Sunday, 21 April 2019

புற்றுநோய் மருந்து!!!

நம்பிக்கையே_வாழ்க்கை!
நேற்று நண்பர் ஒருவரின் உறவினருக்கு புற்றுநோய் உள்ளது மருந்து வாங்க போக வேண்டும் என்றார். சரி என்று இருவரும் கேரளாவுக்கு கிளம்பினோம். கோவையில் இருந்து தடாகம் வழியில் சென்று ஆனைக்கட்டி சென்று அங்கிருந்து முக்காலி செல்ல வேண்டும்.. முக்காலியில் இருந்து நம் சிறியரக சடான் கார்கள் செல்ல முடியாது. ஜீப் வகைகள் வண்டியில் செல்வதே உத்தமம். மிக மோசமான வனதுறை சாலையில் போனால் இருக்கின்றது வள்ளியம்மாள் குருகுலம்.
பாதுகாக்கப்பட்ட வனபகுதியில் பிரம்மாண்ட கட்டிடங்களுடன் உள்ளது இந்த ஒற்றை மூலிகை வைத்தியசாலை. இது எப்படி சாத்தியம் அதுவும் கேரளத்தில் என்று சேட்டன்மார்களிடம் சம்சாரித்தால்.
பிரிட்டிஸ் அரசு வள்ளியம்மாள் என்கின்ற ஆதிகுடி இருளர் பெண்ணுக்கு 112ஏக்கரை பட்டயம் போட்டு தந்துள்ளார்கள். அரிய வகை மூலிகை வளர்க்க அன்று வந்த பிரிட்டிஸ் கவர்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சாகும் நிலையில் இருந்தவரை இருளர் பெண் வைத்திச்சிகள் சில கிழங்கு, மரபட்டை, வேர்களை பொடி செய்து கொடுக்க அவர் மீண்டு நீண்ட காலம் உயிர் வாழ்ந்திருக்கின்றார். அவர் பட்டயம் செய்து கொடுத்த உரிமையில் இவர்கள் வாழ்ந்து பயன்படுத்தி வருகின்றனர். மூன்று பரம்பரை ஆட்கள் இடங்கள் இங்கு உள்ளது. அவ்வகையில் வள்ளியம்மாள், பொன்னியம்மாள், லட்சுமியம்மாள் என மூவர் உள்ளனர். முக்கியமானவர் வள்ளியம்மாள் ரவீந்திரன் வைத்தியர்.
பெயரை கொடுத்து விட்டு வைத்தியரை பார்க்க காத்திருந்தால் நிறைய பேர் அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் விசாரித்தால் மிகப்பெரிய ஆச்சர்யம்.
கும்பகோணத்தை சேர்ந்த ஒருவர் தஞ்சை மீனாட்சியில் கைவிடப்பட்டவர் மூன்று மாதம்தான் உங்கள் ஆயுள் என்று சொல்லப்பட்டவராம் எட்டு லட்சம் வரை செலவு செய்தவராம். சாகத்தானே போறோம் கடைசி முயற்சியாக இதை பார்ப்போம் என்று வந்தவர் பதினாறு மாதங்களாக வருகின்றேன் என்றார்.
இங்கு பெரும்பாலும் அலோபதி கைவிடப்பட்ட நிலையில் வருகின்றார்கள். பொள்ளாச்சியை சேர்ந்த முரளி என்பவர் சொல்கின்றார். ராமகிருஸ்ணாவுல பதினைந்து லட்சம் செலவு செஞ்சேனுங்க வீட்டை காட்டை வித்து பாத்தணுங்க கடைசில சாவு உனக்கு கன்பார்முடான்டானுக.. தென்னை மரத்து மாத்திரைய வாங்கி வச்சுட்டுத்தானுங்க இங்க வந்தேன்... இதை ஒரு மாசம் பாப்போம். சரியாகுலையா இருக்கற சொத்தை பொண்டாட்டி பேர்ல எழுதி வச்சுட்டு நாம செத்தரலாம்முன்னுதான் வந்தேன். இன்னிக்கு மூணு வருசம் ஆச்சுங்க..என்னோட நோய் குணமாயிருச்சு ஆனாலும் மருந்தை நிறுத்தலை இன்னும் பத்து வருசம் வாழ்ந்தா போதுங்க எம் பையனை கரையேத்திருவேன் என்று தன் மகனை கட்டியணைத்து கண்ணீர் விடுகின்றார்.
இப்படி பல பேரின் கதை சொல்ல...ஆச்சரியமாக உள்ளது. வைத்தியரிடம் கேட்ட போது இந்த வைத்தியம் முதல் ஸ்டேஜ்ல இருந்தால் 100%குணப் படுத்தி விடலாம். ஆனால் நம்பிக்கையிருப்பதில்லை... சுற்றிவிட்டுதான் இங்கு வருகின்றார்கள். நான்காவது ஸ்டேஜ்ஜில் 80%பேரை பிழைக்க வைத்திருக்கின்றேன்... அதற்கு மேல் இறைவன் கருணை என்றார்.
இது சாத்தியமா? உண்மையா? என்று அவநம்பிக்கையோடுதான் சென்றேன். அங்கு இருந்த மருந்து வாங்க வந்த 100பேர்களின் கதைகளை கேட்ட போது நம்பிக்கையுள்ளது.
யாராவது உங்களுக்கு தெரிந்தவர்கள் கை விடப்பட்ட நிலையில் இருந்தால் இங்கு அனுப்புங்கள் இன்னும் கொஞ்சம் காலம் வாழட்டும்.
Thanks K.S. Suresh Kumar
(அங்க டவரே கிடைக்காது. தொலை தொடர்பு வசதி இல்லை இந்த எண் எப்பொழுதாவது கிடைக்கும் எதற்கும் வைத்துக் கொள்ளவும் 09946097562

××××××÷×÷÷÷÷÷÷÷÷÷÷÷×××××÷×÷÷÷÷÷÷புற்றுநோய்க்கு இயற்கை மருத்துவத்தில் தீர்வு -ஓர் அனுபவப்பகிர்வு.
பதிவிடும் நாள்:14.04.2019
என் பெயர் மகரஜோதி. எனக்கு வயது 42. 2014 ஏப்ரல் மாதம் எனக்கு மார்பகப்புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. 3A stage என்று சொன்னார்கள். கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டேன்.
முதலில் அறுவை சிகிச்சை செய்து இடதுபுற மார்பை நீக்கினார்கள். தொடர்ந்து கீமோதெரபி, ரேடியேசன் என்று ஏழுமாதங்கள் தொடர்சிகிச்சை.
அவ்வளவுக்குப்பிறகும் மீண்டும் கேன்சர் உடலின் பிற பாகங்களில் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பது அப்போது எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு 2016 செப்டம்பரில் இடுப்புவலியும் கால்வலியும் வந்தது. அது கேன்சராக இருக்கலாம் என்றே தெரியாமல் இடுப்புவலிக்கும் கால்வலிக்கும் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டேன். ஆனால் ஆறுமாதங்கள் ஆகியும் வலி குறையவில்லை. எனவே புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்ட அதே மருத்துவரிடம் சென்றேன். பரிசோதனைகளுக்குப்பிறகு இடுப்பு மற்றும் தொடை எலும்புகளில் கேன்சர் கட்டி வளர்ந்திருப்பதை சுட்டிக்காட்டினார். கட்டியின் அளவு 4.4 மிமீ. என்றும் ரேடியேசன் மூலமாக அந்தக்கட்டியை ஓரளவு கரைக்கமுடியும் என்றும் சொன்னார் மருத்துவர். இப்போது கேன்சர் நான்காவது நிலையை (4th stage) அடைந்திருந்தது. ரேடியோதெரபிமூலம் அந்தக்கட்டி 3.2 மி.மீ. அளவிற்குக் குறைந்தது.
முற்றிலும் அந்தக்கட்டியை அகற்றுவதற்கு வழியில்லை என்றும் கேன்சர் மேலும் பரவாமல் இருக்க "Palbace" என்னும் மாத்திரையை எஞ்சிய வாழ்நாள் முழுவதும் எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும் சொன்னார் மருத்துவர்.
அந்த மாத்திரை ஒரு புட்டியின் விலை ரூ.95,000/-. அது ஒரு மாதத்திற்கானது. அந்த மாத்திரை விற்கும் நிறுவனம் நோயாளிக்கு ஒரு சலுகை வழங்குகிறது. தொடர்ந்து பத்து மாதங்கள் பணம் கொடுத்து இந்த மாத்திரை வாங்கினால் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் அந்த மாத்திரையை இலவசமாக வழங்கும். தெரிந்த மருத்துவர் ஒருவர்மூலம் (அவரும் Oncologist) மருந்து நிறுவனத்தினரிடம் பேசி, ரூ.76,000/- க்கு அந்த மாத்திரை வாங்க ஏற்பாடு செய்து மூன்று மாதங்கள் எடுத்துக்கொண்டேன்.
இதற்கிடையில் கருப்பை (Uterus) மற்றும் சினைப்பை (Ovaries) யிலும் சிறுசிறு கட்டிகள் இருப்பதாகவும் அவை கேன்சர் கட்டிகளாக மாற வாய்ப்பிருப்பதாகவும் மருத்துவர் சொன்னதால் கருப்பை மற்றும் சினைப்பை இரண்டையும் அறுவைசிகிச்சை செய்து அகற்றிவிட்டனர். இவற்றை அகற்றியதாலும் கேன்சருக்கு எடுத்துக்கொள்ளும் ஹார்மோன் மாத்திரைகளாலும் எலும்பு தேய்மானம் வரும் என்பதால் அதற்காக மாதம் ஒருமுறை ஒரு இன்செக்சன் போட்டுக்கொள்ளவேண்டியதிருந்தது.
ஆறுமாதங்கள் கழிந்தபிறகு மீண்டும் ஒரு ஸ்கேன் பரிசோதனை செய்ததில் இடுப்பில் இருந்த கட்டி 3.2 மி.மீ.இல் இருந்து 6.6 மி.மீ. வளர்ந்திருப்பதாக தெரியவந்தது. மருத்துவரிடம் கேட்டதற்கு நோயின் தன்மை அத்தகையது என்றும் இயன்றவரை கட்டுக்குள்வைப்பது மட்டுமே சாத்தியம் என்றும் சொன்னார்.
முற்றிலும் நம்பிக்கை இழந்த சூழ்நிலையில் புற்றுநோய்க்கான இயற்கை மருத்துவத்தின் சாத்தியம்குறித்து தேடத்தொடங்கினோம். சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, நியூரோபதி என்று பல இயற்கை மருத்துவ முறைகள்மூலம் புற்றுநோயிலிருந்து பலர் விடுபட்டிருக்கிறார்கள் என்று தெரியவந்தபோது ஒரு நம்பிக்கை பிறந்தது. அவ்வாறான பல முறைகளில் ஒன்று, கேரளா அட்டப்பாடி அருகே சிண்டக்கி என்ற கிராமத்தில் பழங்குடி மக்களால் வழங்கப்படும் "ஒற்றைமூலிகை" மருத்துவம். "வள்ளியம்மாள் குருகுலம்" என்ற பெயரில் எல்லாவிதமான கேன்சருக்கும் மருந்து கொடுக்கிறார்கள்.
முதல்முறை சென்றபோதே அங்கு வந்திருந்த பல நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களிடம் பேசியபோது அவர்களின் அனுபவம் மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது.
என்னை பரிசோதித்த மருத்துவர் சலீமா பத்து மாதங்கள் அவர்கள் கொடுக்கும் மருந்தை சாப்பிடவேண்டும் என்றும் எனக்குள்ள கேன்சரை முற்றிலும் குணமாக்க இயலும் என்றும் நம்பிக்கை தந்தார்.
பிப்ரவரி 2018 ல் முதல்முறை இருபது நாட்களுக்கு மருந்து கொடுத்தார்கள். ஆச்சர்யமான ஒரு மாற்றம் என்னவெனில் அதுநாள்வரையிலும் இடுப்பு மற்றும் தொடைப்பகுதிகளில் கேன்சர் கட்டிகள் இருந்ததால் என்னால் இடதுபுறம் திரும்பிப் படுக்க இயலாது. மேலும் தரையில் உட்காரும்போது காலை மடக்கவும் இயலாதிருந்தது. ஆனால் அந்த இருபது நாட்களிலேயே அந்தப்பகுதிகளில் இருந்த வலி சரியாகி என்னால் இயல்பாக இடதுபுறம் திரும்பிப்படுக்கவும் காலை மடக்கி உட்காரவும் முடிந்தது. அந்த அனுபவம் கொடுத்த உற்சாகத்தில் தொடர்ந்து பன்னிரண்டு மாதங்கள் அந்த மூலிகை மருந்தை சாப்பிட்டு வந்தேன்.
இதேவேளையில் இயற்கை மருத்துவம் குறித்த தொடர்ந்த தேடலில் திரு.ஹீலர் பாஸ்கர் குறித்து தெரியவந்தது. கோவைப்புதூரில் அவர் நடத்திவந்த "நிஷ்டை" நிலையத்தில் ஐந்துநாள் வகுப்பில் கலந்துகொண்டேன்.
அவர் கற்றுக்கொடுத்தபடி எனது உணவுமுறையிலும் வாழ்க்கைமுறைகளிலும் சில மாற்றங்களை செய்துகொண்டேன். உடல் கழிவுநீக்க முறையை தொடர்ந்து ஒருமாதம் மேற்கொண்டேன். உணவை மென்று உண்பது, வாயை மூடி உண்பது, வாரம் ஒருமுறை உண்ணாவிரதம், காலை உணவாக வெறும் பழங்களை மட்டுமே உண்பது, சில யோகாசனங்கள் இவற்றையும் தொடர்ந்து பின்பற்றி வந்தேன்.
திரு.ஹீலர் பாஸ்கர் அவர்கள் கற்றுத்தந்த இந்த வழிமுறைகளும் அவர் வலியுறுத்தும் "நேர்மறையான எண்ணங்கள் நேர்மறையான விளைவுகளை உருவாக்கும்" என்னும் வார்த்தைகள் கொடுத்த நம்பிக்கையும் கேன்சரிலிருந்து நான் மீள்வேன் என்ற மன உறுதியைக் கொடுத்தன. மேலும் அவரது வழிகாட்டலின்படி எனது வாழ்க்கைமுறையில் நான் மேற்கொண்ட மாற்றங்களும்கூட, எனது நோயை வெல்ல ஒரு காரணமாய் அமைந்தது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
ஜனவரி 2019 ல் பன்னிரண்டு மாதங்கள் முடிவடைந்ததும் ஸ்கேன் செய்து பார்க்க முடிவுசெய்தோம். கோவையில் அதே மருத்துவமனையில் பரிசோதனை செய்வதைவிட வேறொரு மருத்துவமனையில் பரிசோதனை செய்தால் செகண்ட் ஒப்பினியன் வாங்கிய திருப்தியும் கிடைக்கும் என்று திருவனந்தபுரத்தில் உள்ள Regional Cancer Centre மருத்துவமனையில் PET scan எடுத்துக்கொண்டேன். பிப்ரவரி மாதம் எடுத்துக்கொண்ட ஸ்கேன் ரிப்போர்ட்டை வாங்க மார்ச் மாதம் சென்றோம். ஸ்கேன் ரிப்போர்ட்டை முழுவதும் பார்த்த மருத்துவர், உடலின் எந்த பகுதியிலும் கேன்சருக்கான அறிகுறியே இல்லை என்றார்.
இடுப்பு எலும்பில் 6.6 மி.மீ. இருந்த கட்டியும் இல்லை. மேலும் அப்போது சிறிய அளவில் கல்லீரல் பகுதியிலும் கேன்சர் கட்டிகள் தென்படுவதாகச் சொல்லியிருந்ததும் இப்போது இல்லை.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல இன்னொரு செய்தியையும் சொல்லவேண்டும். எலும்புகளில் கேன்சர் பரவி நான்காம் நிலையை எட்டியபோது மருத்துவர் என் கணவரைமட்டும் தனியே அழைத்து சொன்னது -"இன்னும் அதிகபட்சம் இரண்டு வருடங்கள்தான் உங்கள் மனைவியின் வாழ்நாள்". அவர் சொல்லி சரியாக இரண்டுவருடம் முடிகிறது. ஆனால் முன்னைவிட இப்போது ஆரோக்கியமாக இருக்கிறேன். கேன்சர் நோயிலிருந்து விடுபட்டும் இருக்கிறேன். இயற்கை/ மூலிகை மருத்துவத்தில் இது சாத்தியம் என்பதற்கு நானே வாழும் உதாரணம்.
இந்த செய்தி அனைவருக்கும் பயன்படவேண்டும் என்ற நோக்கத்தில் இதனைப்பதிவு செய்கிறேன்.
கேரளாவில் மருந்து வழங்குமிடம்:
வள்ளியம்மாள் குருகுலம்,
சிண்டக்கி கிராமம்,
அட்டப்பாடி தாலுகா,
பாலக்காடு மாவட்டம்.
கோவையிலிருந்து ஆனைகட்டி வழியாக 2.30 மணிநேர பயணம்.
இங்கேயே பொன்னியம்மாள் குருகுலம் என்ற பெயரில் அதே குடும்பத்தைச் சேர்ந்த இன்னொருவரும் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கிறார். கேரளாவின் வயநாட்டிலும் கர்நாடகாவில் சிமோகா மாவட்டத்தில் நரசிம்மபுராவிலும் புற்றுநோய்க்கு மூலிகை சிகிச்சை அளிக்கப்படுகிறது.
எனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களோ அவர்களது உறவினர்களோ நம்பிக்கை இழந்துவிடவேண்டாம். இதுபோன்ற மாற்று மருத்துவ வழிமுறைகளை முயற்சிக்கலாம்.
குறிப்பு: சர்க்கரை நோய், கிட்னி நோய்களுக்கும் இந்த மருத்துவத்தில் தீர்வு கிடைக்கிறது.
மேலும் தகவல் தேவைப்பட்டால் எனது அலைபேசிக்கு அழைக்கவும்.
98948 67008
93842 07709

1 comment:

Unknown said...

மிகவும் அருமையான தகவல்.
வாழ்க வளமுடன்.