Wednesday, 11 March 2015

குழந்தை பாக்கியம் உண்டாகும்படியான அரியதொரு மந்திரம்!!!

சந்தான வித்தை - அகத்தியர்

குழந்தை இல்லாமல் வாடும் பல பெண்கள் நம் நாட்டில் மலடி 
எனவும், பிள்ளை இல்லாதவள் எனவும் பலவாராக இச்சமுகத்தாரால் 
பேசப்பட்டு அத்தகையோரின் உள்ளத்தை வாடச்செய்கின்றனர், 
குழந்தையின்மையின் காரணமாய் பல ஆண்கள் இன்னொரு 
திருமணம் செய்து கொள்வதும், பல மருத்துவர்கள் 
குழந்தையின்மைக்காக பல லட்சங்கள் பறிப்பது நம் சமுகத்தின் 
அவல நிலையைக்காட்டுகின்றது.
பல சகோதரிகள் குழந்தையின்மையால் மனம் நொந்து உயிரை 
விடவும் துணிகின்றனர் .அத்தகைய நிலைகள் மாறி நல்லமுறையில் 
குழந்தை பிறக்க அகத்தியர் தனது பரிபூரணத்தில் சந்தானம்(குழந்தை) 
இல்லாத மங்கையர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்படியான 
அரியதொரு மந்திரத்தைஅருளியுள்ளார். அதைப்பற்றி 
இன்றைய பதிவில் பார்ப்போம்.                            
சந்தான கரணி 

இருந்து கொண்டு குருபரனைத் தியானம் பண்ணி
இன்பமுடன் ஓம் ரீங் அங்வங் கென்று
வருந்திமனக் கனிவதனால் தேனில் மைந்தா
மார்க்கமுடன் நூற்றெட்டு உருவே செய்து
அருந்தவமாய் தலைமுழுகும் போதில்மைந்தா
அன்புடன் பெண்களுக்கு யீய்ந்தாயானால்
திருந்தியந்த மங்கையர்க்குக் கெற்பமுண்டாம்
திட்டமுடன் கண்மணியைக் காண்பாய் பாரே.

பாரப்பா மலடாகி இருந்தாலென்ன
பக்குவமாய் வொன்பதுக்குள் கெர்பமுண்டாம்
நேரப்பா மணிமந்திர மிதுதானாகும்
ஆரப்பா அறிவார்கள் சந்தான கரணி
அறிந்துமன துருமையானா லடக்கம்பண்ணி
சதாகாலம் பூரணத்தில் சார்ந்து வாழே.
                            

                                       - அகத்தியர் பரிபூரணம் 1200
பொருள்:

வடக்கு நோக்கி அமர்ந்து கொண்டு கணபதி எண்ணி மந்திரம் சித்தி 
பெற வேண்டுமென தியானம் பண்ணி விட்டுபின்னர் கீழ்க்காணும் 
மந்திரத்தை செபிக்கவும்.
                                                                    பூசை முறை

கணபதியை முன்னால் வைத்து தேங்காய், பத்தி, சூடம், மஞ்சள்,
குங்குமம்,பால், பழம் வெல்லம், சர்க்கரைப்பொங்கல் முதலியன 
வைத்து இதன் நடுவில் சுத்தமான தேனை(original) வைத்துக்கொண்டு 
அத்தேனுக்கு கற்பூரம்,சாம்பிராணி கட்டி விட்டு அத்தேனைப் 
பார்த்தவாரே "ஓம் ரீங் அங்வங்" என்ற மந்திரத்தை 108 உரு 
செபித்தால் மந்திரம் சித்தியாகும்.
 இதனால் அத்தேன் மந்திரசத்தி உடையதாகிவிடும்.
பின்னர் இத்தேனை குழந்தை இல்லையென்று மனம் வருந்தும்
மங்கையர்க்கு மாதவிலக்கான சமயத்தில் உண்ணும்படி கொடுத்தால்
அத்தேனை உண்ட மங்கையர்க்கு உறுதியாக கெற்பம் உண்டாகி 
குழந்தை பிறக்கும்.
                 

அவள் மலடியாய் இருந்தாலும் இம்மந்திரத்தால் ஒன்பது மாதத்திற்குள் 
அவளுக்கு கெற்பம் உண்டாகும். இது குழந்தை செல்வத்தை தரும் 
அரிய மந்திரமாகும் என்பதே இதன் இரகசியமான உண்மை,
இதை சித்தர்கள் சந்தான வித்தை,சந்தான கரணி என்பார்கள்
இதை அறிந்தவர்கள் யாருமில்லை,நீ அறிந்து கொண்டாலும் 
இதைப்பற்றி வெளியில் சொல்லாமல் உன் மனதளவில் 
வைத்துக்கொண்டு ஆழ்நிலை தியானதின் மூலம் பிரபஞ்சத்தின் 
ஆற்றலை உன்னுள் பெருக்கிக் கொண்டு வாழ்வாயாக என்கிறார் 
அகத்தியர்.