருணை மசியல்
தேவையானவை: பிடிகருணைக்கிழங்கு – கால் கிலோ, பச்சை மிளகாய் – ஒன்று, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, எலுமிச்சம்பழம் – ஒன்று, வெல்லம் (பொடித்தது) – 2 டீஸ்பூன், கடுகு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பிடிகருணையை குக்கரில் வைத்து ஒரு விசில் விட்டு இறக்கி, தோல் உரித்து நன்கு மசித்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய் தாளித்து, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் போட்டு, மசித்த கிழங்குடன் சேர்த்து, உப்பு சேர்த்து எலுமிச்சம் பழம் பிழிந்து கலக்கவும். கடைசியாக வெல்லத்தூள் சேர்த்து இறக்கவும்.
பரங்கிப் பச்சடி
தேவையானவை: சிவப்பு பரங்கிக் கீற்று – கால் கிலோ, தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 1, பொடித்த வெல்லம் – 4 டீஸ்பூன், புளித்தண்ணீர் – ஒரு சிறிய கப், கடுகு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – ஒன்று, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பரங்கிக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கி… உப்பு, புளித்தண்ணீர், வெல்லம் சேர்த்து வேகவிடவும். தேங்காய் துரு வல், பச்சை மிளகாயை அரைத்து சேர்க்கவும். காடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்துக் கொட்டவும்.
குறிப்பு: இந்தப் பச்சடி, பொரித்த குழம்புக்கு சிறந்த காம்பினேஷன். இதை எளிதாக தயாரிக்கலாம். பரங்கிக்காயுடன் வெல்லம், இஞ்சி, மிளகாய் சேர்த்து அரைத்து ஜாம் தயாரிக்கலாம்.
கேப்பை கஞ்சி
தேவையானவை: கேழ்வரகு மாவு – 4 டீஸ்பூன், பாசிப்பருப்பு – 6 டீஸ்பூன், சர்க்கரை – 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, பால் – 100 மில்லி.
செய்முறை: பாசிப்பருப்பை வறுத்து குழைவாக வேகவிடவும். கேழ்வரகு மாவுடன் பாலை சேர்த்துக் காய்ச்சி ஆற வைக்கவும். அதில் வேக வைத்த பாசிப்பருப்பு, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து அப்படியே சாப்பிடவும்.
குறிப்பு: இதே முறையில் உப்பு, சிறிய வெங்காயம் நறுக்கிப் போட்டு, மோர் விட்டு… பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து குடிக்கலாம். இதைக் குழந்தைகளும் குடிக்கலாம்.
கறிவேப்பிலைக் குழம்பு (பிரசவக் குழம்பு)
தேவையானவை: கறிவேப்பிலை – கைப்பிடி அளவு, கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், மிளகு 10, காய்ந்த மிளகாய் – 2, உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு – ஒரு டீஸ்பூன், புளி – ஒரு நெல்லிக்காய் அளவு, சீரகம் – ஒரு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் – 100 மில்லி, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு… மிளகு, கடலைப்பருப்பு, சீரகம், துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும். கறிவேப்பிலையை தனியாக வதக்கவும். பிறகு, எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, புளி சேர்த்து மிக்ஸியில் அரைத்து, உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் கலந்து கொள்ளவும். மீதமிருக்கும் எண்ணெயை கடாயில் விட்டு… கடுகு தாளித்து, அரைத்து வைத்திருக்கும் கலவையைப் போட்டுக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
குறிப்பு: இது பிரசவித்த பெண்களுக்கு கொடுக்கும் பத்தியக் குழம்பு. சூடான சாதத்தில் நெய் விட்டு, இந்தக் குழம்பு போட்டுச் சாப்பிடலாம். மற்றவர்களும் சாப்பிடலாம்.
பீர்க்கங்காய் கூட்டு
தேவையானவை: பீர்க்கங்காய் – 2, பாசிப்பருப்பு – ஒரு கப், தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பீர்க்கங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கவும். பாசிப்பருப்பை குழைவாக வேக விடவும். பீர்க்கங்காயை வேக விட்டு, வெந்த பருப்பை அதில் சேர்க்கவும். தேங்காய் துருவல், சீரகம், பச்சை மிளகாய் மூன்றையும் அரைத்து, உப்பு கலந்து சேர்க்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி, கொதிக்க விட்டு இறக்கவும்.
குறிப்பு: இது, தோசை – இட்லிக்கு மிகவும் நன்றாக இருக்கும்.
மரவள்ளி பொரியல் (ஆல்வள்ளிக்கிழங்கு)
தேவையானவை: மரவள்ளிக்கிழங்கு – அரை கிலோ, தேங்காய் துருவல் – 6 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை: மரவள்ளிக்கிழங்கை குக்கரில் வைத்து இரண்டு விசில் விட்டு இறக்கவும். தோல் உரித்து பொடியாக நறுக்கவும். காடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து… நறுக்கியதைப் போட்டு, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து, தேங்காய் துருவல் போட்டுக் கிளறி இறக்கவும்.
குறிப்பு: மரவள்ளிக்கிழங்கில் அடை செய்யலாம். வெல்லம் சேர்த்து வேக வைத்தும் சாப்பிடலாம். சிப்ஸ்கூட தயாரிக்கலாம்.
தக்காளி அடை
தேவையானவை: பழுத்த தக்காளி – 4, புழுங்கல் அரிசி – 200 கிராம், காய்ந்த மிளகாய் – 4, இஞ்சி – ஒரு சிறு துண்டு, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசியை ஊற வைத்து… இஞ்சி, காய்ந்த மிளகாய், தக்காளி சேர்த்து அடைமாவு பதத்தில் அரைக்கவும். கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிப் போடவும். உப்பு சேர்த்துக் கலந்து அடைகளாக வார்த்து, இருபுறமும் எண் ணெய்விட்டு, பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும்.
குறிப்பு: இட்லி மிளகாய்ப்பொடி இதற்கு சிறந்த காம்பினேஷன்.
முருங்கைக்கீரை பொரியல்
தேவையானவை: முருங்கைக்கீரை (உருவியது) – இரண்டு கைப்பிடி அளவு, பாசிப்பருப்பு – ஒரு கப், தேங்காய் துருவல் – 6 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – ஒன்று, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: முருங்கைக்கீரையையும், பாசிப்பருப்பையும் சேர்த்து, உப்பு போட்டு வேக விட்டு தண்ணீரை நன்கு வடிகட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, முருங்கைக்கீரையை போட்டு, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
குறிப்பு: முருங்கைக்கீரையில் இணையற்ற இரும்புச் சத்து உள்ளது.
புடலங்காய் பொரித்த குழம்பு
தேவையானவை: புடலங்காய் – கால் கிலோ, தேங்காய் துருவல் – 6 டீஸ்பூன், பாசிப்பருப்பு – ஒரு கப், மிளகு-சீரகம் – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – ஒன்று, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: புடலங்காயை பொடியாக நறுக்கவும். பாசிப்பருப்பை லேசாக வறுத்து வேக விடவும். மிளகு-சீரகம், காய்ந்த மிளகாயை வறுத்து, தேங்காய் துருவலை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். புடலங்காயுடன் தேவையான உப்பு சேர்த்து வேக விடவும். அரைத்த மசாலா மற்றும் வேகவைத்த பாசிப்பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, கொதித்துக் கொண்டிருக்கும் காய்-பருப்பு கலவையில் கொட்டி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு இறக்கவும்.
குறிப்பு: புடலங்காய், பத்தியச் சமையலுக்கு ஏற்றது.
கீரை வடை
தேவையானவை: உளுத்தம்பருப்பு – 200 கிராம், முளைக்கீரை (ஆய்ந்து, நறுக்கியது) – கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் – 2, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: உளுத்தம்பருப்பை ஊற வைத்து… பச்சை மிளகாய், உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும். நறுக்கிய கீரையை, மாவுடன் சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, பிசைந்து வைத்திருக்கும் மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும்.
குறிப்பு: இதற்குத் தொட்டுக் கொள்ள எல்லா வகை சட்னியும் ஏற்றது.
எள்ளுப்பொடி
தேவையானவை: எள் – 100 கிராம், உளுத்தம்பருப்பு – 50 கிராம், காய்ந்த மிளகாய் – 2, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: எள்ளை தனியாக வெறும் வாணலியில் வறுக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயையும் தனியாக வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, உப்பு போட்டு மிக்ஸியில் பொடிக்கவும்.
குறிப்பு: இதை, சூடான சாதத்துடன் நெய் விட்டு சாப்பிட ருசியாக இருக்கும். சுட்ட அப்பளம் இதற்கு நல்ல காம்பினேஷன்.
பரங்கி அசோகா
தேவையானவை: பாசிப்பருப்பு – ஒரு கப், பரங்கிக்காய் நறுக்கியது – ஒரு கப், நெய் – 100 மிலி, சர்க்கரை – 100 கிராம், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, வறுத்த முந்திரிப்பருப்பு – 10.
செய்முறை: பாசிப்பருப்பை வறுத்து வேக விடவும். பரங்கிக்காயை நெய் விட்டு வதக்கி அரைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு, வெந்த பருப்பு, அரைத்த பரங்கி விழுது இரண்டையும் சேர்த்துக் கிளறவும். சர்க்கரை சேர்த்து கெட்டியாகக் கிளறவும். ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்க்கவும்.
குறிப்பு: உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு சேர்த்தும் இதே முறையில் தயாரிக்கலாம்.
சத்துமாவு உருண்டை
தேவையானவை: சோளம் – 100 கிராம், கம்பு – 25 கிராம், தினை – 25 கிராம், கேழ்வரகு – 100 கிராம், கொள்ளு – 50 கிராம், பாசிப்பருப்பு – 25 கிராம், நெய் – 100 மிலி, ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, சர்க்கரை – 200 கிராம்.
செய்முறை: சோளம், கம்பு, தினை, கேழ்வரகு, கொள்ளு, பாசிப்பருப்பு எல்லாவற்றையும் தனித்தனியாக வறுத்து, ஒன்றாக சேர்த்து மிஷினில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையைத் தனியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவுடன் சர்க்கரைத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து… நெய்யை சூடாக்கி அதில் விட்டு உருண்டை பிடிக்கவும்.
குறிப்பு: சத்து மாவு உருண்டை, வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. பொட்டுக்கடலை, பார்லி, ஜவ்வரிசி, பாதாம் முந்திரி, பிஸ்தா, வேர்க்கடலை ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து, இதேபோல சத்துமாவு உருண்டை தயாரிக்கலாம்.
சுண்டைக்காய் பொரியல்
தேவையானவை: பிஞ்சு சுண்டைக்காய் – 200 கிராம், தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: சுண்டைக்காயை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி, உப்பு சேர்த்து வேக விட்டு, தண்ணீரை வடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெந்த சுண்டைக்காயைப் போட்டு, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
குறிப்பு: சுண்டைக்காய், பித்தத்தைப் போக்கும் மருத்துவ குணம் உடையது. பிஞ்சு சுண்டைக்காயில் விதை அதிகம் இருக்காது. எனவே, கசப்பு அதிகம் தெரியாது. முற்றிய சுண்டைக்காயை மோரில் ஊற வைத்து, உப்பு சேர்த்துக் காய வைத்து, எண்ணெயில் வறுத்துச் சாப்பிடலாம்.
ராகி மசாலா தோசை
தேவையானவை: அரிசி மாவு, ராகி மாவு – தலா 100 கிராம், உருளைக்கிழங்கு – 2, பெரிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் – தலா ஒன்று, கரம் மசாலாத்தூள், பொடியாக நறுக்கிய இஞ்சி – சிறிதளவு, கடுகு – கால் ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: ராகி மாவுடன் உப்பு, அரிசி மாவு சேர்க்கவும் அதில் கடுகு, இஞ்சி, பச்சை மிளகாய் தாளித்துக் கொட்டவும். தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து நன்கு மசித்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கி மசித்த உருளைக்கிழங்குடன் சேர்க்கவும். கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து கிளறவும். தோசையை வார்த்து இருபுறமும் எண்ணெய் விட்டு, தோசையின் நடுவில் உருளைக்கிழங்கு மசாலா வைத்து இரண்டாக மடிக்கவும்.
குறிப்பு: இதை ரோல் மாதிரியும் சாப்பிடலாம். கேரட் துருவல் சேர்க்கலாம். இதற்கு சைட் டிஷ் தேவை இல்லை.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு சுகியன்
தேவையானவை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு – கால் கிலோ, வெல்லம் – 200 கிராம், கடலைப் பருப்பு – ஒரு கப், தேங்காய் துருவல் – ஒரு கப், ஏலக்காய்த் தூள் – சிறிதளவு, மைதா மாவு – ஒரு கப், கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை, எண்ணெய் – தேவை யான அளவு.
செய்முறை: சர்க்கரைவள்ளிக் கிழங்கை குக்கரில் வேக விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். கடலைப்பருப்பை வறுத்து, ஒரு மணி நேரம் ஊற வைத்து, வேக விடவும். வெந்தபருப்புடன், தேங்காய் துருவல், பொடித்த வெல்லம் சேர்த்து கெட்டியாக அரைத்து, சர்க்கரைவள்ளிக் கிழங்கையும் மசித்து சேர்த்துக் கிளறினால் பூரணம் ரெடி. இதனுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும். மைதா மாவை கேசரி பவுடருடன் சேர்த்து கெட்டியாகக் கரைத்து, அதில் இந்த உருண்டைகளை தோய்த்து, எண்ணெயில் போட்டு, மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
குறிப்பு: பண்டிகை நாட்களில் செய்யக்கூடிய வித்தியாசமான ஸ்வீட் இது.
கொத்தவரங்காய் மோர்க் கூட்டு
தேவையானவை: கொத்தவரங்காய் – 100 கிராம், தயிர் – ஒரு கப், பச்சை மிளகாய் – ஒன்று, தேங்காய் துருவல் – 6 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கொத்தவரங்காயை நறுக்கி உப்பு சேர்த்து வேக விட்டு தண்ணீரை வடிகட்டவும். பச்சை மிளகாய், தேங்காய் துருவல், சீரகம் சேர்த்து அரைத்து, தயிரில் கலக்கவும். இதை வேக வைத்த கொத்தவரங்காயில் விடவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, கொத்தவரங்காய் கலவையில் கொட்டி, அடுப்பில் வைத்து, கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு, ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
முருங்கை மசாலா பொரியல்
தேவையானவை: முருங்கைக்காய் – 2, பெரிய வெங்காயம் – ஒன்று, தக்காளி – 2, கத்திரிக்காய் – 4, கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு,
செய்முறை: முருங்கைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி… உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். தண்ணீரை வடிகட்டவும். வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் நறுக்கவும். கத்திரிக்காயும் சிறு துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கத்திரிக்காய் போட்டு கரம் மசாலாத்தூள், வெங்காயம், மிளகாய்த்தூள் போட்டு சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். பின்பு தக்காளி நறுக்கிப் போட்டு வதக்கி, வேக வைத்த முருங்கைத் துண்டுகளையும் போட்டு 10 நிமிடம் கிளறி இறக்கவும்.
குறிப்பு: சூடான சாதத்தில் இந்த பொரியலைப் போட்டு பிசைந்து சாப்பிடலாம். சைட் டிஷ் தேவை இல்லை.



தினம் ஒரு கலந்த சாதம்!!!

30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம் !!!
இதாம்மா ஃபாஸ்ட் ஃபுட்
தினம் தினம் குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் என்ன சாதம் வைத்துக் கொடுப்பது என்பதுதான் பல அம்மாக்களின் கவலை.
பிள்ளைகள் வீட்டில் இருக்கும்போது வெரைட்டி காட்டி சந்தோஷப்படும் அம்மாக்களால், காலை நேர பரபரப்பில் அப்படி ஜமாய்க்க முடியாது. அதிலும் வேலைக்குப் போகும் அம்மாக்கள் என்றால் சமையலுக்காக மெனக்கெடுவதை யோசித்துக்கூடப் பார்க்க முடியாது. எல்லோருக்கும் செய்வதையே குழந்தைகளுக்கும் கொடுத்தனுப்புவார்கள். அது, இரண்டு ஸ்பூன் அளவுக்கு மட்டுமே காலியாகி, கனத்த பாக்ஸாகவே திரும்பும்போது, அம்மாக்களின் இதயமும் கனத்துப் போகும்.
இந்தப் பிரச்னைக்கு சுலபத் தீர்வு, கலந்த சாதங்கள்! ‘‘நீங்க சொல்றது சரிதான். ஆனா அதிலயும் ஒரு பிரச்னை இருக்கே.. நாலஞ்சு வகையையே திரும்பத் திரும்பச் செஞ்சு கொடுத்தா ‘போர்’னு பிள்ளைங்க முகத்தை சுளிக்க ஆரம்பிச்சுடறாங்களே..’’ என்கிறீர்களா? அந்தக் கவலை இனி வேண்டாம்.
முப்பது நாட்களுக்கும் நீங்கள் விதவிதமான கலந்த சாதங்களை செய்து அசத்த, இதோ முப்பதுவிதமான ரெசிபிக்களை தருகிறார் ‘சமையல் திலகம்’ ரேவதி சண்முகம்.
திகட்டத் திகட்ட கல்கண்டு சாதம், சப்புக் கொட்ட நெல்லிக்காய் சாதம், உடலுக்கு வலு சேர்க்க உளுந்து பொடி சாதம், கலக்கல் காளான் சாதம்… என்று புதுமையான ரெசிபிக்கள் மட்டுமல்ல; நன்கு பரிச்சயமான தயிர், தக்காளி சாதங்களும்கூட இவரது ஸ்பெஷல் பக்குவத்தில் மாறுபட்ட சுவைகளோடு இங்கு வரிசை கட்டியிருக்கின்றன.
வெரைட்டிக்கு பஞ்சமில்லை. சுலபமாக சமைக்கலாம்.சத்தானதும்கூட. முக்கியமாக, பெரியவர்களும் ‘வேண்டாம்’ என்று சொல்லாமல் ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள்.
படித்த சூட்டோடு சமைத்து பரிமாறுங்கள். ‘உங்க கை பக்குவத்துக்கு ஈடு இணையே இல்லை’ என்று வீடே கொண்டாடும்!
கோவைக்காய் சாதம்
தேவை:
உதிராக வடித்த சாதம் 2 கப், பெரிய வெங்காயம் 1, கோவைக் காய் 100 கிராம், தேங்காய்த் துருவல், மிளகாய்த் தூள் தலா 2 டீஸ்பூன், எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன், கடலைப் பருப்பு 1 டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு, கறிவேப்பிலை சிறிதளவு.
செய்முறை:
வெங்காயம், கோவைக்காயை மெல்லியதாக நறுக்குங்கள். வாணலியில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு ஆகியவற்றை தாளித்து, வெங்காயம், தேங்காயை வதக்குங்கள். பச்சை வாடை போனதும், கோவைக் காய், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து காய் வேகும் வரை வதக்கி, கறிவேப்பிலை, எலுமிச்சம் சாறு சேர்த்து இறக்குங்கள்.
இந்தக் கலவையோடு சாதத்தைக் கலந்து பரிமாறுங்கள்.
கறிவேப்பிலை சாதம்
தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன், கடலைப் பருப்பு 2 டீஸ்பூன், எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், நெய் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.
பொடிக்க: மிளகு, கசகசா தலா 1 டீஸ்பூன், சீரகம் 2 டீஸ்பூன், முந்திரி 4, கறிவேப்பிலை 1 கப், தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் 6.
செய்முறை: கறிவேப்பிலையை சுத்தம் செய்து வெறும் வாணலியில் சிறிது சிறிதாகப் போட்டு வறுத்தெடுங்கள். பிறகு மிளகு, சீரகம், கசகசா, மிளகாய் வற்றல், முந்திரி, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வறுத்தெடுத்து ஆறியதும் கறிவேப்பிலை உட்பட வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பொடித்து வையுங்கள்.
எண்ணெய் மற்றும் நெய்யைக் காயவைத்து கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு ஆகியவற்றை தாளியுங்கள். சாதத்தில், பொடித்த பொடி, உப்பு, தாளிதக் கலவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கலக்குங்கள்.
மும்பை சாதம்
தேவை: பச்சரிசி அரை கப், தோலுடன் உடைத்த பாசிப் பருப்பு 1 கப், மஞ்சள் தூள் 1 சிட்டிகை, பச்சை மிளகாய் 2, நெய் 2 டேபிள் ஸ்பூன், கடுகு, சீரகம் தலா அரை டீஸ்பூன், பெருங்காயத் தூள் ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவைக்கு.
செய்முறை: குக்கரில் அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய், மஞ்சள் தூள், உப்பு மற்றும் நான்கு கப் தண்ணீர் சேர்த்து வேக வையுங்கள். ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி ஐந்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.
பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள்.
வாணலியில், மீதமுள்ள நெய்யை ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றை தாளித்து மிளகாயை சேர்த்து வதக்குங்கள்.
இந்தக் கலவையை, சாதக் கலவையோடு சேர்த்துக் கலந்தால் மும்பை சாதம் தயார்.
கதம்ப சாதம்
தேவை: பச்சரிசி, துவரம் பருப்பு தலா 1 கப், காய்கறி கலவை (கேரட், பீன்ஸ், கோஸ், பீட்ரூட்…) 2 கப், சின்ன வெங்காயம் 10, தக்காளி 5, சாம்பார் தூள் 2 டேபிள் ஸ்பூன், புளி கரைசல் அரை கப், பெருங்காயம், மஞ்சள் தூள் தலா அரை டீஸ்பூன், கடுகு, உளுந்து தலா 1 டீஸ்பூன், எண்ணெய், நெய் தலா 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.
செய்முறை: காய்களை விரல் நீளத் துண்டுகளாகவும், வெங்காயம், தக்காளியை பொடியாகவும் நறுக்குங்கள். அரிசி, பருப்புடன் ஆறு கப் தண்ணீர், காய்கறிகள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வேக வையுங்கள். இரண்டு விசில் வந்ததும், மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.
வாணலியில் எண்ணெய், நெய்யை சூடாக்கி கடுகு, உளுந்து தாளித்து, வெங்காயத்தை வதக்குங்கள். பிறகு தக்காளி, சாம்பார்தூளைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கி, புளி கரைசல், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு, ஒரு கப் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, பருப்பு சாதக் கலவையோடு சேர்த்துக் கலக்குங்கள்.
எள் சாதம்
தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், கடுகு 1 டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, நெய் 1 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.
பொடிக்க: எள் 2 டேபிள் ஸ்பூன், உளுந்து 1 டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் 8, தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 2 டீஸ்பூன், பெருங்காயம் சிறு துண்டு.
செய்முறை: எள்ளை வெறும் வாணலியில் போட்டு, பொரியும்படி வறுத்தெடுங்கள். எண்ணெயில் பெருங்காயத்தைப் பொரித்து பிறகு மிளகாய், உளுந்து, தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து சிவக்க வறுத்தெடுங்கள். எள் உட்பட, வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நைஸாக பொடித்து வையுங்கள்.
நெய்யில் கடுகு, கறிவேப்பிலையை தாளியுங்கள்.
சாதத்தில் எள் பொடி, உப்பு ஆகியவற்றைத் தூவி, கடுகு தாளிதத்தை சேர்த்துக் கலக்குங்கள்.
மாங்காய் இஞ்சி சாதம்
தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், தோல் நீக்கி துருவிய மாங்காய் இஞ்சி துருவல் அரை கப், மஞ்சள்தூள் அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் 4, எலுமிச்சை சாறு, எண்ணெய் தலா 2 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன்,கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவைக்கு.
பொடிக்க: உளுந்து 1 டேபிள் ஸ்பூன், கடலைப் பருப்பு அரை டேபிள் ஸ்பூன், தனியா 2 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய் 3, எண்ணெய் 3 டீஸ்பூன்.
செய்முறை: ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில், மாங்காய், இஞ்சி துருவல், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு ஆகியவற்றை வதக்கி, கரகரப்பாக அரைத்தெடுங்கள். பொடிக்கக் கூறப்பட்டுள்ளவற்றை சிவக்க வறுத்து பொடியுங்கள். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலையை தாளியுங்கள்.
சாதத்தில், அரைத்த விழுது, பொடித்து வைத்துள்ள பொடி, உப்பு, தாளிதக் கலவை, எலுமிச்சம் சாறு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்குங்கள்.
ஸ்பெஷல் எலுமிச்சம் சாதம்
தேவை: பச்சரிசி 2 கப், பால் 1 கப், எலுமிச்சம் பழச்சாறு 2 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் 2 டீஸ்பூன், வேக வைத்த கொண்டைக் கடலை கால் கப், கடுகு 1 டீஸ்பூன், உளுந்து, கடலைப் பருப்பு தலா 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் 3, பெருங்காயம் அரை டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் 3, இஞ்சி 1 துண்டு, கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவைக்கு.
செய்முறை: அரிசியுடன் பால், மூன்று கப் தண்ணீர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து உதிராக வேக வையுங்கள். பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை இவற்றை ஒன்றிரண்டாக நசுக்குங்கள். எண்ணெயில் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்தெடுங்கள். பிறகு பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள், உப்பு, எலுமிச்சம் பழச்சாறு, கொண்டைக் கடலை ஆகியவற்றைச் சேர்த்து கிளறி இறக்குங்கள்.
இந்தக் கலவையோடு சாதத்தை சேர்த்துக் கிளறுங்கள்.
புதினா கத்தரிக்காய் சாதம்
தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், பச்சை கத்தரிக்காய் 8, பெரிய வெங்காயம் 1, தக்காளி 2, புளி கரைசல் 1 டேபிள் ஸ்பூன், கடுகு, சீரகம், மஞ்சள் தூள் தலா அரை டீஸ்பூன், நெய் 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.
அரைக்க: தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், புதினா, மல்லி தலா அரை கட்டு, பச்சை மிளகாய் 4, பூண்டு 6 பல்.
செய்முறை: அரைக்கக் கூறப்பட்டுள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து நைஸாக அரையுங்கள். வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய் இவற்றை நீளவாக்கில், மெல்லியதாக நறுக்குங்கள். எண்ணெய், நெய்யைக் காயவைத்து கடுகு, சீரகத்தை தாளித்து வெங்காயம், கத்தரிக்காயைச் சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள் தூவி ஐந்து நிமிடம் வதக்குங்கள். பிறகு, அரைத்த விழுது, தக்காளி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பச்சை வாடை போக வதக்கி,புளி கரைசலைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்குங்கள்.
இந்தக் கலவையை சாதத்தோடு சேர்த்துக் கிளறுங்கள்.
தேங்காய்ப்பால் தக்காளி சாதம்
தேவை: பச்சை பட்டாணி அரை கப், பச்சரிசி 2 கப், தேங்காய்ப் பால் 2 கப், தக்காளி 6, பச்சை மிளகாய் 2, மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு, கடுகு, சீரகம் தலா அரை டீஸ்பூன், நெய் 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை: அரிசியை சுத்தம் செய்து அதனுடன், தேங்காய்ப் பால், மூன்று கப் தண்ணீர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து உதிராக வேக வையுங்கள். தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள். நெய்யைக் காய வைத்து கடுகு, சீரகம் தாளித்து பச்சை மிளகாயை வதக்குங்கள். பிறகு தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து பட்டாணி வேகும் வரை கிளறி இறக்குங்கள்.
சாதத்தில் தக்காளி கலவையை சேர்த்துக் கலக்குங்கள்.
புளிப்பில்லாத தக்காளி என்றால் ஒரு மூடி அளவு எலுமிச்சம்பழச் சாறு சேர்க்கலாம்.
பிஸிபேளா பாத்
தேவை: அரிசி, துவரம் பருப்பு தலா 1 கப், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், நெய் 1 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து தலா 1 டீஸ்பூன், சின்ன வெங்காயம் 1 கப், தக்காளி 4, பச்சை பட்டாணி அரை கப், வேகவைத்து வழித்தெடுக்கப்பட்ட முருங்கைக்காய் விழுது அரை கப், புளி எலுமிச்சை அளவு, கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவைக்கு.
அரைக்க: தனியா 2 டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் 8, கடலைப் பருப்பு 1 டேபிள் ஸ்பூன், வெந்தயம் அரை டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா 1, கசகசா 2 டீஸ்பூன், எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை: அரிசி, பருப்புடன் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், உப்பு மற்றும் ஆறு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வையுங்கள். இரண்டு விசில் வந்ததும், மிதமான தீயில் பத்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள். அரைக்கக் கூறப்பட்டுள்ளவற்றை பொன்னிறமாக வறுத்துப் பொடியுங்கள். புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். எண்ணெய் மற்றும் நெய்யைக் காயவைத்து கடுகு, உளுந்தை தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு தக்காளி, பட்டாணி சேர்த்து வதக்குங்கள். பிறகு புளி கரைசலைச் சேர்த்து, பச்சை வாடை போகக் கொதித்ததும் பொடித்து வைத்துள்ள பொடியைச் சேர்த்து, மேலும் இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து முருங்கை விழுதை சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.
இதனை வெந்த அரிசி பருப்பு கலவையுடன் கலக்குங்கள்.
கல்கண்டு சாதம்
தேவை: பச்சரிசி 1 கப், பால் 1 லிட்டர், கல்கண்டு 1 கப், ஏலக்காய்த் தூள் அரை டீஸ்பூன், கிராம்பு 1, மில்க்மெய்ட் 3 டேபிள் ஸ்பூன், நெய் கால் கப், முந்திரி 10, பாதாம் 8, வெள்ளரி விதை 1 டேபிள் ஸ்பூன், சார பருப்பு அரை டேபிள் ஸ்பூன், கிராம்பு 1, ஜாதிபத்ரி சிறிதளவு.
செய்முறை: அரிசியை ஒரு கப் தண்ணீர், ஒரு லிட்டர் பால் சேர்த்து மிதமான தீயில் வேக வையுங்கள். அடிப் பிடிக்காமல் இருக்க, அவ்வப்போது கிளறிவிடுங்கள். அரிசி வெந்து குழைந்ததும் அதில் கல்கண்டை பொடித்துச் சேர்த்து மேலும் பத்து நிமிடங்கள் கிளறுங்கள்.
பாதாமை மெல்லிதாக சீவுங்கள். ஏலம், கிராம்பு, ஜாதிபத்ரி ஆகியவற்றை லேசாக வறுத்துப் பொடித்து வையுங்கள். நெய்யைக் காயவைத்து முந்திரியை வறுத்து, வெள்ளரி விதை, சார பருப்பு சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.
கல்கண்டு சாதத்தில் பாதாம், ஏலம், கிராம்பு, ஜாதிபத்ரி பொடி, முந்திரி, வெள்ளரிவிதை கலவையைச் சேர்த்துக் கிளறுங்கள்.
சீரக சாதம்
தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப் (பாசுமதி அரிசியாக இருந்தால் கூடுதல் சுவை தரும்), முந்திரி 10, சீரகம் 1 டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, நெய் 1 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.
செய்முறை: நெய்யை சூடாக்கி சீரகத்தைத் தாளியுங்கள். பிறகு முந்திரியைச் சேர்த்து இளம் சிவப்பாக வறுத்து, கறிவேப்பிலை சேர்த்துப் பொரித்து இறக்குங்கள்.
சாதத்தில், சீரகக் கலவை, தேவையான உப்பு சேர்த்துக் கலக்கினால் சீரக சாதம் ரெடி.
ஆந்திரா புளியோதரை
தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், புளி சிறிய எலுமிச்சை அளவு, பச்சை மிளகாய் 2, கறிவேப்பிலை சிறிது, மஞ்சள் தூள் அரை டீஸ்பூன், உப்பு தேவைக்கு, வெல்லத் துருவல் 2 டீஸ்பூன், நல்லெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், கடுகு ஒன்றரை டீஸ்பூன், உளுந்து, கடலைப் பருப்பு தலா 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் 4, பெருங்காயம் அரை டீஸ்பூன்.
செய்முறை: சாதம் சூடாக இருக்கும்போதே அதை குவித்தாற்போல வைத்து நடுவில் குழிவாக்குங்கள். அதில் பச்சை மிளகாய் (இரண்டாகக் கீறி), கறிவேப்பிலை, மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஆகியவற்றைப் போட்டு மூடி வையுங்கள். புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வையுங்கள்.
மீதமுள்ள எண்ணெயில் 1 டீஸ்பூன் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து, புளி கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்து பச்சை வாடை போக கொதிக்க வையுங்கள். பிறகு வெல்லம் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறக்குங்கள்.
மீதமுள்ள கடுகை அரைத்து வையுங்கள்.
சாதத்தில் புளி கலவை, அரைத்து வைத்துள்ள கடுகு விழுது ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள்.
மாங்காய் சாதம்
தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், புளிப்பான மாங்காய் துருவல் 1 கப், பச்சை மிளகாய் 6, பெருங்காயம் 1 டீஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து, தலா அரை டீஸ்பூன், மிளகாய் வற்றல் 3, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு.
செய்முறை: ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் மாங்காய்த் துருவல் மற்றும் மிளகாயை வதக்கி எடுத்து கரகரப்பாக அரையுங்கள்.
மீதமுள்ள எண்ணெயில், கடுகு, உளுந்து, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றைத் தாளித்து, மஞ்சள் தூள் சேர்த்து இறக்குங்கள். இதனை மாங்காய் கலவையோடு சேர்த்து மேலும் ஒரு சுற்று அரைத்தெடுங்கள்.
சாதத்தில், அரைத்த விழுது, தேவையான உப்பு சேர்த்துக் கலக்குங்கள்.
தோசைக்காய் சாதம்
தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், தோசைக் காய் 1, பச்சை மிளகாய் 6, புளி சிறிய எலுமிச்சை அளவு, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், மிளகாய் வற்றல் 3, பெருங்காயம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.
செய்முறை: தோசைக்காயின் தோல், விதைகளை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்குங்கள். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வையுங்கள். ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் தோசைக் காயை வதக்குங்கள். பிறகு பச்சை மிளகாய், புளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மேலும் சிறிது வதக்கி இறக்குங்கள். ஆறியதும் கரகரப்பாக அரையுங்கள்.
மீதமுள்ள எண்ணெயில் கடுகு, மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை தாளியுங்கள்.
சாதத்தில், அரைத்த விழுது, உப்பு, கடுகு தாளிதக் கலவை ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்குங்கள்.
பூண்டு சாதம்
தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், சின்ன வெங்காயம் அரை கப், பூண்டு 1 கப், இஞ்சி 1 துண்டு, கறிவேப்பிலை சிறிதளவு, வறுத்துப் பொடித்த மிளகுத் தூள் 2 டீஸ்பூன், சீரகத் தூள் 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், கடுகு, சீரகம் தலா அரை டீஸ்பூன், நெய் 2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் 4, உப்பு தேவைக்கு.
செய்முறை: வெங்காயம், பூண்டு, இஞ்சி இவற்றின் தோலை நீக்கிவிட்டுப் பொடியாக நறுக்குங்கள். நெய்யில் கடுகு, சீரகம், மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்து வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கி, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.
இந்த பூண்டுக் கலவையில் சாதத்தைச் சேர்த்து, தேவையான உப்பு தூவிக் கிளறுங்கள்.
மாங்காய் மசாலா சாதம்
தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், புளிப்பான மாங்காய் 1, மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், கடுகுத் தூள் 2 டீஸ்பூன், நல்லெண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், கடுகு 1 டீஸ்பூன், நெய் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு.
செய்முறை: மாங்காயைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயுடன் மாங்காய், பொடி வகைகள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்குங்கள்.
நெய்யில் கடு-கை பொரித்தெடுங்கள்.
சூடான சாதத்தில் தாளிதக் கலவை மற்றும் மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்குங்கள்.
சோயா சாதம்
தேவை: பச்சரிசி 2 கப், சோயா உருண்டைகள் அரை கப், பெரிய வெங்காயம் 2, இஞ்சி,பூண்டு விழுது 2 டீஸ்பூன், மிளகாய்த் தூள் 4 டீஸ்பூன், தயிர் அரை கப், கரம் மசாலாத் தூள் 1 டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன், எண்ணெய், நெய் தலா 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.
செய்முறை: சோயாவை கொதி நீரில் ஐந்து நிமிடம் ஊற வைத்து பிறகு பச்சைத் தண்ணீரில் இரண்டு, மூன்று முறை நன்றாகக் கழுவுங்கள். வெங்காயத்தை நீளவாக்கில், சன்னமாக நறுக்குங்கள்.
குக்கரில் நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, சீரகத்தை தாளித்து, வெங்காயத்தை வதக்குங்கள். பிறகு இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாடை போக வதக்குங்கள். பிறகு உப்பு, தயிர், மிளகாய்த் தூள், கரம் மசாலா, சோயா ஆகியவற்றைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வையுங்கள். பிறகு அரிசி மற்றும் நான்கு கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வையுங்கள்.
ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி, இரண்டு நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.
அரை நெல்லிக்காய் சாதம்
தேவை: பச்சரிசி 2 கப், அரை நெல்லிக்காய் அரை கப், பச்சை மிளகாய் 10, தேங்காய்த் துருவல் 2 டீஸ்பூன், பெருங்காயம் 1 டீஸ்பூன், கடுகு, உளுந்து, மஞ்சள்தூள் தலா அரை டீஸ்பூன், எண்ணெய் 4 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவைக்கு.
செய்முறை: அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடியுங்கள். நெல்லிக்காய்களை சுத்தம் செய்து கொட்டைகளை நீக்குங்கள். 1 டேபிள் ஸ்பூன் எண்ணெயில் பச்சை மிளகாய் மற்றும் தேங்காய்த் துருவலைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு, நெல்லிக்காய், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி நைஸாக அரைத்தெடுங்கள்.
மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை தாளியுங்கள்.
சாதத்தில், நெல்லிக்காய் விழுது, கடுகு தாளிதம் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள்.
கொண்டைக்கடலை சாதம்
தேவை: பச்சரிசி 2 கப், சிறிய கருப்பு கொண்டைக் கடலை அரை கப், தேங்காய்ப் பால் 2 கப், பெரிய வெங்காயம் 2, தக்காளி 3, இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், தனியாத் தூள், கரம் மசாலா தலா 1 டீஸ்பூன், எண்ணெய், நெய் தலா 1 டேபிள் ஸ்பூன், பிரிஞ்சி இலை 2, உப்பு தேவைக்கு.
செய்முறை: கடலையை முதல் நாளே ஊற வைத்து மறுநாள் வேகவைத்து எடுத்து வையுங்கள்.
வெங்காயம், தக்காளியை மெல்லியதாக நறுக்குங்கள்.
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய்யை காயவைத்து, பிரிஞ்சி இலையை தாளியுங்கள். பிறகு வெங்காயம், தக்காளியை வதக்கி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியாத் தூள், கரம் மசாலாத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து பச்சை வாடை போக வதக்குங்கள். பிறகு தேங்காய்ப் பால், இரண்டு கப் தண்ணீர், தேவையான உப்பு, வேக வைத்த கடலை, அரிசி ஆகியவற்றைச் சேர்த்து மூடி வையுங்கள். ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி, மேலும் இரண்டு நிமிடங்கள் வைத்திருந்து இறக்குங்கள்.
ஸ்பெஷல் தக்காளி சாதம்
தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், பெரிய வெங்காயம் 2, தக்காளி 6, பச்சை மிளகாய் 3, மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, மல்லித்தழை தலா சிறிதளவு, கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன், நெய் 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.
பொடிக்க (முதல் வகை): பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா 2, கசகசா 2 டீஸ்பூன், முந்திரி 6, எண்ணெய் 1 டீஸ்பூன்.
மற்றொரு வகை பொடிக்கு: தனியா, துவரம் பருப்பு தலா 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் 4, கொப்பரை தேங்காய்த் துருவல் 3 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 1 டீஸ்பூன்.
செய்முறை: பொடிக்கக் கூறப்பட்டுள்ளவற்றை (இரண்டு வகையையும் தனித்தனியாக) வறுத்து பொடித்து வையுங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். மிளகாயை இரண்டாக கீறி வையுங்கள்.
வாணலியில் எண்ணெய், நெய்யைக் காய வைத்து கடுகு, உளுந்தை தாளியுங்கள். பிறகு வெங்காயம், மிளகாய், தக்காளி ஆகியவற்றை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி இறக்குங்கள். சாதத்தில், பொடி வகையை தூவி, தக்காளி கலவை மற்றும் கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்துக் கிளறுங்கள்.
காய்கறி சாதம்
தேவை: பச்சரிசி 2 கப், காய்கறி கலவை (கேரட் பீன்ஸ், பட்டாணி) 1 கப், பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா 2, பெரிய வெங்காயம் 3, தக்காளி 3, இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன், தயிர் அரை கப், புதினா, மல்லி தலா அரை கட்டு, பச்சை மிளகாய் 3, மிளகாய் தூள் 1 டீஸ்பூன், உப்பு தேவைக்கு, நெய் 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்.
செய்முறை: குக்கரில் எண்ணெய், நெய்யைச் சூடாக்கி பட்டை, லவங்கம், ஏலக்காய், வெங்காயம் சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்குங்கள். பின்னர் காய்களைச் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு விழுது, தயிர், மிளகாய், மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கி ஆறு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வையுங்கள். பிறகு அரிசியைச் சேர்த்து கிளறி மூடி வையுங்கள்.
ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி பத்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.
உளுந்து பொடி சாதம்
தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், எலுமிச்சை சாறு 2 டேபிள் ஸ்பூன், கடுகு 1 டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, நெய் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.
பொடிக்க: முழு உளுந்து 4 டேபிள் ஸ்பூன், துவரம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன், கொப்பரைத் தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் 8, பெருங்காயத் தூள் அரை டீஸ்பூன், எண்ணெய் 2 டீஸ்பூன்.
செய்முறை: பொடிக்கக் கூறப்பட்டுள்ளவற்றை, மிதமான தீயில் சிவக்க வறுத்துப் பொடியுங்கள். நெய்யில் கடுகு, கறிவேப்பிலையை தாளித்துப் பொடியோடு சேர்த்துக் கலக்குங்கள்.
சாதத்தில், பொடித்து வைத்துள்ள பொடி, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்துக் கிளறுங்கள்.
வெந்தயக்கீரை சாதம்
தேவை: பச்சரிசி 2 கப், வெந்தயக்கீரை 2 கட்டு, தக்காளி 3, வெங்காயம் 2, இஞ்சி 1 துண்டு, பூண்டு 10 பல், பச்சை மிளகாய் 4, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் தலா அரை டீஸ்பூன், சீரகத்தூள், தனியாத்தூள், கரம் மசாலா தலா 1 டீஸ்பூன், தேங்காய்ப் பால் ஒரு கப், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.
செய்முறை: கீரையைச் சுத்தம் செய்யுங்கள். வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள். இஞ்சி, பூண்டு, மிளகாய் ஆகியவற்றை நசுக்குங்கள். எண்ணெயில் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாயை வதக்குங்கள். பிறகு வெங்காயம், கீரை, தக்காளி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்குங்கள். பிறகு மீதமுள்ள மசாலாத்தூள்கள் அனைத்தையும் சேர்த்து வதக்குங்கள்.
பச்சை வாடை போனதும், இந்தக் கலவையோடு தேங்காய்ப் பால், நான்கு கப் தண்ணீர், தேவையான உப்பு, அரிசி ஆகியவற்றைச் சேர்த்து வேக வையுங்கள்.
ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி, இரண்டு நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.
ஸ்பெஷல் தயிர் சாதம்
தேவை: பச்சரிசி 2 கப், பால் அரை கப், புளிக்காத புதிய தயிர் இரண்டரை கப், இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்தரைத்த விழுது 2 டீஸ்பூன், வெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், பெருங்காயம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித் தழை சிறிது, கடுகு 1 டீஸ்பூன், மிளகாய் வற்றல் 3, பொடியாக நறுக்கிய முந்திரி 2 டேபிள் ஸ்பூன், திராட்சை 15, எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.
செய்முறை: சாதத்தை குழைவாக வேக வையுங்கள். சாதம் சூடாக இருக்கும்போதே அதனுடன் உப்பு, வெண்ணெய், பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, பால் மற்றும் கறிவேப்பிலை, மல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்குங்கள்.
எண்ணெயில் கடுகு, மிளகாய், முந்திரி, திராட்சை (திராட்சை சிவக்கக் கூடாது) ஆகியவற்றை தாளியுங்கள்.
சாதத்தில் தாளிதக் கலவை, தயிரைக் கலக்குங்கள்.
கத்தரி மொச்சை சாதம்
தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், கத்தரிக்காய் 6, காய்ந்த மொச்சை கால் கப், பெரிய வெங்காயம் 2, தக்காளி 3, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு, பிரிஞ்சி இலை 2, எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்.
அரைக்க: தேங்காய் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் 1 டீஸ்பூன், தனியாத் தூள் அரை டீஸ்பூன், இஞ்சி 1 துண்டு, பூண்டு 3 பல், சோம்பு அரை டீஸ்பூன்.
செய்முறை: மொச்சைக் கொட்டையை முதல் நாளிரவே ஊற வைத்து, மறுநாள் சிறிதளவு உப்பு சேர்த்து வேக வையுங்கள். கத்தரிக்காய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை மெல்லியதாக நறுக்குங்கள். அரைக்கக் கூறப்பட்டுள்ளவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்தெடுங்கள்.
எண்ணெயில், பிரிஞ்சி இலையைத் தாளித்து வெங்காயம், கத்தரிக்காயை மஞ்சள் தூள் சேர்த்து வதக்குங்கள். காய் முக்கால் பதம் வெந்ததும், தக்காளி, அரைத்த விழுது, மொச்சைக் கொட்டை, தேவையான உப்பு சேர்த்து சுருளக் கிளறி இறக்குங்கள்.
சாதத்துடன் இந்த விழுதைச் சேர்த்துக் கலக்குங்கள்.
கொத்துமல்லி சாதம்
தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, நெய் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு.
அரைக்க: மல்லித் தழை 2 கட்டு, மிளகாய் வற்றல் 10, உளுந்து 1 டேபிள் ஸ்பூன், பெருங்காயம் சிறு துண்டு, புளி சிறு எலுமிச்சை அளவு, எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.
செய்முறை: மல்லித் தழையை சுத்தம் செய்யுங்கள். எண்ணெயில் பெருங்காயம், மிளகாய் வற்றலை வறுத்தெடுங்கள். பிறகு உளுந்தை வறுத்து எடுத்து தனியே வையுங்கள். பிறகு மல்லித் தழையை வதக்குங்கள்.
இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து, அதனுடன் உப்பு, புளி சேர்த்து நைஸாக அரைத்தெடுங்கள்.
நெய்யில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளியுங்கள்.
சாதத்தில், அரைத்த விழுது, தாளிதக் கலவை, உப்பு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கிளறுங்கள்.
காய்கறி எலுமிச்சம் சாதம்
தேவை: பச்சரிசி 2 கப், எலுமிச்சம் பழம் 2, கேரட் 1, பீன்ஸ் 10, காலிஃப்ளவர் 1 துண்டு, பட்டாணி அரை கப், இஞ்சி 1 துண்டு, பச்சை மிளகாய் 3, மஞ்சள் தூள் 1 டீஸ்பூன், பெருங்காயத் தூள் 1 டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, கடுகு அரை டீஸ்பூன், உளுந்து 1 டீஸ்பூன், கடலைப் பருப்பு 2 டீஸ்பூன், முந்திரி 10, எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.
செய்முறை: அரிசியை சிறிதளவு உப்பு சேர்த்து உதிராக வேக வையுங்கள். காய்கள், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள்.
எண்ணெயில் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, முந்திரி ஆகியவற்றைத் தாளித்து காய்கறிகள், இஞ்சி, மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, சிறிதளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். காய்கறிகள் வெந்ததும், எலுமிச்சம் பழச் சாறு சேர்த்து இறக்குங்கள்.
இந்தக் கலவையை சாதத்தில் கொட்டி, உப்பு சேர்த்துக் கிளறுங்கள்.
கூட்டாஞ்சோறு
தேவை: புழுங்கல் அரிசி 2 கப், துவரம் பருப்பு அரை கப், கேரட், கத்தரிக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு ஆகியவை தலா 1, வாழைக்காய் பாதியளவு, முருங்கைகீரை, அரைக் கீரை, முளைக் கீரை தலா 2 கைப்பிடி, சின்ன வெங்காயம், மிளகாய் வற்றல் தலா 8, பூண்டு 6 பல், கடுகு, உளுந்து, சீரகம் தலா 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் சிறிதளவு, தேங்காய்த் துருவல் 2 டீஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், புளி சிறிய எலுமிச்சை அளவு, வடகம் 3 துண்டு, உப்பு தேவைக்கு.
செய்முறை: காய்களை சிறு துண்டுகளாக நறுக்குங்கள். வெங்காயம், பூண்டு, தேங்காய்த் துருவல், மிளகாய், சீரகம் ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்தெடுங்கள். புளியை சிறிதளவு நீரில் கெட்டியாகக் கரைத்து வையுங்கள்.
அரிசி, பருப்புடன் காய்கள், கீரை வகைகள், மஞ்சள் தூள், உப்பு, அரைத்த விழுது, புளி கரைசல், நான்கு கப் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து குக்கரில் போட்டு மூடி வையுங்கள். 1 விசில் வந்ததும், மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.
எண்ணெயில் கடுகு, உளுந்தை தாளித்து, வடகத்தைப் பொரித்தெடுங்கள்.
இந்த வடகக் கலவையைச் சாதத்தோடு சேர்த்துக் கிளறுங்கள்.
காளான் சாதம்
தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், காளான் 10, பெரிய வெங்காயம் 1, இஞ்சி 1 துண்டு, பூண்டு 6 பல், வெங்காயத் தாள் 2, பச்சை கலர் சில்லி சாஸ் 1 டேபிள் ஸ்பூன், மிளகுத்தூள் 1 டீஸ்பூன், சீன உப்பு அரை டீஸ்பூன், சோயா சாஸ் 1 டீஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.
செய்முறை: வெங்காயம், இஞ்சி, பூண்டு, காளான் ஆகியவற்றை நீளவாக்கில் மெல்லியதாகவும், வெங்காயத்தாளை பொடியாகவும் நறுக்குங்கள்.
எண்ணெயில் வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை வதக்குங்கள். வெங்காயம் நிறம் மாறியதும் காளானைச் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் வதக்கி, பிறகு சில்லி சாஸ், சோயா சாஸ், மிளகுத்தூள், சீன உப்பு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் கிளறுங்கள்.
இந்தக் கலவையில் சாதம், வெங்காயத்தாள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள்.

நன்றி:- சமையல் திலகம்’ ரேவதி சண்முகம்