Friday, 23 August 2013

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க!!!

எம்,ஜீ.ஆர் .ரகசிய போலீஸ் 115 என்கின்ற படத்தில் பாடும் படலான:- என்ன பொருத்தம் நமக்குள் இந்த பொருத்தம்...ஆஹா...என்ன பொருத்தம் ....பாடல் வரிக்கு தகுந்தாற் போல .ஆண் - பெண் இருவரின் ஜாதகம் பொருத்தம் திருமணத்திற்கு முன்னரும் திருமணத்திற்கு பின்னரும் பார்க்க இந்த சாப்ட்வேர் மிகவும் பயன்படும். 2 எம்.பிக்குள் உள்ள இதை உபயோகிப்பது மிகவும் எளிது.பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடுபவர்களும் - மாப்பிள்ளைக்கு பெண் தேடுபவர்களும் இந்த சாப்ட்வேர் மிகவும் பயன்படும. சில சமயம் நம்மிடம் மொத்தமாக ஜாதகம் வந்துசேர்ந்துவிடும்.ஒவ்வோன்றையும் ஜோதிடரிடம் காண்பித்து பொருத்தம் பார்க்க பணம் மற்றும் நேரம் செலவழிப்பதை விட இந்த சாப்ட்வேரில் பெண்ணின் பெயர் - ராசி - நட்சத்திரம். அதுபோல் பையனின் பெயர் - ராசி - நட்சத்திரம் இதில் கொடுத்தால் சில நிமிடங்களில் ஜாதகம் பொருந்தும் - பொருந்தாது என ரிசல்ட் வந்துவிடும்.ரிசல்ட் பார்த்து திருமணம் ஆகாதவர்கள் மட்டும்- திருமணத்திற்கு ஏற்பாடு செய்யலாம்.இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.நீங்கள் இதை டவுண்லோடு செய்ததும் உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன ஆகும். 

இதில் Horoscope Match என்பதை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் பெண் பெயரை தட்டச்சு செய்யவும்.
அடுத்து உள்ள ராசியில் நீங்கள் பெண்ணின் ராசியை தேர்வு செய்யவும்.
அடுத்து நட்சத்திரம் தேர்வு செய்யவும்.
இதைப்போல் ஆண் விவரங்களையும் தேர்வு செய்து அதில் உள்ள  பிரிண்ட் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விவரம் தெரியவரும். இதில நீங்கள் பொருத்தம் பார்க்கலாம்.அனைத்து பொருந்ததங்களும் பொருந்துகின்றதா என்பதை அதில் உள்ள டிக் அடையாளத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம். 12 பொருத்தங்களில் எத்தனை பொருந்துகின்றது என இறுதியில் விவரம் பார்க்கலாம்.

பெண்ணின் நட்சத்திரத்திற்கு பொருத்தமானஆண் ராசி பலன்களையும் இதன் மூலம் பார்க்கலாம்.
இதைப்பொல் ஆண் வரனுக்கு பொருந்திவரக்மகூடிய பெண் நட்சத்திர  விவரங்களையும் காணலாம்.

பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்.