Sunday 4 January 2015

திருவாதிரைக் களி!!!



திருவாதிரைக் களி இதை இன்று, (திருவாதிரை அன்று ) செய்வது ரொம்ப விசேஷம் .

தேவையானவை:

பச்சரிசிரவை – 1 கப் (அரிசியை களைந்து உலர்த்தி மிக்க்ச்யில் பொடிக்கவும் )
பயத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
கடலைபருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
வெல்லம் – 3 / 4 கப்*
தேங்காய்துருவல் - 4 டேபிள் ஸ்பூன்
நெய் – 3 டேபிள்ஸ்பூன்
முந்திரி, கிஸ்மிஸ், ஏலப்பொடி

செய்முறை:

பருப்புகளை வெறும் வாணலி இல் சிவக்க வறுக்கவும்.
அரிசிரவையும் நன்கு வறுக்கவும்.
mixer grinder இல் பருப்புகளையும் ரவை போல் பொடிக்கவும்.
உருளியில் 2 டம்ளர் தண்ணீர் வைத்து வெல்லத்தை கரைய விடவும்.
நன்கு கரைந்தும் வடிகட்டவும்.
அது கொதிக்க ஆரம்பித்ததும், 2 ஸ்பூன் நெய் விட்டு, பொடித்த ரவை களை போடவும்.
அடுப்பை சின்னதாக்கி கட்டி தட்டாமல் நன்கு கிளறவும்.
வேண்டுமானால் மேலும் தண்ணீர் விடவும்.
ஒரு மூடி போட்டு மூடி வைக்கவும்.
நடுநடு வே கிளறி விடவும்.
ரவை வெந்ததும் தேங்காய் துருவல், ஏலப்பொடி தூவி கிளறி இறக்கவும்.
நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ் வறுத்துக் களியுடன் சேர்க்கவும்.
சுவையான , குறைந்த தித்திப்புடைய 'திருவாதிரை களி' தயார்.
புளிப்பு கூட்டுடன் பரிமாறலாம்.
ஆறினதும் ரொம்பநல்லா இருக்கும்.





தேவையானவை:
7 கறிகாய்கள் (கிழ் உள்ள லிஸ்ட் ஐ பார்க்கவும் )
1cup வெந்த துவரம் பருப்பு
2sp புளி பேஸ்ட்
2 ஸ்பூன் APP
2 ஸ்பூன் தேங்கா துருவல்
1 /2sp வறுத்து பொடித்த வெந்தயம்

தாளிக்க:
கடுகு
மஞ்சள் பொடி
கறிவேப்பிலை
எண்ணெய்
உப்பு.

செய்முறை:

காய் களை கொஞ்சம் பெருசு பெருசாக நறுக்கவும்.
பருப்புடன்குக்கரில் வைக்கவும்.
ஒரு ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விடவும்.
கடுகு போட்டு வெடித்ததும் ,வெந்த பருப்பு + காய் புளி பேஸ்ட், தேங்கா துருவல், மஞ்சள் பொடி, வறுத்து பொடித்த வெந்தயம் ,APP பொடி, உப்பு என எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.
நன்கு கொதிக்கும் படி விடவும்.
பிறகு மிளகாய் பொடி வாசம் போனதும், கறிவேப்பிலை, தூவி இறக்கவும்.
திருவாதிரை களி உடன் பரிமாறவும்.

குறிப்பு:சேனைக்கிழங்கு, வாழைக்காய், பூசணிக்காய், அவரைக்காய், பறங்கிக்காய், மொச்சை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, தட்டைக்காய், புடலை, சேனைக் கிழங்கு,பீன்ஸ், உருளை, கேரட், கருணைக் கிழங்கு, காராமணி, பச்சை பட்டாணி இந்த லிஸ்ட்லிருந்து 7 அல்லது ஒன்பது காய்கறிகள் எடுத்துக்கலாம்.