அரத்தை
மூட்டு வலி தொடர்பான பிரச்சினைகள் கழுத்து வலி இடுப்பு வலி சவ்வு விலகல் பிரச்சினைகள் முதுகுத் தண்டுவட பிரச்சினைகள் ஆமவாதம் முடக்கு வாதம் எனப் படும் ருமட்டாயடு ஆர்த்திரிடிஸ் வயிற்றுப் பொருமல் பசி இன்மை மலசிக்கல் பித்தப் பைக் கற்களை அறுவை சிகிச்சை இன்றி கரைக்க இந்த அரத்தை மிகப் பெரிய உதவி செய்யும்
மூட்டு வலிக்கு
மூட்டு வலிக்கு மிகப் பெரிய அளவில் குணம் தரக்கூடிய மிக சிறந்த மருந்துகளில் அரத்தை பால் கசாயம் ஒன்று ஆகும்
தண்ணீர் ...... நூறு மில்லி பால் ...... ஐம்பது மில்லி அரத்தை .......ஒரு தேக்கரண்டி ஒன்றாக சேர்த்து சிறு தீயில் கொதிக்க வைத்து ஐம்பது மில்லியாக சுருக்கி இறக்கி வடிகட்டி அரத்தைப் பால் கசாயமாக காலை இரவு என நாள்தோறும் இரண்டு வேளைகள் உணவுக்கு முன் ஒரு வேளைக்கு ஐம்பது மில்லி அரத்தைப் பால் கசாயம் குடித்து வர மூட்டு வலிகளில் மிகப் பெரிய அளவில் மாறுதல் அடையும்
ருமட்டாயடு ஆர்த்திரிடிஸ் என்ற முடக்குவாதம் ஆமை வாதம் என்னதான் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு சம்பந்தப் பட்ட மருந்துகளையோ சாப்பிட்டு வந்தாலும் மூட்டுகளில் இருக்கும் இறுக்கமோ முக்கியமாக காலை எழுந்து கொள்ளும்போது இருக்கும் கடுமையான இறுக்கமோ மாலை நேரங்களில் மூட்டுகளில் இருக்கும் வீக்கமோ அல்லது நீண்ட நாள் பிரச்சினையால் மூட்டுகள் வளைகின்ற திறனிலோ மாற்றங்கள் இருக்காது இதைக் குணப் படுத்தும் அற்புதமான மருந்து இந்த அரத்தை பால் கசாயம்
நாள்தோறும் காலை மதியம் இரவு என மூன்று வேளைகள் அல்லது காலை மாலை என இரண்டு வேளைகள் ஒரு வேளைக்கு ஐம்பது மில்லிக் கசாயம் குடித்து வர ருமட்டாயடு ஆர்த்திரிடிஸ் என்ற முடக்குவாதம் ஆமை வாதம் நோயிலிருந்து படிப் படியாகக் குணமடையலாம்
வயிற்றுப் பொருமல்
காலை எழுந்தவுடன் பசி இருக்கும் பசிக்கிறது என்று எண்ணி இரண்டு இட்லி சாப்பிட்டவுடன் வயிறு பானை போல வீங்கி விடும் மதியம் சாப்பிடப் பிடிக்காது இரவு பசிக்கிறதே என்று சாப்பிட்டால் இரவு பாதி இரவு வரை சாப்பிட்டது வயிற்றுக்குள்ளே அடை பட்டிருக்கிறது போன்ற உணர்வு இந்த மாதிரி பிரச்சினையைக் குறைத்து குணமாகக்கூடிய சிறந்த அருந்து இது அரத்தை தூள் ........... மூன்று சிட்டிகை தண்ணீர் ......... நூறு மில்லி கொதிக்க வைத்து ஐம்பது மில்லி கசாயமாக்கி தினமும் காலை மாலை என இரண்டு வேளைகள் உணவுக்கு முன் அரை மணி நேரம் முன் குடித்து வர ஒரு மாத காலத்தில் வயிற்றுப் பொருமல் வாயுக் கோளாறுகள் மலச்சிக்கல் படிப்படியாகக் குறைத்துக் குணமாக்காக் கூடிய அரு மருந்து இது \
பித்தப் பைக் கற்கள்
அறுவை சிகிச்சை இல்லாமல் பித்தப் பைக் கற்களைக் கரைக்கக் கூடிய அரு மருந்து அரத்தை அரத்தை தூள் .... ஒரு தேக்கரண்டி தண்ணீர் ...... நூறு மில்லி பால் ...... இருநூறு மில்லி உள்ளுக்கு சாப்பிடும் விளக்கெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் ......... ஒரு தேக்கரண்டி ஒன்றாகக் கலந்து கொதிக்க வைத்து இருநூறு மில்லியாக சுருக்கி இறக்கி வடிகட்டி குடிக்கும் சூட்டில் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் அரை மணி நேரம் கழித்து ஓரிரு முறைகள் மலம் கழிக்க வேண்டி இருக்கும் பயப் படத்தேவை இல்லை
தொடர்ந்து மூன்று மாதங்கள் இவ்வாறு குடித்து வர பித்தப் பைக் கற்கள் மறைந்து போய் இருக்கும்
மருத்துவ ஆய்வு ஸ்கேன் செய்து உறுதிப் படுத்திக் கொள்ளலாம் பித்தப் பைக் கற்களை அறுவை சிகிச்சை இல்லாமல் குணமாக்கும் மருந்து இது பித்தப் பைக் கற்கள் கரையும் வரை இந்த மருந்தைக் குடித்து வர வேண்டும்
No comments:
Post a Comment