Tuesday, 10 December 2013

சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள்!!!

1. இந்த பொடி வகைகளில் தேங்காய் பொடி யும் பருப்பு பொடியும் ரொம்ப பிரசித்தம். முதலில் தேங்காய் பொடியை பார்போம்.

1 Cup தேங்காய் துருவல்
1 Tea spoon உளுத்தம் பருப்பு
1 Tea spoon கடலை பருப்பு
10 குண்டு மிளகாய் வற்றல்
1 Pinch பெருங்காயம்
1/2 Spoon எண்ணை
கோலி குண்டு அளவு புளி
உப்பு

செய்முறை:

தேங்காய் துருவலை நல்ல சிவப்பாக வறட்டு வாணலில் வறுக்கவும்.
கருகாமல் வறுக்கணும்.
புளியை சின்ன சின்ன துண்டுகளாக பிய்த்து நன்கு வறுக்கவும்.
கரகரப்பாக வறுக்கவும்.
இப்போது எண்ணை விட்டு, மற்றசாமான்களை வறுக்கவும். .
ஆறினதும் மிக்சி இல் போட்டு உப்பு சேர்த்து அரைக்கவும்.
பாட்டில் ல போட்டு வைக்கவும்.
தேவையான போது சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடி போட்டு பிசைந்து
சாப்பிடவும்.
தொட்டுக்கொள்ள கெட்டித் தயிர் போறும்.

2. பருப்பு பொடி , இது சுலபமாக செய்யக்குடியகூடியது ஆனால் சுவை மிகுந்தது. 

தேவையானவை:

1 கப் துவரம் பருப்பு
10 மிளகாய் வற்றல்
1 டீ ஸ்பூன் மிளகு
உப்பு

செய்முறை:

முதலில் உப்பை வறட்டு வாணலில் வறுக்கவும்.
பிறகு மிளகு, பிறகு மிளகாய் வற்றல், பிறகு துவரம் பருப்பு என் ஒவ்வொன்றாக தனி தனியாக வறுக்கவும்.
மிஷினில் கொடுத்து நல்ல 'நைசாக' அரைக்கவும்.
வீட்டில் அரைத்தால் நன்கு சலித்துவிட்டு மறுபடி அரைக்கணும் .
இதற்கு தொட்டுக்கொள்ள வத்த குழம்பு சூப்பர் ஆக இருக்கும்., ஆவக்காய் அருமையாக இருக்கும்.
சுடு சாதத்தில் நிறைய நல்லெண்ணெய் விட்டு பருப்பு பொடி போட்டு கலந்து சாப்பிடனும். சாதம் உதிறாய் இருந்தாலும் நல்லா இருக்கும், குழைந்து இருந்தாலும் நல்லா இருக்கும்.

குறிப்பு: வத்தக்குழம்பு சாப்பிடும் போது அதன் மேல் பருப்பு பொடி துவிண்டும் சாப்பிடலாம் 

3. மசாலா பருப்பு பொடி/ பூண்டு பருப்பு பொடி
தேவையானவை:

1 கப் துவரம் பருப்பு
10 மிளகாய் வற்றல்
1 டீ ஸ்பூன் மிளகு
10 பல் பூண்டு
உப்பு

செய்முறை:

முதலில் உப்பை வறட்டு வாணலில் வறுக்கவும்.
பிறகு மிளகு, பிறகு மிளகாய் வற்றல், பிறகு துவரம் பருப்பு என் ஒவ்வொன்றாக தனி தனியாக வறுக்கவும்.
பூண்டு பற்களை உரித்து அப்படியே போட்டு அரைக்க தரனும்.
மிஷினில் கொடுத்து நல்ல 'நைசாக' அரைக்கவும்.
கொஞ்சம் பூண்டு வாசத்துடன் நன்ன்றாக இருக்கும்.
ஆனால் இதை fridge இல் வைப்பது நல்லது.
(பூண்டில் கொஞ்சம் ஈரப்பசை இருக்கும் அல்லவா அதுதான் "fridge " லவைக்கணும்.)

4. கறிவேப்பிலை பருப்பு பொடி
தேவையானவை:

1 கப் துவரம் பருப்பு
10 மிளகாய் வற்றல்
1 டீ ஸ்பூன் மிளகு
1 கொத்த்து கறிவேப்பிலை ( நன்கு காய்ந்தது )
உப்பு

செய்முறை:

முதலில் உப்பை வறட்டு வாணலில் வறுக்கவும்.
பிறகு மிளகு, பிறகு மிளகாய் வற்றல், பிறகு துவரம் பருப்பு என் ஒவ்வொன்றாக தனி தனியாக வறுக்கவும்.
காய்ந்த கறிவேப்பிலை யும் அப்படியே போட்டு அரைக்க தரனும்.
மிஷினில் கொடுத்து நல்ல 'நைசாக' அரைக்கவும்.
கொஞ்சம் கலர் கம்மியாக இருக்கும் ஆனால் வாசனையாக நன்றாக இருக்கும்.

5. வறட்டு தனியா பொடி
தேவையானவை:

1 Cup தனியா
2 Tea spoon உளுத்தம் பருப்பு
2 Tea spoon கடலை பருப்பு
10 - 12 குண்டு மிளகாய் வற்றல்
1 Pinch பெருங்காயம்
1/2 Spoon எண்ணை
கோலி குண்டு அளவு புளி
உப்பு
மிளகு கொஞ்சம் ( தேவையானால் )

செய்முறை:

தனியாவை ஜஸ்ட் எண்ணெய் தடவிய வாணலில் வறுக்கவும்.
கருகாமல் வறுக்கணும்.
புளியை சின்ன சின்ன துண்டுகளாக பிய்த்து நன்கு வறுக்கவும்.
கரகரப்பாக வறுக்கவும்.
இப்போது எண்ணை விட்டு, மற்றசாமான்களை வறுக்கவும். .
ஆறினதும் மிக்சி இல் போட்டு உப்பு சேர்த்து அரைக்கவும்.
பாட்டில் ல போட்டு வைக்கவும்.
தேவையான போது சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடி போட்டு பிசைந்து
சாப்பிடவும்.

குறிப்பு: இந்த பொடியை வறுத்த கறிகள் செய்யும் போது தூவலாம். பருப்பு சாம்பாரில் கடைசியில் கொஞ்சம் போட்டு இறக்கலாம். சுவை கூடும்.

6. பூண்டு பொடி
தேவையானவை:

10 பல் பூண்டு
ஒரு டேபிள் ஸ்பூன் பொட்டு கடலை
ஒரு டேபிள் ஸ்பூன் வறுத்த வேர்கடலை
ஒரு டீ ஸ்பூன் மிளகாய் பொடி
உப்பு

செய்முறை:

எல்லாவற்றையும் மிக்சி இல் பொட்டு பொடிக்கவும்.
வாசனையாக நல்ல இருக்கும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடி போட்டு பிசைந்து
சாப்பிடவும்.

குறிப்பு: எந்த காய்க்கும் , குருமாக்கும் இந்த பொடிய போடலாம்.
--------------------------