Sunday, 8 March 2015

ஆண்ட்ராய்ட் போன்!!!

ஆண்ட்ராய்ட் போன்களைப் பழுதுபார்க்க

கேட்ஜெட் பிரியர்கள் மத்தியில் ஐபிக்ஸிட் (iFixit) இணையதளம் மிகவும் பிரபலமானது. இந்தத் தளம் நவீன் சாதனங்களை அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்து அதன் செயல்பாடுகளை விளக்கி, அவற்றைப் பயனாளிகளே பழுதுபார்த்துக்கொள்ள வழிகாட்டக்கூடியது.
இந்தத் தளத்தின் பின்னே பெரிய இணைய சமூகமே இருக்கிறது. எல்லோருமே கேட்ஜெட் செயல்பாடுகளை அறிவதில் ஆர்வம் கொண்டவர்கள். அவற்றைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறவர்கள். இந்தத் தளத்தில் உள்ள ஒரே குறை என்ன என்றால் இது ஐபோன், ஐபேடு சாதனங்களைப் பிரதானமாகக் கொண்டது என்பதுதான்.
ஆனால் இந்தக் குறை இனி இல்லை. ஆம், இப்போது ஐபிக்ஸ்டி ஆண்ட்ராய்டு சாதனங்களுக்காகவும் அறிமுகமாகியிருக்கிறது. ஆண்ட்ராய்டு போன்களே பிரபலமாக இருப்பதால் இந்த வகை சாதங்களுக்கான பகுதி தொடங்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 252 சாதனங்களுக்கான டியர்டவுன் வழிகாட்டி இடம்பெற்றுள்ளது. அதாவது அந்தச் சாதனங்களைத் தலைகீழாகப் பிரித்துப்போட்டு அவற்றின் செயல்பாடுகள் விளக்கப்பட்டிருக்கும். ஸ்மார்ட் போன், டேப்லெட்கள் இதில் அடங்கும். இவற்றுக்கான பாகங்களை வாங்கும் வசதியும் இருக்கிறது.
 ஆண்ட்ராய்ட் சாதனம் தொடர்பாக எந்தச் சந்தேகம் என்றாலும் இந்த இணையதளத்துக்கு செல்லுங்கள். தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள், ஆனால் போனில் கை வைக்கும்போது நீங்கள்தான் பொறுப்பு. ஆண்ட்ராய்டுக்கான ஐபிக்ஸிட் தளம்: https://www.ifixit.com/android