ரசகுல்லா
ரசகுல்லா தேவையானவை பால் – 1 லிட்டர் பால் மைதா – 1 டீஸ்பூன் மைதா எலுமிச்சம் பழம் – 1 சீனி – 21/2 கப் நீர் – 5 கப் செய்முறை முதலில் பாலை கொதிக்கவிடவும். கொதிக்கின்ற பாலில் எலுமிச்சம்பழத்தை பிழிந்துவிட பால் திரிந்துப் போகும். திரிந்தப் பாலை ஒரு மெல்லிய துணியில் வடிகட்ட வேண்டும். நீர் இறங்கி பால் திரட்சிகள் துணியில் தங்கிவிடும். அதை அப்படியே ஒரு மூட்டையாகக் கட்டி, அதன் மீது அம்மிக்குழவி போன்ற ஏதாவதொரு ஒரு கனமான பொருளை வைத்தால். மிச்சமிருக்கும் நீரும் இறங்கிவிடும். இது பனீர். பனீரை நன்றாக பிசைந்து வைக்கவும். இந்த பனீர் 1 டீஸ்பூன் மைதாவைப் போட்டு நன்கு பிசைந்து கோலி வடிவத்தில் சின்னச்சின்னதாய் உருட்டிக் கொள்ளவும். தண்ணீர்விட்டு சீனியை காய்ச்சவேண்டும். பாகு இறுக இறுக அவ்வப்போது தண்ணீர் விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். பாகு நன்கு கொதித்தக் கொண்டிருக்கும் பொழுதே, செய்து வைத்தள்ள பனீர் கோலியை அதில் போட வேண்டும். ரசகுல்லா வாசனையாக இருக்க வேண்டுமெனில், சீனிப் பாகில் உங்களுக்குப் பிடித்த ஏதாவதொரு எஸன்ஸை சேர்த்தக் கொள்ளலாம்.
பாஸந்தி
பாஸந்தி தேவையான பொருட்கள் பால் – 1½ லிட்டர் பொடித்த சர்க்கரை – 350 கிராம் முந்திரிப் பருப்பு – 20 கிராம் பிஸ்தாப்பருப்பு – 20 கிராம் சாரைப்பருப்பு – 20 கிராம் பச்சைக் கற்பூரம் – சிறு துண்டு ஏலக்காய் பொடி – ½ டீஸ்பூன் செய்முறை அடிகனமான அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி சிறி தீயில் காய்ச்சவும். பால் கொதித்து ஏடு படியும் பொழுது பாத்திரத்தின் ஓரங்களில் ஒதுக்கி விடவும். பாலை கெட்டியாக ஏடு, ஏடாக காய்ச்சியதும் அடுப்பிலிருந்து இறக்கி பொடித்த சர்க்கரையை சேர்க்கவும். ஏலக்காய்ப் பொடியையும், பச்சைக் கற்பூரத்தையும் சேர்க்கவும். வேறொரு பாத்திரத்தில் எடுத்து மேலாக மெல்லிய வில்லைகளாக நறுக்கி வைத்து இருக்கும். பருப்புகளைத் தூவி விடவும். பாஸந்தியை அப்பொழுதே அல்லது குளிர் சாதனப் பெட்டியில் வைத்தோ ஜில்லென்று பரிமாறலாம்.
பால் பாயாசம்
பால் பாயாசம் நல்ல பச்சை அரிசி மூன்று தேக்கரண்டி எடுத்துத் தண்ணீர் விட்டு அலம்பிக் கொண்டு வடிய வைத்துக் கொள்ளவும். ஒரு லிட்டர் பசும்பாலை இரண்டு லிட்டர் கொள்கிற பாத்திரத்தில் வைத்து அடுப்பிலேற்றி, கொதிக்க விடவும். பால் நன்றாகக் கொதித்ததும், சுத்தம் செய்து வைத்திருக்கும் அரிசியைப் பாலில் போட்டு சாதம் போல் அரிசி வேகும் வரையில் கிளறிக் கொண்டே இருக்கவும். அரிசி வெந்ததும். சர்க்கரை முழுவதும் கரைந்ததும். தோல் போக்கிய வாதுமைப் பருப்பை நீளவாக்கில் நறுக்கி நெய்யில் வறுத்து பாயசத்தில் போடவும். சாரைப் பருப்பு இருபது கிராம் சிறிது நெய்யில் வறுத்துப் போடவும். பிறகு ஏலக்காய் இரண்டு. சாதிப்பத்திரி ஒருதுண்டு ஆகியவற்றை நன்றாகப் பொடி செய்து பாயசத்தில் போட்டுக் கலக்கி மூடவும். இளம் சூட்டில் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
.