திருநெல்வேலி அல்வா
தேவையான பொருட்கள்
கோதுமை - 1 கப்
ப்ரவுண் சுகர் (அல்லது ஒயிட் சுகர்) - 3 கப்
முந்திரி பருப்பு - சிறிது
நெய் - 2 1/2 கப்
கோதுமை - 1 கப்
ப்ரவுண் சுகர் (அல்லது ஒயிட் சுகர்) - 3 கப்
முந்திரி பருப்பு - சிறிது
நெய் - 2 1/2 கப்
செய்முறை
1.ஒரு கப் கோதுமையை எடுத்து முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்கவும்.
2.6 - 8 மணி நேரம் நன்றாக ஊற வேண்டும். பிறகு அதை மிக்சியில் அரைத்து பால் எடுக்க வேண்டும்.
3.மிக்சியில் ஊறிய கோதுமை மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைக்கவும்.
4. பிறகு அரைத்ததை சல்லடையில் வடிகட்டவும்.
5.மறுபடி மிக்சியில் கோதுமை மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து அரைத்து பாலை அதே பாத்திரத்தில் வடிகட்டவும்.
6.கோதுமை பாலை 3 - 4 மணி நேரம் அசைக்காமல் மூடி வைக்கவும். பிறகு பார்த்தால் மேலே தெளிந்த நீரும் கீழே கொஞ்சம் கட்டியான கோதுமை பாலும் இருக்கும்.
7.ஒரு கரண்டியால் மேலே உள்ள தெளிந்த நீரை மெதுவாக எடுத்து விடவும்.
நெய்யை உருக்கி கொள்ளவும். முந்திரி பருப்பை ஒரு மேஜைக்கரண்டி நெய்யில் வறுத்து எடுத்து கொள்ளவும். தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
நெய்யை உருக்கி கொள்ளவும். முந்திரி பருப்பை ஒரு மேஜைக்கரண்டி நெய்யில் வறுத்து எடுத்து கொள்ளவும். தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
8.ஒரு நான்-ஸ்டிக் கடாயில் கோதுமை பாலை ஊற்றவும். அதனுடன் 3 கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இப்பொது அடுப்பை ஆன் செய்து கடாயை வைக்கவும். மிதமான தீயில் வைக்கவும்.
9.இப்போது இருந்தே கிளற ஆரம்பிக்கவும். சூடானதும் அடியில் கட்டி போல் உருவாகும். கிளற கிளற எல்லாம் ஒன்றாக வரும்.
10.பால் கெட்டியானதும் சக்கரையை சேர்க்கவும். கை விடாமல் கிளறி கொண்டே இருக்கவும். நான் ப்ரவுன் சுகர் சேர்த்திருப்பதால் தானாகவே அல்வா கலர் மாறி விடும்.
11.ஒயிட் சுகர் சேர்ப்பதாக இருந்தால் தானாக பிரவுன் கலர் வராது. கலர் வருவதற்கு கீழே உள்ள குறிப்பை பார்க்கவும்.
12.கை விடாமல் கிளறி கொண்டே இருந்தால் கொஞ்சம் கொஞ்சமா அல்வா கெட்டியாக ஆரம்பிக்கும். இப்போது உருக்கிய நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும்.
13. மொத்தமாக நெய்யை சேர்க்காமல் கடாயில் அல்வா ஒட்டும் போதும் மட்டும் கொஞ்சம் நெய்யை சேர்த்துக் கிளறி கொண்டே இருக்கவும்.
14.வறுத்த முந்திரியை சேர்த்து கொள்ளவும்.
கடைசியாக நெய் அல்வாவிலிருந்து வெளியே வர ஆரம்பிக்கும்.
கடைசியாக நெய் அல்வாவிலிருந்து வெளியே வர ஆரம்பிக்கும்.
15. கரண்டியில் ஒட்டாமல் அல்வா கீழே விழும். அது தான் சரியான பதம். அடுப்பில் கோதுமை பாலை வைத்ததிலிருந்து இந்த பதம் வருவதற்கு கிட்டதட்ட ஒரு மணி நேரம் ஆகும்.
16.அடுப்பை அணைக்கவும். சுவையான அல்வா ரெடி. ரெடியான அல்வாவை ஒரு நெய் தடவிய ட்ரேயில் போட்டு ஆறியதும் கட் செய்து பரிமாறலாம் அல்லது அப்படியே பரிமாறலாம்.
1.250 கிராம் கோதுமைக்கு அரை கிலோவுக்கு கொஞ்சம் கூடுதலாகவே அல்வா வரும்.
2.ஒயிட் சுகர் சேர்த்து செய்யும் போது அல்வாவுக்கு கலர் கிடைப்பதற்க்கு கொஞ்சம் ஆரஞ்சு புட் கலர் சேர்த்துக் கொள்ளவும்.
3.புட் கலர் சேர்க்க விரும்பாதவர்கள் சுகரை கேரமல் (caramel) செய்து சேர்த்து கொண்டால் பிரவுன் கலரில் அல்வா வரும்.
4.கேரமல் செய்வதற்கு ஒரு கடாயில் அரை கப் சக்கரை மற்றும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தீய்ந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும்.
5. சிறிது நேரம் கழித்து சக்கரை பாகு பிரவுண் கலராக மாறும். அடுப்பை உடனே அணைத்து விடவும். கேரமல் ரெடி.
6.இதை அல்வா கிண்டும் போது மற்றொரு அடுப்பில் செய்து கொள்ளவும். முந்திரி பருப்பு சேர்க்கும் பொது இதையும் சேர்த்து விடுங்கள். பிரவுண் கலர் அல்வா ரெடி.
7.ப்ரிஜ்ஜில் வைத்து 2 -3 வாரம் வைத்து சாப்பிடலாம். அவ்வாறு சாப்பிடும் பொது தேவையான அல்வாவை எடுத்து ஒரு கடாயில் போட்டு கிளறி சூடுபடுத்தி பரிமாறவும்.
No comments:
Post a Comment