Friday, 24 November 2017

Tamarind Kulambu!!!

திருநெல்வேலி ஸ்டைல் புளிக் குழம்பு

தேவையான பொருட்கள்:

புளி - 1 பெரிய எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் - 3
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

வறுத்து அரைப்பதற்கு...

மல்லி - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 6
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பூண்டு - 20 பற்கள்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

முதலில் புளியை வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து, 2 கப் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பூண்டுகளை தட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்த பொருட்களை சேர்த்து வறுத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

பின் அதனை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அடுத்து அத்துடன் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வெந்தயம், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

அடுத்து அதில் தட்டி வைத்துள்ள பூண்டுகளை சேர்த்து சிறிது நேரம் தாளிக்க வேண்டும். பின்பு அதில் புளிச்சாறு, மஞ்சள் தூள், உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, 10 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், திருநெல்வேலி ஸ்டைல் புளிக் குழம்பு ரெடி!!!

No comments: