Sunday, 4 January 2015

'குழம்புமாவு உப்புமா '!!!

'குழம்புமாவு உப்புமா '
குழம்புமாவு உப்புமா '.... இது என்ன என்று குழம்புபவர்களுக்கான விளக்கம் புன்னகை அரிசி மாவை தான் நாங்க அப்படி சொல்வோம். இது அரிசி மாவில் செய்யும் 'கூழ்' .ரொம்ப சுவையாக 'மணல் மணலாக' வரும். கொஞ்சம் எண்ணெய் அதிகம் ஆகும் என்றாலும் சுவை யாக இருக்கும்.

தேவையானவை :

அரிசி மாவு ஒரு கப்
மிளகாய் வற்றல் 4 - 5
புளி தண்ணீர் 1 1 / 2 கப்
உப்பு
கடுகு கொஞ்சம்
உளுந்து கொஞ்சம்
பெருங்காயம் கொஞ்சம்
எண்ணெய் முக்கால் கப்
கறிவேப்பிலை கொஞ்சம்

செய்முறை :

முதலில் மாவையும் புளி ஜலத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கரைக்கவும் .
உப்புபோடவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்கயப் பொடி, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் போட்டு தாளிக்கவும்.
கரைத்து வைத்துள்ள மாவை கொட்டி கிளறவும்.
அடுப்பை சின்னதாக வைக்கவும்.
மாவு வேகும் வரை அப்ப அப்ப கிளறி விடவும்.
நன்கு 'உதிர் உதிராக ' வரும்வரை எண்ணெய் விட்டு கிளறவும் .
அவ்வளவுதான், சுவையான 'குழம்புமாவு உப்புமா ' தயார்.
தொட்டுக்கொள்ள பருப்பு சாம்பார் நல்லா இருக்கும்.