Saturday, 14 July 2018

Sambhar Powder!!!

சாம்பார் பொடி தயாரிக்கும் முறை.

தென் இந்தியாவில் புகழ் பெற்றது சாம்பார், பாரம்பரிய உணவான இந்த சாம்பார் அன்றாட உணவில் முக்கிய இடம்வகிக்கிறது. சாம்பாரின் சுவை ரகசியம் சாம்பார் பொடி, இந்த சாம்பார் பொடி கூடுதல் சுவையும், மனமும் அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. தேர்தெடுக்கப்பட்ட மசாலா பொருட்களை குறிப்பான விகிதத்தில் கலந்து பக்குவமாய் வறுத்து அரைப்பதே இந்த சாம்பார் மசாலாவின் தனிச்சிறப்பு. கடைகளில் கூடுதல் விலைக்கு வாங்கும் சாம்பார் பொடியை விட பல மடங்கு பயனளிக்கக்கூடியது.

தேவையான பொருட்கள் :

சிவப்பு மிளகாய் – 1 கிலோ
மல்லி – 1 கிலோ
சோம்பு -200 கிராம்
சீரகம் – 200 கிராம்
வெந்தயம்- 100 கிராம்
பெருங்காயம் – 50 கிராம்
மஞ்சள் -50 கிராம்
மிளகு – 50 கிராம்
கடலை பருப்பு-100 கிராம்
துவரம் பருப்பு- 50 கிராம்
பச்சரிசி – 50 கிராம்.

செய்முறை :

ஒவ்வொன்றையும் தனித்தனியாக வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் வறுக்கவும்.

பொன்னிறமாக வறுத்தபின் அதை ஒன்று கலந்து ஆறவிடவும்.

ஆறியபின் மில்லில் கொடுத்து நைசாக அரைக்கவும்

பிறகு அரைத்த் பொடியை மறுபடியும் ஆற விடவும்.
செட்டிநாட்டு சாம்பார் மசாலா பொடி தயார்.

குறிப்பு:

* காரம் குறைவாக பயன்படுத்துபவர்கள் மல்லியை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

* சாம்பார் பொடி தயாரிக்கும் போது, வறுக்கும் பொருட்கள் கருகிவிடாமல் பார்த்து கொள்ளவேண்டும்.

இதை ஆறு மாதம் வரை காற்று புகாத கொள்கலனில் அடைத்து வைத்து பயன்படுத்தலாம். இது சாம்பார், காரக்குழம்பு கூட்டு, மசாலா வகை, பொரியல்,பச்சடி,மற்றும் சைவம், அசைவம் இரண்டுக்கும் ஏற்றது

Saturday, 7 July 2018

Liver 'Remedy!!!

 a so-called liver remedy, and I have seen good results from it in liver troubles, yet I do not know of any special indications for its use. I have known cases of habitual colic from gall stones checked and the further formation of the stones prevented by this remedy.

CARDUUS MARIANUS

By Obaidullah