Tuesday, 28 January 2014

வீடியோக்களை தரவிறக்கம் செய்ய!!!

 வீடியோக்களை தரவிறக்கம் செய்து தருவதற்காக என்றே பிரத்யேகமாக டியூப் ஆப்லைன் (http://www.tubeoffline.com/ ) இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளாது. இணையத்தில் பார்த்து ரசித்த வீடீயோவை தரவிறக்கம் செய்து கொள்ள விரும்பினால் அதற்கான இணைய முகவரியை மட்டும் இந்த இணையதளத்தில் சமர்பித்தால் போதுமானது, அதை தரவிறக்கம் செய்து கொடுத்து விடும். பின்னர் பார்த்து ரசிக்க நினைக்கும் வீடியோக்களை எந்த சிக்கலும் தரவிறக்கம் செய்து கொள்ள இந்த தளம் சிறந்த வழி.
இந்த தளத்தின் மூலம் தரவிறக்கம் செய்வதும் எளிதானது தான். இந்த சேவையை பயன்படுத்த இதில் உறுப்பினராக வேண்டிய தேவையில்லை. எந்த மென்பொருளையும் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டாம். இதில் உள்ள யூடியூப்பில் இருந்து தரவிறக்கம் செய்க கட்டத்தில் வீடியோவுக்கான முகவரியை டைப் செய்தால் போதுமானது.