Thursday, 6 October 2016

எக்ஸாம் சீஸன் எனர்ஜெடிக் உணவுகள்!!!(Food for Exam-going Students)

வல்லாரைக் கீரை பருப்புமசியல்

தேவையானவை:
வல்லாரைக் கீரை – ஒரு கட்டு
துவரம்பருப்பு – ஒரு கப்
தக்காளி – 1
சின்ன வெங்காயம் – 10
காய்ந்த மிளகாய் – 2
பூண்டு – 2 பல்
சீரகம், வெந்தயம் – தலா கால் டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
image (2)






செய்முறை:
துவரம்பருப்பை ஒரு சிட்டிகை பெருங்காயம், சீரகம், வெந்தயம், மஞ்சள்தூள் சேர்த்து வேக
வைக்கவும். வெங்காயம், தக்காளி, பூண்டுப்பல் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக்
கொள்ளவும். வல்லாரைக் கீரையை சுத்தம் செய்யவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து
சூடாக்கி கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு நறுக்கிய பூண்டு,
வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இத்துடன் சுத்தம் செய்த வல்லாரைக் கீரையைச்
சேர்த்து வதக்கவும். கீரை சிறிது வெந்ததும், வேகவைத்த பருப்பு, உப்பு சேர்த்துக் கொதிக்க
விடவும். எல்லாம் சேர்ந்து கொதித்து வந்ததும், இறக்கவும்.
சூடான சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி என எல்லா வகையான உணவுகளுடனும்
சேர்த்து சாப்பிடலாம். வல்லாரை, ஞாபக சக்தியைத் தூண்டும். வல்லாரைக் கீரையைச்
சமைக்கும் போது, புளி சேர்த்தால், வல்லாரையின் சத்துக்கள் அழிந்து விடும். வல்லாரைக்
கீரையை வாரம் இருமுறை மட்டுமே உணவில் சேர்க்க வேண்டும். தினசரி சாப்பிடக்
கூடாது. தேர்வு நேரம் மட்டுமின்றி வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் நல்ல
பலன் கிடைக்கும்.

வல்லாரைநன்னாரிசர்பத்

தேவையானவை:
வல்லாரைக்கீரை – ஒருகைப்பிடிஅளவு
எலுமிச்சைப்பழம் – ஒன்றில்பாதி
நன்னாரிசிரப் – 2 டீஸ்பூன்
தேன் – 2 டீஸ்பூன்
புதினாஇலை – 2
இஞ்சிச்சாறு – ஒருடீஸ்பூன்
உப்பு – ஒருசிட்டிகை
d











செய்முறை:
சுத்தம் செய்த வல்லாரைக் கீரையை ஒரு பாத்திரத்தில் சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கீரையைக் கொதிக்கவிடவும்.
10 நிமிடம்கழித்து அடுப்பை அணைத்துவிட்டு கீரையை ஆறவிடவும்.பிறகுவடிகட்டவும். இந்த தண்ணீருடன் நன்னாரிசிரப், தேன், இஞ்சிச்சாறு, எலுமிச்சைச்சாறு, புதினாஇலை, உப்பு சேர்த்து நன்கு கலக்கி வடிகட்டிப் பருகவும்.
தேர்வுக்கு அதிக நேரம் விழித்துப்படிப்பதால், உடலில் ஏற்படும் சூட்டை இது தணிக்கும். நன்னாரி சேர்ப்பதால் உடல் குளிர்ச்சியாகும். வல்லாரை ஞாபகசக்தி தரும்.புத்துணர்ச்சி தரக்கூடிய பானம் இது.

மஷ்ரூம்காட்டிரோல்

தேவையானவை:
மொட்டுக்காளான் – 200 கிராம்
தக்காளி – ஒன்று
வெங்காயம் – ஒன்று
இஞ்சி-பூண்டுவிழுது – ஒருடீஸ்பூன்
பட்டை – சிறியதுண்டு
கிராம்பு – ஒன்று
ஏலக்காய் – ஒன்று
சோம்பு – கால்டீஸ்பூன்
புதினா, கொத்தமல்லித்தழை – தேவையானஅளவு
உப்பு – தேவையானஅளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால்டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒன்றரைடீஸ்பூன்
சப்பாத்தி – 4
நெய் – 2 டீஸ்பூன்
5






செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, இஞ்சி, பூண்டு விழுது, சிறிது புதினா, கொத்தமல்லித்தழை இவற்றைச் சேர்த்து வதக்கவும். அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்க்கவும். சுத்தம் செய்த காளானை நறுக்கி அதனுடன் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது நீர் தெளித்து வதக்கவும். காளான் வெந்ததும், மீதமுள்ள புதினா கொத்தமல்லித்தழை தூவிக் கிளறி இறக்கவும். சப்பாத்தியை எடுத்து சிறிது நெய்தடவி, காளான் மசாலாவை வைத்து சுருட்டிப் பரிமாறவும்.
தேர்வுக்குப் படிக்கும்போதோ, கிளம்பும்போதோ சாப்பிடாமல் செல்பவர்களுக்கு இப்படி ரோல் மாதிரி செய்துகொடுப்பதால் சாப்பிட லேசாக இருக்கும். மஷ்ரூம் புரதம் நிறைந்தஉணவு. தேவையான சத்து கிடைப்பதால் சோர்வடையாமல் இருக்கமுடியும். இந்த மசாலாவை இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம்.சாதத்தில் போட்டும் சாப்பிடலாம். பிரெட்டில் தடவியும் சாப்பிடலாம். பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித்தரும் அம்மாக்கள் எளிதாகச் செய்யக்கூடிய சத்தான உணவு இது.

முளைப்பயறுபிடிக்கொழுக்கட்டை

தேவையானவை:
வேகவைத்தமுளைப்பயறு – ஒருகப்
ஓட்ஸ்பவுடர் – கால்கப்
வேகவைத்துமசித்தஉருளை – ஒன்று
மிளகாய்த்தூள் – ஒருடீஸ்பூன்
உப்பு – தேவையானஅளவு

6







செய்முறை:
முளைவிட்ட பாசிப்பயறை வேகவைத்து ஒன்றும், பாதியுமாக மசித்துக்கொள்ளவும். இதனுடன் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு பொடித்த ஓட்ஸ், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த கலவையிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து, நீளவாக்கில் உருட்டி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். எளிதில் ஜீரணமாகக்கூடிய எளிதாகச் செய்யக்கூடியதுமான சத்தான மாலைநேர உணவு. முளைகட்டியப்பயறு, உருளைக்கிழங்கு ஆகியவை தேர்வுக்குப்படிக்கத் தேவையானபுரதம், கார்ப்போ-ஹைட்ரேட் சத்துக்களைத் தரும்.

கம்பு-பாதாம்டிரிங்க்

தேவையானவை:
கம்புமாவு – 2 டேபிள்ஸ்பூன்
பாதாம்பவுடர் – ஒருடேபிள்ஸ்பூன்
வெல்லம் – 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் – கால்டீஸ்பூன்
பால் – அரைடம்ளர் (தேவைப்பட்டால்)
7










செய்முறை:
ஒரு டம்ளர் நீரில் கம்புமாவைக் கரைத்துக் கொதிக்கவைக்கவும். கெட்டியானதும் இறக்கி ஆறவிடவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். ஆறிய கம்புமாவுடன் பால், பாதாம்பவுடர், ஏலக்காய்த்தூள், கரைத்த வெல்லம் என எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவும். இதை டம்ளரில் ஊற்றி சூடாகவோ, குளிரவைத்தோ பருகவும். பால் தேவைப்பட்டால் காய்ச்சிய பால்கூடசேர்த்துக்கொள்ளலாம். இதையே கெட்டியாக காய்ச்சி கூழாகவும் சாப்பிடலாம்.
கண்விழித்து படிப்பதனால் ஏற்படும் உடல்சூட்டை இந்த டிரிங்க் தணிக்கும். கம்பில் இரும்பு மற்றும் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. பாதாம்பவுடர் மூளை சுறுசுறுப்புடன் செயல்பட உதவும்.

மில்லட்நியூட்ரிபால்ஸ்

தேவையானவை:
மில்லட்ஃப்ளேக்ஸ் – ஒருகப்
பாதாம்பவுடர் – 2 டேபிள்ஸ்பூன்
பொடித்தமுந்திரி – ஒருடேபிள்ஸ்பூன்
தேன் – 2 டேபிள்ஸ்பூன்
பொடித்தவேர்க்கடலை – கால்கப்
பனங்கல்கண்டுப்பொடி – 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப்பொடி – ஒருடேபிள்ஸ்பூன்
வெண்ணெய் – ஒருடேபிள்ஸ்பூன்
8








செய்முறை:
வெண்ணெயுடன் பனங்கல் கண்டுப்பொடி சேர்த்து நன்கு குழைத்துக்கொள்ளவும். மில்லட் ஃப்ளேக்ஸை கைகளால் நொறுக்கிக்கொள்ளவும். குழைத்து வைத்துள்ள வெண்ணெய் கலவையில் மில்லட்ஃப்ளேக்ஸ், பாதாம்பவுடர், பொடித்தமுந்திரி, வேர்க்கடலை, தேன் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு இதை சிறுஉருண்டைகளாக உருட்டி, தேங்காய்ப் பொடியில் புரட்டியெடுத்துப் பரிமாறவும். எளிதான சத்தான தின்பண்டம் இது. படிப்பதற்கு நடுநடுவே சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்றது.

தினை-பேரீச்சைபான்கேக்

தேவையானவை:
தினைமாவு – அரைகப்
கோதுமைமாவு – அரைகப்
முட்டை – ஒன்று (விருப்பப்பட்டால்)
பால் – கால்கப்
உப்பு – ஒருசிட்டிகை
பேரீச்சம்பழம் – 10
பாதாம்பருப்பு – 6
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
வெனிலாஎசன்ஸ் – ஒருசொட்டு
9







செய்முறை:
தினைமாவு, கோதுமைமாவு, சிட்டிகைஉப்புபால்சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவுபதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். முட்டை சேர்ப்பதாக இருந்தால், முதலில் முட்டையை நன்கு அடித்து பிறகு மாவுடன் சேர்க்கவும். பேரீச்சம்பழத்தை விதைநீக்கி, சிறுதுண்டங்களாக நறுக்கவும். பாதாம்பருப்பைப் பொடியாக நறுக்கவும். பேரீச்சம்பழம், பாதாம்பருப்பை மிக்ஸிஜாரில் போட்டு ஒரு சுழற்றுசுழற்றி எடுக்கவும். தோசைக் கல்லைச்சூடாக்கி, வெண்ணெயை உருக்கி மாவை ஊற்றி தோசைசுடவும். இருபுறமும் வேகவிட்டு, அதன் நடுவேபேரீச்சம்பழம், பாதாம்கலவையை வைத்துமூடிப்பரிமாறவும். விருப்பப்பட்டால், சிறியதுண்டுகளாக நறுக்கியும் பரிமாறலாம். (முட்டைசேர்த்தால்வெனிலாஎசன்ஸ்சேர்க்கவும்) புரதமும் இரும்புச்சத்தும் நிறைந்த உணவு இது, பாதாம்பருப்பு மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

தினைவல்லாரைசப்பாத்தி

தேவையானவை:
தினைமாவு – அரைகப்
கோதுமைமாவு – அரைகப்
வல்லாரைக்கீரை – கால்கப்
உப்பு – தேவையானஅளவு
சீரகம் – ஒருடீஸ்பூன்
ஓமம் – கால்டீஸ்பூன்
எண்ணெய் – தேவையானஅளவு
நெய் – 2 டீஸ்பூன்
10






செய்முறை:
தினைமாவு, கோதுமைமாவு, உப்பு, சீரகம், ஓமம், பொடியாக நறுக்கிய வல்லாரைக்கீரை நெய் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். பிறகு தேவையான அளவு நீர் சேர்த்து சப்பாத்திமாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும். பிறகு சப்பாத்திகளாகத் தேய்த்து, சூடான தவாவில் இட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுத்தால் தினைவல்லாரை சப்பாத்திரெடி, சப்பாத்தி மீது விருப்பப்பட்டால் சிறிது நெய்தடவி சாப்பிடலாம்.
தேர்வுநேரத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை பிள்ளைகளுக்குச் செய்துதரவும். ஆவியில் வேகவைத்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. அதிகம் எண்ணெயில் பொரித்த உணவுப்பண்டங்களைத் தவிர்க்கவும். தினசரி இரண்டு பாதாம் பருப்பு சாப்பிடுவது நல்லது. கண் விழித்துப் படிக்கும் போது காபி, டீக்குப்பதில் பாதாம்பால், கடலை மிட்டாய் போன்றவற்றை எடுத்துக்கொள்ளவும்.