வீடியோவில் வரும் வாட்டர்மார்க் லோகோவினை நீகக
யூடியூபிலிருந்தோ - இணையத்தில் இருந்தோ வீடியோ பைல்களைபதிவிறக்கம் செய்கையில் அதில் லோகோ அல்லது இணையதள முகவரிகள் நேரடியாகவோ -வாட்டர்மார்காகவோ கூடவே ஒளிபரப்பாகும். சமயத்தில் நமக்கு அது எரிச்சலை தரலாம். சில சப்டைடிலுடன் போடப்படும் படங்களின் சப்டைடில் உடன் இவ்வாறான விளம்பரம் வந்து நமக்கு எரிச்சலை தரலாம். இதனை தவிர்க்க நாம் வீடியோவில் உள்ள லோகோவினை நீக்கிவிடலாம். இவ்வாறான லோகோவினை நீக்க இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட http://www.mediafire.com/download/1bkldzohdyzl7ql/VideoLogoRemover.exe செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் உள்ள லோட் வீடியோ பைலில் உங்களுக்கான வீடியோவினை தேர்வு செய்யவும்.

உங்களுக்கான வீடியோ படம் தெரியும் இதில் வரும் லோகோவினை கர்சர் மூலம் தேர்வு செய்யவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

வீடியோவின் லோகொ அமைந்துள்ள இடத்தினை நீங்கள் கர்சர் மூலம் தேர்வு செய்ததும் ஹரிசான்டல் மற்றும் வெர்டிகல் பெசிஷனை அறிந்துகொள்ளலாம். மேலும் லோகோ அமைந்துள்ள அகலம் மற்றும் உயரம் ;அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


வரும் விண்டோவில் ரிமூவ் லோகோ கிளிக் செய்யவும். லோகோ நீக்கப்பட்ட இடத்தினை தேர்வு செய்வதுமட்டுமல்லாது கீழே உள்ள பார்மெட்டில் உங்களுக்கு எந்த பார்மெட்டில் வீடியொ வேண்டுமோ அந்த பார்மேட்டினை தேர்வு செய்யவும்.

செயல் நடைபெறுவதற்கான விண்டோ உங்களுக்கு தோன்றும் கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.இ

அனைத்து பணிகளும் முடிந்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

ஒ.கே.கொடுத்து வெளியேறுங்கள். இப்போது நீங்கள் சேமித்துவைத்த இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான வீடியோ லோகோ இல்லாமல் இருப்பதை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.