Saturday, 6 February 2016

Remedies 2!!!

ஆஸ்துமா




தூதுவளைக் கீரையுடன் மிளகு, சுக்கு, திப்பிலி, தாளிசபத்திரி ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கி வடிகட்டி தேன் கலந்து சாப்பிட்டால், மூச்சுத்திணறல், ஆஸ்துமா, குளிர்க்காய்ச்சல் போன்றவை குணமாகும்.




முசுமுசுக்கைக் கீரை சாறு எடுத்து அதில் திப்பிலியை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி, மூன்று சிட்டிகை அளவு பொடியை ஒரு வெற்றிலையில் வைத்து, தேனில் குழைத்து, வெற்றிலையோடு சாப்பிட்டால் ஆஸ்துமா குணமாகும்.




முசுமுசுக்கைக் கீரை சாறில் சிறிது கோரோசனை கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சிரைப்பு குணமாகும்.




துயிலிக் கீரை சாறில் சித்தரத்தையை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டால் மூச்சிரைப்பு, ஆஸ்துமா குணமாகும்.


இடுப்பு வலி




நச்சுக் கொட்டைக் கீரையை தொடர்ந்து 21 நாள்கள் சாப்பிட்டால் இடுப்பு வலி, கழுத்து வலி குணமாகும்.


இதய நோய்கள் குணமாக




மணத்தக்காளி கீரையோடு, பூண்டு 4 பல், நான்கு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.




கொத்தமல்லிச் சாறு, பூண்டுச் சாறு, வெங்காயச் சாறு மூன்றையும் சம அளவில் எடுத்து, தேன் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் 30 மிலி அளவுக்குச் சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.




பிரண்டைத் தண்டுடன், வாதநாராயணன் இலை, பூண்டு, மிளகு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.




வல்லாரை இலை (4), அக்ரூட் பருப்பு (1), பாதாம் பருப்பு (1), ஏலக்காய் (3), மிளகு (3) ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து கொஞ்சம் கற்கண்டோடு அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், கடுமையான இதய நோய்கள் குணமாகும்.




ஆரைக்கீரை, தாமரைப் பூ இரண்டையும் சம அளவு எடுத்து, ஏலக்காயை (4) தட்டிப்போட்டு கஷாயமாக்கிச் சாப்பிட்டால் இதய நோய்கள் அனைத்தும் குணமாகும்.




வாதநாராயணன் கீரையுடன் சுக்கு, ஓமம், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.




வங்கார வள்ளைக் கீரைச் சாறில் பூண்டை (ஒரு பல்) அரைத்துச் சாப்பிட்டால் இதய நோய்களும், இரத்த அழுத்தமும் குணமாகும்.


இரத்த அழுத்தம்




முருங்கைக் கீரை சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் இரத்த அழுத்தம், இதய நோய்கள் குணமாகும்.




பொன்னாங்கண்ணிக் கீரைச் சாற்றில் 5 கிராம் சீரகத்தைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் இயல்பு நிலைக்குத் திரும்பும்.




முசுமுசுக்கைக் கீரைச் சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை, மாலை இரு வேளையும் 2 கிராம் அளவு சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீராகும்.




ஆரைக்கீரைச் சாறில் சீரகத்தை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவு சாப்பிட்டால், இரத்த அழுத்த நோய் குணமாகும்.




மணலிக் கீரை சாறில் சீரகத்தை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீராகும்.




சுக்குக்கீரையுடன் ஒரு கைப்பிடி அளவு துளசியைச் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால், இரத்த அழுத்தம் குணமாகும்.


இரத்த ஓட்டம்




தூதுவளைக் கீரையை பூண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த ஓட்டம் சீராகும்.


இரத்தக் குறைவு




இரத்தக் குறைவால் சிலருக்கு மயக்கம் வருவதுண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணிக் கீரையைக் கொண்டு வந்து காய வைத்து இடித்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு, தினசரி காலை மாலை ஒரு ஸ்பூன் தேனில், ஒரு ஸ்பூன் பொடியைக் குழைத்துச் சாப்பிட்டு வரவும்.


இரத்தம் சுத்தம்




இரத்தம் சுத்தமில்லாவிட்டால் சில கோளாறுகள் உடம்மில் ஏற்படுகின்றன. இரத்தத்தைச் சுத்தப்படுத்த, பூசணிக்காயை இடித்துச் சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சுத்தமான தேனைக் கலந்து காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு வரவும். இரத்தம் சுத்தமாகும். பூசணிக்காய் ஒத்துக்கொள்ளாதவர்கள் இதனைச் செய்ய வேண்டாம்.




அரை கீரைச் சாறில் ஒரு கிராம் ஏலரிசியை (ஏலக்காய் விதை) சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும்.




புதினா இலை மற்றும் வேப்பிலை இரண்டையும் சம அளவு சேர்த்து அரைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இரத்தம் தூய்மையாகும்.




வெந்தயக் கீரையுடன் சிறிது வாழைப்பூ, மிளகு சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் இரத்தம் தூய்மையாகும். தோல் நோய்களும் குணமாகும்.




தூதுவளைக் கீரையுடன் சம அளவு வேப்பந்துளிர் சேர்த்து கஷாயமாக்கி, அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், இரத்தம் தூய்மையாகும். கிருமிக் கோளாறுகள் நீங்கும்.




பொடுதலைக் கீரையுடன் கடுக்காய் (1), நெல்லிக்கனி (1), தான்றிக்காய் (1) மூன்றையும் தட்டிப்போட்டு கஷாயமாக்கிச் சாப்பிட்டால், இரத்தம் சுத்தமாகும். உடல் வலிமை உண்டாகும்.




அம்மான் பச்சரிசி கீரையுடன் மிளகு (3), வேப்பிலை (3) இரண்டையும் சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும்.




புளியாரைக் கீரையுடன் சிறிது வேப்பந்துளிர், மிளகு (3), மஞ்சள் தூள் ( 2 சிட்டிகை) ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் இரத்தம் தூய்மையாகி, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.




சுக்காங் கீரையுடன் வேப்பிலை (இரண்டு), சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும். தோல் நோய்களும் குணமாகும்.




பாற்சொரிக் கீரையுடன் சிறிது சோம்பு சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும்.

No comments: