தானென்ற நாயுருவி வித்து தன்னை
தன்மையினால் முலைப்பாலில் உரைத்து மைந்தா
பானென்ற பசுப்பாலில் கரைத்துக் கொண்டு
பாங்கான எட்டிவிரை உரைத்துக் கொண்டு
தேனென்றே தியானித்துக் கொண்டாயாகில்
செவ்வியை வயிறு பசி எடுப்பதில்லை
நானென்று எத்தனை நாள் இருந்தாலுந்தான்
நளினமுடன் பசியாது மைந்தா பாரே"
- அகத்தியர் -
நாயுருவி வித்து எடுத்து முலைப்பால் விட்டு அரைத்து எடுத்துக் கொண்டு, எட்டி விதை ஒன்றையும் அரைத்து எடுத்து இரண்டையும் பசும்பாலில் கரைத்து இறைவனை வணங்கிக் கொண்டு அருந்தினால் வயிறு பசி எடுக்காது என்று சொல்லும் அகத்தியர் எத்தனை நாள் சென்றாலும் பசி எடுக்காது என்கிறார்.
"பாரப்பா பசிஎளுப்ப வேண்டுமென்றால்
பண்பாக சொல்லுகிறேன் மைந்தா கேளு
வீரப்ப எலும்பியதோர் மஞ்சளிஞ்சி
விரும்பியே தின்றிடவே வேகம் கொண்டு
காரப்ப மூல அக்கினியே நீறும்
கடும்பசிதா னெடுக்குமாடா கருவாய்ப்பாரு
தெறப்பா மனந்தேறி கருவாய்ப் பார்த்தால்
சித்து வித்தை அநேகமுண்டு தெளிந்து காணே"
- அகத்தியர் -
மீண்டும் பசி எடுக்க வேண்டும் என்றால் ஒரு மஞ்சள் இஞ்சியை தின்ன வேண்டும் என்று சொல்வதோடு மஞ்சள் இஞ்சி தின்றால் கடும் பசி உண்டாகும் அத்துடன் தூய, நல்ல மனதுடன் தேடுபவர்களுக்கு இதுபோல பல சித்துமுறை தெரியவரும் என்கிறார்TEXT TEXT