Thursday, 8 May 2014

ரசப்பொடி!!!


ரசப்பொடி:

                                                                                                                                       

பொடி செய்ய தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  துவரம் பருப்பு - 1/4 கப்
  .  கடலைப்பருப்பு - 2 மேஜை கரண்டி
  .  மிளகு - 1/4 கப்
  .  சீரகம் - 1/2 கப்
  .  தனியா - 1 கப்
  .  காய்ந்த மிளகாய் - 15
  .  பூண்டு - 5 பல் தோலுடன் (விரும்பினால் சேர்த்து கொள்ளவும்.)
  .  
வெந்தயம் - 1/4 தே.கரண்டி
  .  பெருங்காயம் - 1 தே.கரண்டி
  .  மஞ்சள் தூள் - 2 தே.கரண்டி



செய்முறை :
  .  கடாய் சூடானதும் அதில் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, தனியா , காய்ந்தமிளகாய், வெந்தயம் ஒன்றின் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக 2 - 3 நிமிடங்கள் வறுத்து கொள்ளவும்.

  .  சூடாக இருக்கும் பொழுது  மிளகினை அத்துடன் சேர்த்து அடுப்பில் இருந்து எடுத்து சிறிது நேரம் ஆறவிடவும்.

  .  மிக்ஸியில் வறுத்த பொருட்கள் + பெருங்காயம் + மஞ்சள் தூள் + சீரகம் சேர்த்து நன்றாக பொடித்து கொள்ளவும்

  .  கடைசியில் இத்துடன் பூண்டினை சேர்த்து Pulse Modeயில் 2 -3 முறை அடித்து கொள்ளவும்



  .  இப்பொழுது ரசப்பொடி ரெடி. ரசம் தயாரிக்கும் பொழுது புளி கரைசலுடன் இந்த பொடியினை சிறிது சேர்த்து ரசம் வைத்தால் சூப்பரான சுவையுடன் இருக்கும்.