🌧️ Chill chill rainy evening 🌧️
⭐Hot hot aloo bonda⭐
☕☕☕☕☕☕☕☕☕
🥔உருளைக்கிழங்கு போண்டா🥔
தேவையான ப்பொருட்கள்
உருளைக்கிழங்கு. : 300 கிராம்
வெங்காயம். : 1(பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய். : 1( பொடியாக நறுக்கவும்)
இஞ்சி பூண்டு விழுது. : 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள். : 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள். : 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள். : 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை : சிறிது
கடலைமாவு. : 2 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு. : 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை
1. உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து தோல் நீக்கி கெட்டி தன்மை இல்லாமல் பிசைந்து கொள்ளவும்.
2. அதில் வெங்காயம் பச்சைமிளகாய் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் கொத்தமல்லி புதினா இலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
2. கடலைமாவு மற்றும் அரிசி மாவில் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
3. பஜ்ஜி மிக்ஸ் வீட்டில் இருந்தால் அதை உபயோகித்து கொள்ளலாம்.
4. உருளைக்கிழங்கு கலவையை தேவையான அளவு உருண்டைகளாக உருட்டி இந்த மாவில் நன்றாக முக்கி எடுத்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
5. தக்காளி சாஸ் அல்லது புதினா சட்னியுடன் பரிமாறவும்.
🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧
No comments:
Post a Comment