Tuesday, 16 December 2014

மருத்துவக்குறிப்புகள் !!!

எளிய இயற்கை மருத்துவக்குறிப்புகள் :
பித்தவெடிப்பு மறைய:
காலில் பித்தவெடிப்பா?
கவலையை விடுங்கள். தேனையும்,
சுண்ணாம்பையும் ஒன்றாய்க்
குழைத்து பித்தவெடிப்பில்
தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த
இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
தொண்டை வலிக்கு:
பால் இல்லாத டீயுடன் கொஞ்சம்
எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள்
தொண்டை வலி நீங்கும்.
இருமல் தொல்லைக்கு:
தூங்க போகும் முன் 1 கப் சூடான
தண்ணீரில் 1 ஸ்பூன்
உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும்.
இது இருமல் தொல்லையையும்
நீக்கும்.
கட்டிகள் உடைய:
மஞ்சள், சுண்ணாம்பு,
விளக்கெண்ணெய் மூன்றையும்
நன்றாக குலைத்து கட்டிகள் உள்ள
இடத்தில் பற்று போட்டால் கட்டிகள்
சீக்கிரம் பழுத்து உடைந்து விடும்.
பேன் தொல்லை நீங்க:
வசம்பு, வேப்பிலை இரண்டையும்
அரைத்து தலையில் தேய்த்து 30
நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால்
தலையில் உள்ள பேன் நீங்கும்.
தொண்டை கரகரப்பு நீங்க:
அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில்
அடக்கிக் கொண்டிருந்தால் வாயில்
உமிழ் நீர் சுரக்கும். இந்த
உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக்
கொண்டிருந்தால் தொண்டைக்
கரகரப்பு நீங்கும். குரல் கம்மல்
நீங்கி விடும். தொண்டையில் உள்ள
சளிக்கட்டு கரைந்து விடும்.
இருமல் சளி குணமாக:
சித்தரைத்தையும்
பனங்கற்கண்டு இரண்டையும் சம
அளவு எடுது கஷாயம்
வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள்
சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல்
சளி குணமாகும்.
தும்மல் வராமல் இருக்க:
தூதுவளை பொடியில்
மிளகு பொடி கலந்து தேனில் (அ)
பாலில் சாப்பிட்டால் தும்மல் வராது.