Friday 9 August 2013

FOR DOCUMENTARY FILMS

டாக்குமன்ட்ரி படங்களை பார்த்து ரசிப்பது என்று சொல்லலாமா? டாக்குமன்ட்ரி படங்களை பார்த்து சிந்திப்பது என்று சொல்வது தானே சரியாக இருக்கும். ரசிக்க கூடிய டாக்குமன்ட்ரி படங்கள் அநேகம் உண்டு . இருந்தாலும் டாக்குமன்ட்ரி படங்களின் ஆதார தன்மை அவற்றின் கருப்பொருள் குறித்து சிந்திக்க வைப்பது.
இப்படிப்பட்ட டாக்குமன்டிரி படங்களை பார்ப்பதற்கான வழிகாட்டி டாக்குமன்ட்ரி கைடு. டாக்குமன்டிரி படங்களை பார்ப்பதற்கான இணையதளங்களின் பட்டியலில் இது எளிமையான தளம்.ஆனால் அந்த எளிமைக்கு நேர் எதிராக இதன் வீச்சு அதிகம்.
டாக்குமன்ட்ரி படங்களுக்கான கூகுல் இது. முகப்பு பக்கத்திலும் அதற்கேற்ற‌ எளிமை. சமூக நோக்கிலான டாக்குமன்டிரி படங்களை தேடுங்கள் எனச்சொல்லும் இந்த தளத்தில் அவர்வர் தங்கள் விருப்பத்திற்கேற்ற டாக்குமன்டிரி படக்களை தேடலாம்.
தேடுவது என்பது கூகுலில் தேடுவது போல தான். தேவையான குறிப்பிட்ட குறிச்சொல்லை டைப் செய்ததும் தொடர்புடைய டாக்குன்ட்ரி படங்களின் பட்டியல் தோன்றுகிறது. அவற்றில் கிளிக் செய்து பார்க்கலாம். அல்லது படவிழாக்களில் திரையிடப்பட்டவை, அமைப்புகளை சார்ந்தவை,பள்ளிகளை சார்ந்தவை என குறிப்பிட்ட வகைகளின் கீழும் பார்க்கலாம்.
கூகுல் போன்றது தான் என்றாலும் முக்கிய வித்தியாசம் உண்டு. கூகுல் போல முடிவுகள் பொதுவானவை அல்ல. டாக்குமன்ட்ரி படங்கள் தேடி தேர்வு செய்யப்பட்டு பின்னர் அவற்றின் நோக்கம் தரம் சோதித்து பார்க்கப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளன.
இப்படி பார்த்து பார்த்து பட்டியலிடுகிறதே தவிர இந்த தளத்தில் டாக்குமன்டிரிகளை பார்க்க முடியாது. இந்த தளம் வாயிலாக டாக்குமன்டிரி இருப்பிடங்களுக்கு சென்று பார்க்கலாம்.
தேடல் முடிவுகளை பட்டை கூராக்கி கொள்து போல தேடல் வரலாற்றையும் திரும்பி பார்க்கலாம். ஒவ்வொரு நாளும் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் த‌னியே முன்னிறுத்தப்படுகின்றன.
இந்த தலத்தின் சிறப்பம்சம் டாக்குமன்டடிர் படங்கள் தொடர்பான அழகான விளக்கமும் தரப்பட்டுள்ளது.
பாருங்கள்.சிந்தியுங்கள்.
இணையதள முகவரி;http://www.documentaryguide.com/