Thursday, 13 October 2016

மூட்டு வலிக்கு-தைலம் தேய்க்க வேண்டிய மர்ம புள்ளிகள்!!!


கால் வலி உள்ள பல நோயாளிகளை தினமும் பார்க்கிறேன் ..அவர்கள் செய்யும் மிக பெரிய தவறு எண்ணைகளை ஒழுங்காக தேய்ப்பதே இல்லை .
உள்மருந்துகளை சாப்பிடும் ஆர்வம் காட்டும் அதே நோயாளிகள் எண்ணைகளை தேய்ப்பதில் இல்லை
காரணம்

அடி வயிறு ,தொடையின் மேல்பக்கம் -இடுப்பெலும்பு சேருமிடம் ....
இந்த இடத்தில்தான் சக்தியே ஒளிந்து கிடக்கிறது ...


எலும்பை ஒட்டிய காலின் வெளிபகுதி -மூன்று இடங்கள் -இரத்த ஓட்டத்தை ஒழுங்கு படுத்தும்

பின் பக்க காலில் எண்ணெய் தேய்க்காமல் கால் வலி குறையவே குறையாது ..
இது மிக முக்கியம் ..இது தான் ஆணி வேர் ..


வெளிப்பகமுள்ள இந்த நரம்பு காலுக்கு வலுவை கொடுக்கும் ..இங்கேயும் தைலம் தேய்க்கணும் ..

வெளிபகமுள்ள இந்த புள்ளிகள் -கணுக்காலுக்கும் ,மூட்டுக்கும் உள்ள இணைப்பை வலு படுத்தும் ..
இந்த புள்ளிகள் சதை நார்கள்..இந்த நார் இல்லாமல் மனித மாலை கிடையாது

மூட்டுக்கு அதிக வேலை கொடுத்தவர்களுக்கு இந்த நரம்பில் வலு இருக்காது
விளையாட்டு வீரர்களுக்கும் ,அடிபடுவதாலும் இந்த புள்ளி எளிதில் பாதிப்பு அடையும்

சதை நார் கிழிந்து விட்டது என்று இதை தான் சொல்வார்கள்

பின் உள்ள இந்த புள்ளிக்கு -மனிதனை தாங்கும் வேர் என்று பெயர் ..




மேலேயுள்ள இந்த வட்டத்தில் தைலம் தேய்த்து வந்தால் ..மூட்டு வலி பறந்து மறைந்து போகும்



சஞ்சீவி சூரணம்(Herbal Powder for All Diseases)

                                 
                  Image result for sanjeevi churanam images




சரஸ்வதி கடாட்சம் தரும் சஞ்சீவி சூரணம்
அனைத்து சகோதரர்களுக்கும் ஆத்ம நமஸ்காரம்
பரமசிவன் பார்வதிதேவிக்கு உபதேசித்த கற்ப மருந்தான சஞ்சீவி சூரணம்
சதகுய்பை 35 கிராம்
சீரகம் 35 கிராம்
மகிழ வித்து 35 கிராம்
அதிமதுரம் 35 கிராம்
லவங்கய் பட்டை 35 கிராம்
தேத்தான் வித்து 17 1/2 கிராம்
கொத்தமல்லி விதை 216 கிராம்
சீனிச் சர்க்கரை 310 கிராம்
மேற்பட்ட எல்லாவிதமான சரக்குகளை
பொடி செய்து சர்கரையும் சேர்த்து காலை
மாலை இருவேளை ஐந்து விரலால் அள்ளும்
அளவு சாப்பிட்டு வென்னீர் குடிக்கவும்.
பயன்கள்
தேகம் திடப்படும் ஈரல் குலை வலுப்படுத்தும் பித்தம் அனைத்தும் தீரும் நெஞ்சு திடப்பட்டு
உறுதியாகும் தலை மூளை செழிக்கும்
தலைவலி பிடரி வலி தீரும் கண்களில்
நீர் வடிதல் தீர்ந்து அதிக ஒளி மிகும் இருதய
நோய்கள் தீர்ந்து இருதயம் வலுவுண்டாகும்
பசி அதிகரிக்கும் தூக்கமின்மை நீங்கி சுக
நித்திரை உண்டாகும் வயிற்றின் நோய்கள்
அனைத்தும் நீங்கி கிருமிகள் வெளியேறும்
கல்லடைப்பு நீரடைப்பு நீங்கி இடுப்பு வலி
குணமாகும் வாய் குளறல் நீங்கி தெளிவான
பேச்சு வரும் பேய்க் குணங்கள் மாறும்
காது இரைச்சல் நீங்கி காதுகள் நன்றாக
கேட்கும் தொண்டைப் புண் ஆறும் சேத்துமம்
நோய்கள் அனைத்தும் குணமாவதோடு
வாய் மூக்கில் உள்ள துர்நாற்றம் நீங்கும்
மற்றும் பல நோய்கள் நீங்கி
நற்குணங்கள் தரும்
ஞானம உண்டாகும்
நல்ல எண்ணம் உண்டாகும்
யோகம் கைகூடும்
சித்தியுண்டாகும்
இக்கற்ப மருந்தை மூன்று மண்டலம்
உண்டு வர கல்வியில் சிறந்து வல்லவனாகி
புலவனாவான் என்றும் சாஸ்திரம் கூறுகிறது
இந்த சஞ்சீவி சூரணம் அனைத்து நோய்களுக்கு கொடுத்த அனுபவ மருந்து
குறிப்பாக இருதய ஓட்டைக்கு இதுவும்
மருதம் பட்டை கசாயமும் கொடுத்து
வெற்றி கண்டது
பிரம்மஸ்ரீ கோவிந்தன்
சுவாமி சிவானந்தா சித்த வைத்தியசாலை
மம்சாபுரம் 626110
திருவில்லிபுத்தூர் தாலுகா
விருதுநகர் மாவட்டம
கைபேசி 9345168097

நோய்கள் என்றால் என்ன!!!(What is Sickness)


கண்டிப்பாக அனைவரும் முழுமையாக படித்துவிட்டு பகிரவும்........
நமது உடலில் இயற்கையாகவே 3 சக்திகள் உள்ளன.
இயங்கு சக்தி. -32 %
செரிமானசக்தி- 32 %
நோய் எதிர்ப்பு சக்தி - 36 %
காய்ச்சல் வரும்போது சாப்பிடாமல் இருந்தால், அந்த செரிமான சக்தியான 32% ..நோய் எதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து 32+36 % =68% ஆக மாறி விடும்....
மேலும் நாம் ஓய்விலிருந்தால் இயங்கு சக்தியின் அளவான 32%...நோய் எதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து 100 %
ஆக மாறி காய்ச்சல் விரைவில் குணமாகி விடும்.
இப்போ சொலுங்க சாதாரண காய்ச்சலுக்கெல்லாம் மருந்து மாத்திரைகள்ஆண்டிபயாடிக் எல்லாம் வேணுமா?
நமது உடலில் தேங்கும் கழிவுகள் மற்றும் கிருமிகளை நமது உடலே அழித்துவிடும் அல்லது வெளியேற்றிவிடும். இந்த செயல்முறையின் போது (Process)நமது உடலில் ஏற்படும் அசௌகரியங்களை (Inconvenience) நாம் நோய்கள் என்கிறோம்.
எதனால் சுவாசப் பாதையில் நோய்கள் ஏற்படுகின்றன?
நமது சுவாசப் பாதையில் இருக்கின்ற தூசிகளை /கிருமிகளை தும்மல் மூலமாக நமது உடல் வெளியேற்றும். அச் செயல்முறை நிகழும்போது
நமக்கு அசௌகரியமாக இருக்கும் என்பது உண்மையே. அவ்வாறு வெளியேற்றினால் தான் நமது
சுவாசப் பாதையை நமது உடலால் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும்.இதன்மூலம் நமது உடலுக்கு
பிராணவாயு கிடைப்பதில் எந்த தங்கு தடையும் இருக்காது.இவ்வாறு உடல் தனக்கு தானே செய்துகொள்கின்ற இயற்கை பராமரிப்பை நாம் வியாதி அல்லது நோய்கள் என புரிந்துக் கொள்ளும்போது,
ஏதாவது மருந்துக்களை உட்கொண்டு தும்மலை உண்டுபண்ணும் சுரப்பியை வேலை செய்ய விடாமல்
தடுத்துவிடுகிறோம்.
இவ்வாறு தடுக்கும்போது, நிறைய தூசிகள் /கிருமிகள் நம் சுவாசப்பாதையில்தங்கிவிடுகிறது.இந்த சூழ்நிலையில் நமது உடலில் சளி (Sinus) என்னும் சுரப்பி,நிணநீர் (Lympathic Fluid) மூலம் நமது சுவாசப்பாதையில் தேங்கிய கழிவுகள் மற்றும் கிருமிகளை வெளியேற்றும் வேலையில்ஈடுபடும். இந்த
செயல்முறையின் போதுதான் நமக்கு மூக்கு ஒழுகுதல் (Running Nose)ஏற்படும். இதையும் வியாதி என
புரிந்துகொள்ளும் நாம் அவற்றை தடுக்க மருந்துக்களை
உட்கொள்கிறோம்.இதனால் தான் மூக்கடைப்பு
ஏற்பட்டு கழிவுகள் மற்றும் கிருமிகளை வெளியேற்ற சுரந்த நிணநீர் (Lympathic Fluid) நமது முகத்திற்குள்
தேங்குகிறது.இவற்றை தான் நமது உடல் கண்ணீர்
மூலமும் வெளியேற்றும். இந்த நீரைத்தான் பலர் கண்களில் நீர்தானாகவே வடிகிறது என கூறுவார்கள்.இதையும் வியாதி எனக் கருதி அதையும் தடுக்கவும் மருந்துக்களை உட்கொள்கிறோம்.
பல காலமாக தேங்கிய இந்த நீரானது திட வடிவமாக (Solid) மாறுகிறது.இதைத் தான் நாம் சைனஸ் கட்டிகள் Sinusitis (Sinus Infection) என்று அழைக்கிறோம்.
இந்த கட்டிகளை கரைக்க / எரிக்க நமது உடலானது காய்ச்சல் செயல்முறையை நிகழ்த்தும். நாம்
காய்ச்சலையும் வியாதி எனக் கருதி அதையும் தடுக்கவும்
மருந்துக்களை உட்கொள்கிறோம் என்பதை புரிந்துக்
கொள்ளுங்கள்.
நமது சுவாசப்பாதையில் தேங்கிய கழிவுகளை நிணநீர் (Lympathic Fluid) மூலம் வெளியேற்றமுடியாதபோது நமது உடல் சளியின் (Mucus) மூலம் வெளியேற்ற முயற்சி செய்யும். இந்த சளியானது நமது நுரையீரல் மற்றும் சுவாசப்பாதையில் உள்ள கழிவுகளை அதனோடு சேர்த்துக் கொண்டு நமது மூக்கின் மூலம் வெளியேறிவிடும். இந்த சளியையும் நாம் வியாதி எனக் கருதி மருந்துக்களை உட்கொண்டு தடுத்துவிடுகிறோம். அந்த மருந்துகள் சளியை கட்டியாக மாற்றி நமது தொண்டையில் படியச்செய்யும்.அவ்வாறு படியும் கழிவுகள் தான் நமக்கு வறட்டு இருமல் மற்றும்
குறட்டை ஏற்பட அடிப்படை காரணங்கள்.
வறட்டு இருமலுக்கு நாம் சிரப் (Syrup) வடிவில் மருந்துக்களை உட்கொள்ளுவோம். அப்போது நமது
தொண்டையில் படிந்த காய்ந்த சளியானது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து நமது நுரையீரலில் (Lungs)
படிந்துவிடும். இவ்வாறு நமது நுரையீரலின் சிற்றறைகள்
அடைபடும்போது நமது உடலுக்கு தேவையான காற்றோட்டம் தடைபடும்.இந்த நிலையை தான்
மூச்சிறைப்பு (Short Breath / Wheezing) என்று அழைக்கிறோம்.இதுவே பெருவாரியான
சிற்றறைகளில் அடைபடும்போது நமது உடலுக்கு
தேவையான காற்றோட்டம் மிகக் குறைந்த அளவே இருக்கும். அப்போது இந்த மூச்சிறைப்பு அடிக்கடி ஏற்படும். இந்த நிலையை தான் நாம் ஆஸ்துமா (Asthma) என்கிறோம்.
பொதுவாக நாம் ஓடும்போது நம் உடலுக்கு நிறைய பிராணவாயு தேவைப்படும். அப்போது நம் சுவாசம் முழுமையாக இல்லாமல் வேகமாக இருக்கும். இந்த
நிலையில் குறைவான நேரத்தில் அதிக மூச்சுக் காற்றை
சுவாசிப்போம் அது தான் மூச்சிறைப்பு. நாம்
அமர்ந்துகொண்டு இருக்கும்போது உடலுக்கு அதிகமாக காற்றோட்டம் தேவைப்படும் நேரங்களில்
குறைவான சிற்றறைகள் மட்டுமேதிறந்திருக்கும் பட்சத்தில் இத்தகையதொரு நிகழ்வு ஏற்படும்.
பெரும்பகுதியான சிற்றறைகள் கழிவுகளால் மூடப்பட்டதே இதற்கு அடிப்படை காரணம். இதை தான்
"கழிவுகளின் தேக்கம் வியாதி;
கழிவுகளின் வெளியேற்றல் குணம்"
என்று கூறுகிறோம். இப்போதும் ஒருவருக்கு ஏன்
ஆஸ்துமா (Asthma) நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அறியாமல் ஸ்டீராய்டு (Steroid) மருந்துக்களை கொண்டு
இன்ஹேலர் (Inhaler) மற்றும் நேபுளேசர் (Nebulizer) வடிவில் தற்காலிக நிவாரணம் பெறுகிறோம். பல காலமாக தேங்கிய இத்தகைய கழிவுகள்
திட வடிவம் (Solid State) பெறுகிறது.இப்போதும் காய்ச்சல் மூலம் இவற்றை கரைக்க நமது உடலானது முயற்சி
செய்யும், நாம் இந்த முறையும் காய்ச்சலை வியாதி எனக் கருதி.மருத்துகளை உட்கொண்டு அவற்றை
தடுத்துவிடுகிறோம்.
பின்னர் தேங்கிய திடக் கழிவுகளுக்கு காசநோய்
(T.B Tuberculosis) என பெயர் சூட்டுகிறோம். பின்னர். இதற்கும் நாம் மருந்துக்களை உட்கொள்கிறோம். அந்த திடக் கழிவுகளை கரைக்க முயற்சிமேற்கொள்ளும்போது வலி ஏற்படும். நமது நுரையீரலில் வலி ஏற்படுகிறது என்று பரிசோதனை மேற்கொள்வோம். அப்போது பயாஸ்பி (Biospy)எடுத்து புற்றுநோயா (Cancer) என
சோதிப்பார்கள். Biospy என்றால் அந்த திடக்கழிவில் இருந்து மாதிரி (Sample) எடுப்பார்கள். அந்த
மாதிரியில் ரத்த ஓட்டம் இருக்கிறதா என சரிபார்ப்பார்கள்.
கழிவின் தேக்கத்தில், எங்குஇருந்து ரத்த ஓட்டம் வரும்? எனவே இதை புற்றுநோய் கட்டி என்று கூறிவிடுவர்.
இது தான் நுரையீரல் புற்றுநோய்(Lungs Cancer) என்று அழைகப்படுகிறது.
எனவே நமது உடலின் அடிப்படை இயக்கத்தை புரிந்துகொள்வதே ஆரோக்கிய வாழ்வின் அடித்தளம்!
"நம் கையில் இருக்கும் ஒரு பொருளை உலகில் வேறு
எங்குதேடினாலும் கிடைக்காது" ஏனென்றால் அந்த பொருள் இருக்கும் இடத்தை விட்டுவிட்டு இல்லாத
இடத்தில் தேடுகிறோம். இவ்வாறாக இன்றைய தினத்தில் நாம் நமது ஆரோக்கியத்தை மருத்துவமனைகளில்
தேடுகிறோம்.
நம் சுவாச பாதையில் தேங்கும் கழிவுகளை நம் உடம்பானது எவ்வாறு வெளியேற்றும்?
# தும்மல்,
# மூக்கு ஒழுகுதல்,
# சளி,
# இருமல்
# காய்ச்சல் மூலமாக
வெளியேற்றும்.
இவற்றை நாம் வியாதி என கருதி அதை தடுக்க முயற்சிக்கும் போதுதான் இந்த கழிவுகள் தேங்கி
இருக்கும் இடத்திலேயே நமது உடலால் கட்டியாக்கப்படும். பிறகுநமது உடலின் எதிர்ப்புசக்தி
அதிகரிக்கும்போது காய்ச்சல் என்கிற செயல்முறையின் மூலம் வெப்பத்தை அதிகப்படுத்தி அந்த கட்டிகளை மற்றும் நமது உடலில் தேங்கிய இதர கழிவுகளையும் எரித்துவிடும். காய்ச்சலை ஏற்படுத்த போதுமான
சக்தி இல்லாதபோது நமது உடலின் எஞ்சிய சக்தியை கொண்டு கழிவுகளை வெளியேற்ற முயற்சிக்கும்போது அந்த இடத்தில் வலி ஏற்படும். சிலநேரம் நமது எதிர்ப்பு சக்தி போதுமான அளவில் இல்லையென்றால் நமது உடலின் இயக்க சக்தி தேவைப்படும். அப்போதுதான்
தலைவலி ஏற்படும். தலைவலி ஏற்பட்டால் நம்மால் எந்த வேலையும் செய்ய இயலாமல் ஓய்வு எடுப்போம்.
அதற்குதான் தலைவலி ஏற்படுகிறது.
யாரெல்லாம் தலைவலி வந்தால் மருந்துகளின்றி ஓய்வு
எடுக்கிறார்களோ அவர்களுக்கு ஒருபோதும் புற்றுநோய்
வருவதில்லை.யாரெல்லாம் காய்ச்சலுக்கு
மருந்துகளின்றி மற்றும் பசிக்கவில்லை என
உணவின்றி ஓய்வு மட்டுமே எடுக்கிறார்களோ அவர்களுக்கு Typoid,Jaundice, Chicken Guniya, Coma
(விபத்துக்களால் ஏற்ப்படும் Coma),புற்றுநோய் (Cancer), ரத்த புற்றுநோய் (Blood Cancer) போன்ற எந்த தொந்தரவுகள் ஏற்படுவதில்லை.
இவ்வாறு நமது உடலின் கழிவு வெளியேற்றத்துக்கு நாமே தடையாக இருந்துவிட்டு வியாதிகள்
பெருகிவிட்டது என கூறுகிறோம்.நமது உடலின் அடிப்படையை கற்றுக்கொண்டு மருந்துகளின்றி
ஆரோக்கியமாக வாழ்வோம்.
உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன்.......

Tuesday, 11 October 2016

Tamil Medicine for Children!!!

குழந்தைகளுக்கு நாட்டு வைத்தியம் !!!
'குழந்தைகளுக்கு ஒண்ணுன்னா குடும்பமே சோர்ந்து போயிரும். இதுக்காகத்தேன் கைவசம் எப்பவும் சில மூலிகை சாமான்களை வச்சிக்கிடணும்.
குழந்தைகளின் வாந்தி நிற்க..
வேலிப்பருத்திங்கிற உத்தாமணி இலைச் சாறுல ஒரு கைப்பிடி மிளகை 7 முறை ஊற வைக்கணும் (மிளகுல உத்தாமணிச் சாறை ஊத்தினா கொஞ்ச நேரத்துலயே அவ்வளவையும் உறிஞ்சிக்கிடும். இப்படி ஏழு முறை செய்யணும்). ஊறின மிளகை உலர்த்தி, பொடிச்சு வெச்சுக்கிடணும். இந்தப் பொடியிலருந்து ஒரு சிட்டிகை எடுத்து, அதுல 20லருந்து 40 மில்லி பால்.. இல்லேன்னா தேன் கலந்து கொடுத்து வந்தா, செரியாமை, வாந்தி, மந்தம் எல்லாம் ஓடிப் போயிரும்.
வாந்தி நிக்க இன்னொரு வைத்தியமும் இருக்கு. ஒரு துண்டு வசம்பை நெருப்புல சுட்டு, கருக்கி, அதை ஒரு தேய் தேய்ச்சு, தேன்ல குழப்பி, ரெண்டு, மூணு முறை குழந்தைங்க நாக்குல தடவினா வாந்தி நின்னு, முழு குணம் கிடைக்கும்.
வயிற்று உப்புசம் குணமாக..
சுக்கு, சீரகம், சிறுபுள்ளடி (தரையில் படரும் செடி) எல்லாத்தையும் புளியங்கொட்டை அளவு எடுத்து நசுக்கி, தாய்ப்பால்ல ஊற வைச்சுப் பிழிஞ்சிக்கணும். இதை அரை பாலாடை அளவுக்கு எடுத்து, ஒருமுறை கொடுத்தாலே வயிற்று உப்புசம் சரியாகிடும்.
சிறுசா ஒரு துண்டு பிரண்டைய எடுத்து, அது மேல உப்பைத் தடவி, ஒரு ஓட்டுல வச்சி தீயில காட்டுனா, 'படபட'னு வெடிக்கும். இதை ஒரு டம்ளர் தண்ணியில போட்டு வச்சுக்கணும். குழந்தைகளுக்கு வயிறு உப்புசமா இருக்கிறப்ப இந்தத் தண்ணியில அரை பாலாடை கொடுத்தா, நல்ல பலன் கிடைக்கும்.
வயிற்றுப்போக்கு நிற்க..
சமையலுக்கு உபயோகிக்கிற மஞ்சளை ஒரு கணு (துண்டு) எடுத்துத் தூளாக்கி, சூடு பண்ற கரண்டி.. இல்லேன்னா கடாயில போட்டு வறுத்தா, தீ மாதிரி ஆயிரும். இதுல அரை ஸ்பூன் ஓமத்தைத் தூவினா அது வெடிக்கும். உடனே அரை டம்ளர் தண்ணி ஊத்திக் காய்ச்சி, வடிகட்டி, இதுலருந்து அரை பாலாடை அளவுத் தண்ணிய ஒருமுறை கொடுத்தாலே வயிற்றுப்போக்கு சரியாகிடும்.
வயிற்றுக்கடுப்பு நீங்க..
தாய்ப்பால்ல கடுக்காய்க் கொட்டையை இழைச்சி அரை பாலாடை வீதம் கொடுத்துட்டு வந்தா, வயிற்றுக்கடுப்போட கூடிய பேதி சரியாகிடும்
'குழந்தை நை நைனு அழுதுக்கிட்டே இருக்கு. டாக்டர்கிட்ட போயும் கேக்கல. எதாவது நாட்டு வைத்தியம் சொல்லுங்களேன்..'' என்று இன்றுவரை கிராமத்துப் பாட்டிகளிடம் வைத்தியம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். சாம்பார் சாதம் மாதிரி.. பருத்திப் புடவை மாதிரி.. இந்த நாட்டு வைத்தியமும் நம் ஊரில் எவர் கிரீன்தான்.
நமக்கு இங்கே நாட்டு வைத்தியம் தந்திருக்கிற அன்னமேரி பாட்டிக்கு இந்தத் துறையில் 60 வருடங்களுக்கும் மேற்பட்ட அனுபவம் இருக்கிறது. கடலூர், சாமிப்பிள்ளை நகரைச் சேர்ந்த பாட்டியின் வீட்டைச் சுற்றிலும் காடு போல வளர்ந்து கிடக்கின்றன மூலிகைச் செடிகள். என்ன வியாதி என்றாலும் தீர்வு தேடி பாட்டியைத் தேடி ஓடி வருகிறார்கள் சுற்றுப்புற கிராமத்து ஜனங்கள். வைத்தியம் முழுக்க முழுக்க இலவசம்!
''காசா முக்கியம்? ஜனங்க நோய், நொடி இல்லாம சொகமா இருக்கணும். அதுதேன் முக்கியம்'' என்று மனசுக்குள்ளிருந்து பேசுகிற அன்னமேரி பாட்டிக்கு வயது 85!
இதோ.. உங்கள் குடும்பத்துக்கும் ஆரோக்கியத்தைக் கொண்டு வருகிறார் அன்னமேரி பாட்டி!
மழை ஓஞ்சி இப்போ பனி அடிக்குதே.. இந்த சீஸனுக்கேத்த மருந்து சொல்றேன்..
குழந்தைகளின் சளிக்கு..
ஆடாதொடை இரண்டு இலை, தும்பைப்பூ 10 எண்ணிக்கை, தாளிசபத்திரி (நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்) கால் ஸ்பூன், இஞ்சி ஒரு துண்டு.. இதெல்லாத்தையும் நசுக்கி, சாறெடுக்கணும். இதுல 8 சொட்டு சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் தேன் கலந்து, 3 மணி நேரத்துக்கு ஒருமுறை குழந்தையோட நாக்குல தடவி வந்தா, சளி கட்டுக்குள்ள வரும். பிறந்த குழந்தைகள் முதல் 2 வயசுக் குழந்தைகள் வரை இந்த மருந்தைத் தரலாம்.
பெரியவர்களுக்கு ஏற்படும் நெஞ்சுச் சளிக்கு,,
இதுக்கு பூண்டுப் பால் நல்ல மருந்து. பெரிய சைஸ் முழு வெள்ளைப் பூண்டை தோல் உரிச்சுக்கணும். 100 மில்லி பசும்பால்ல தண்ணி கலந்து, இதுல பூண்டை நல்லா வேக வைக்கணும். அடுப்புலருந்து இறக்குறதுக்கு முன்னால ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், கால் ஸ்பூன் மிளகுப் பொடி போட்டு இறக்கிடணும். இதை நல்லாக் கடைஞ்சு, தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து, ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்னாடி சாப்பிட்டா, நல்ல பலன் கிடைக்கும்.
இருமல் விலக..
அதிமதுரம் 100 கிராம் எடுத்து நசுக்கி, 200 மில்லி தண்ணியில வெறுமனே ஊற வச்சு, காலையில எடுத்து வடிகட்டி, சூடாக்கி (கொதிக்க வைக்க தேவையில்லை) பனங்கற்கண்டு சேர்த்துக் குடிச்சு வந்தா இருமல் ஓடியே போயிரும்
பனி காலம் வந்தாப் போதும்.. இருமலும் சளியும் சிறுசுகளை சட்டுனு பிடிச்சுக்கிட்டு இம்சைப்படுத்தும். அந்த இம்சைகள வெரட்டுற மூலிகைகளப் பார்ப்போம் வாங்க..
குழந்தைகளின் இருமலுக்கு..
சின்ன துண்டு (ஒரு கணு) சித்தரத்தையும் ஒரு ஸ்பூன் பனங்கல்கண்டையும் ஒரு டம்ளர் தண்ணிய விட்டு அரை டம்ளரா காய்ச்சணும். ஒரு வேளைக்கு ஒரு பாலாடை (சங்கு) அளவு, இதை ஒருநாளைக்கு 3 இல்ல.. 4 வேளை கொடுத்துட்டு வந்தா வறட்டு இருமல் விலகும். மூணு மாச பச்சைக் குழந்தையிலருந்து ரெண்டு வயசுக் குழந்தைங்க வரைக்கும் இதக் கொடுக்கலாம்.
பல்லு மொளச்ச பிள்ளைகளுக்கு, நெய்யில 10 தூதுவளை இலைகள வதக்கி, (பெரியவங்கன்னா.. ஒரு கைப்பிடி இலை) அப்படியே மென்னு தின்ன வச்சா இருமல் அண்டாது!
10 உத்தாமணி இலைகள எடுத்து சாறு பிழிஞ்சிக்கணும். ஒரு பட்டாணி அளவு சுண்ணாம்புல இதைக் கலந்து தொண்டைக் குழியில தடவி வந்தா இருமல் 'சட்'டுனு நிக்கும்.
இருமலும் சளியும் வந்து மூச்சு விட முடியாம சில குழந்தைங்க திணறிப் போயிரும். இந்தக் கோளாறை 'தெக்கத்திக்கணை'னு சொல்லுவாக. இதுக்கு.. தூதுவளை இலைய கசக்கி, அதுல மூணு சொட்டு சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் தேன் கலந்து குழந்தைக நாக்குல தடவுங்க. நல்ல குணம் தெரியும்.
இலைகளை எடுத்த தூதுவளை குச்சிய (தண்டு) நல்லா காய வச்சு இடிச்சுப் பொடியாக்கி சலிச்சுக்கணும். இத காத்துப் புகாத டப்பாவுல போட்டு வெச்சிக்கிடுங்க. மிளகு அளவு இந்தப் பொடிய எடுத்து, தேனுல குழப்பி நாக்குல தடவுங்க. இப்படி 4 வேளை கொடுத்திட்டு வந்தா தெக்கத்திக்கணை சரியாப் போயிரும்.
நாட்டுக்கோழி முட்டையோட மஞ்சக் கருவை கரண்டில ஊத்தி, லேசான சூட்டுல காய்ச்சினா எண்ணெய் வரும். இதுல மிளகு அளவு கோரோசனை (நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்) கலந்து இழைச்சு, உள்ளுக்குக் கொடுத்துட்டு வந்தா இருமல், கணை இழுப்பு குணமாகும்.
மூணு அங்குல இண்டந்தண்டை குச்சியை (இண்டு) ராத்திரியே ஒரு டம்ளர் தண்ணில ஊற வச்சு, காலையில தண்டை மட்டும் எடுத்து தண்ணி இல்லாம நல்லா துடைச்சிக்கணும். இது குழல் மாதிரி இருக்குறதால ஒரு பக்க துவாரம் வழியா ஊதினா அரை (அ) ஒரு ஸ்பூன் அளவுக்குத் தண்ணி வரும். இந்தத் தண்ணி கூட மிளகு அளவு கோரோசனை கலந்து காலையில வெறும் வயித்துல 3 நாள் தொடர்ந்து கொடுத்து வந்தா கணை இழுப்பு, சளி, இருமல்.. எல்லாம் ஓடியே போயிரும்

LikeShow more reactions
Comment

Monday, 10 October 2016

ஆண்மை குறைபாடு!!!

ஆண்மை குறைபாட்டை நீக்க தமிழ் மருத்துவம் சொல்லும் உடனடி தீர்வு – வீட்டில் நீங்களே தயார் செய்யலாம்
நாம் தற்போது எந்த செய்தித்தாள் ஊடகம் மற்றும் தொலைக்காட்சி பார்த்தாலும் ஆண்மைகுறைவு பற்றின செய்திகளும் சிகிச்சை நிகழ்சிகளும் வந்த வண்ணமே உள்ளன. இதில் சில சித்த மருத்துவர்கள் சரியான மருந்தையும் கொடுகின்றனர், சில அரை குறை போலி வைத்தியர்களும் போலியான பிரச்சாரம் செய்து ஆண்மகன்களை பயமுறுத்தி வருகின்றனர்.
உண்மையில் ஆண்மைக்குறைவு ஒரு பெரிய நோயா? சரியாக கவனிக்காமல் காலம் தாழ்த்தினால் அது பெரிய நோய்தான், சரியான தனி மனித ஒழுக்கத்தை கடைபிடித்தால் ஆண்ன்மைகுறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை , இருந்தாலும் சுய இன்பம் ஒன்றே இந்த ஆண்மைக்குறைவுக்கு காரணம் என்று சொல்ல முடியாது, உயர் ரத்த அழுத்தமும், மன அழுத்தமும் காரணமாக அமைகின்றன. இதற்கு என்னதான் தீர்வு? இந்த குறைபாடு ஒன்றும் குணபடுத்த முடியாத ஒரு விசயமல்ல, மொத்தத்தில் இது ஒரு நோய் என்று சொல்வதே தவறு, இருந்தாலும் இபோதுள்ள இளைஞர்கள் சுய இன்ப கரபழக்கம் மற்றும் தவறான உறவுகளினால் தங்களது சக்தியை வீணடிக்கின்றனர். இதனால் உடலில் தாது உடைகிறது மற்றும் எழுச்சி தன்மை குறைகிறது, மீண்டும் நீங்கள் நல்ல சத்துள்ள உணவு வகைகளை உண்டால் இது அடிக்கடி தோன்றாது, மேலும் அளவுக்கு மீறின சுய இன்பத்தால் மீண்டும் இந்த குறைபாடு தோன்றி குற்ற உணர்வு தோன்றுகிறது, இதுவே இன்றைய தலைமுறையினரின் நிதர்சன பிரச்சினை, இதனை நீங்கள் உங்கள் கை வைத்தியதிலியே போக்கலாம்.
ஆண்மை தன்மையை அதிகரிக்கும் சக்தி இயற்கையிலயே தேனுக்கும் பேரிச்சம் பழத்திற்கும் உண்டு, இதனை சரியாக கையாண்டு ஒரு சிறப்பு மருந்தை நாமே தயாரித்து உண்டால் ஆண்மை குறைபாடு விரைவில் நீங்கும். இந்த மருந்து பக்க விளைவுகள் இல்லாத ஒரு அறிய வகை மருந்தாகும். உயர் ரக பேரிச்சம் பழம் ஒரு கிலோவும், உண்மையான தேன் ஒரு கிலோவும் வாங்கி கொள்ளுங்கள், பேரிச்சம் பழங்களை ஒரு அகன்ற பெரிய தட்டில் கொட்டி வைக்கவும், அதனை மூன்று மணி நேரம் வெயிலில் காய வைத்து பிறகு ஒரு பீங்கான் பாட்டிலில் பத்திரபடுதவும் பிறகு அதனுடன் தேனை ஊற்றி மீண்டும் மூன்று மணி நேரம் வெயிலில் வைத்து விடுங்கள். பிறகு தினமும் காலை உணவு சாப்பிட்ட அரை மணி நேரத்திற்கு பிறகு 3 பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு விட்டு சிறிது வெந்நீர் அருந்துங்கள், பிறகு இரவு 12 பேரிச்சம்பழத்தை சாப்பிட்டு விட்டு வென்னிருக்கு பதில் பசும்பாலை அருந்தவும், இப்படி தொடர்ந்து 60 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி பெருகிவிடும்.
ஆண்களுக்கு ஆண்மையை அதிகரிக்க மலிவான வயாக்கரா !! ஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இது ஆண்களுக்கு ஆண்மையை அதிகரிக்கும் மலிவான வயாக்கரா என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். விந்தணு குறைபாட்டினால் புதிய சந்ததியை உருவாக்க முடியாத நிலை. அதனால் ஏற்படும் மனச்சோர்வு ஆண்களை பாதிப்பிற்குள்ளாக்குகிறது. இந்த குறைபாட்டை நீங்க மருத்துவமனைகளுக்கு சென்று பல ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கும் ஆளாகின்றனர். ஆண்மைக் குறைபாடுள்ள ஆண்கள் இனி கவலைப்பட வேண்டாம் தக்காளி சூப் அவர்களுக்கு நிவாரணம் தருகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். தினம் ஒரு கப் தக்காளி சூப் குடிப்பது விந்தணுக்களின் வீரியத் தன்மையை அதிகரிக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.
லைகோபின் சக்தி போர்ட்ஸ் மௌத் பல்கலைக்கழக த்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். நாற்பத்து இரண்டு வயதுக்கு மேல் இருக்கும் நபர்களை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு தினம் ஒரு கப் தக்காளி சூப் இரண்டு வாரங்களுக்கு கொடுக்கப்பட்டது. சோதனையின் முடிவில் ஆய்விற்குட் படுத்தப்பட்டவர்களுக்கு இரண்டு வாரங்களிலேயே பன்னிரண்டு சதவீதம் வரை விந்தணு வீரியம் அதிகரித்திருந்தது இது ஆராய்ச்சியாளர்களையே வியக்க வைத்தது. தினம் ஒரு கப் சூப் தக்காளியில் இருக்கும் லைக்கோப்பின் எனும் பொருள் தான் தக்காளிக்கு அடர் சிவப்பு நிறத்தைத் தருகிறது.
அந்த மூலக்கூறு தான் ஆண்களின் விந்தணு வீரியத்திற்கு காரணமாய் இருக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். லைக்கோப்பின் ஆனது புற்று நோயை தடுக்கும் சக்தி உடையதாக இருப்பதால் தக்காளி உட்கொள்வது புற்றுநோய் செல்களை அழிக்கும் என்பது பல காலமாக பேசப்பட்டு வரும் தகவல். இப்போது “இந்த” புதிய பயனும் அதனுடன் இணைந்திருக்கிறது.. சும்மாவே தக்காளி விலை உச்சத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது.
இந்த ஆராய்ச்சி முடிவை படித்தவுடன் தினம் வீட்டில் தக்காளி சூப் வைக்க சொல்லி நச்சரிக்கப் போகிறார்கள் ஆண்கள் – அதுக்காக ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் மட்டும்தான் சூப் குடிக்கணும் என்றில்லை. இல்லாதவங்களும் கூட குடிக்கலாம் – வராம தவிர்க்கலாம்ல..
தேவையான பொருட்கள் நன்கு பழுத்த தக்காளி – 5 பெரிய வெங்காயம் – 1 பூண்டு – 6 பல் சோள மாவு – 1 மேஜைக் கரண்டி வெண்ணெய் – 2 தேக்கரண்டி தக்காளி சாஸ் – 2 மேஜைக் கரண்டி மிளகுத்தூள் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை 1. வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2. வெண்ணெயை உருக்கி, அதில் பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு வதங்கியதும், வெங்காயம் சேர்த்து வதக்கவும். 3. வெங்காயம் வதங்கியதும், தக்காளி, தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து வதக்கவும். 4. தக்காளி பச்சை வாசனை போக வதங்கியபின், 300 மில்லி தண்ணீர் (அல்லது கால் லிட்டர்) தண்ணீர் சேர்க்கவும். 5. சிறு தீயில் 10 நிமிடம் கொதித்த பிறகு, கரண்டியால் நன்கு மசித்து வடிகட்டிக் கொள்ளவும். 6. வடிகட்டிய தண்ணீரில் தக்காளி சாஸ் கலந்து, பிறகு அதில் தனியே தண்ணீரில் கரைத்த சோள மாவைச் சேர்க்கவும். 7. பின்னர் 5 நிமிடம் கொதிக்கவிட்ட இறக்கி வைத்து, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்…

Sunday, 9 October 2016

பூளைப்பூ வைத்தியம்(Kidney Stone)

கோவையில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் பொழுது இரவு 2 மணிக்கு தீராத வயிற்று வலி. கிட்னியில் கல் என்று தெரியும் இருந்தாலும் இரவு என்ன செய்வது என்று நான் தங்கியிருந்த வீட்டின் மாடிப்படியில் உட்கார்ந்திருந்தேன். பக்கத்து வீட்டுப்பாட்டி சலம் கழிக்க வந்தார். ஏன் இங்க உட்கார்ந்திருக்க என்று விவரம் கேட்டார். என் வேதனையைக் குறிப்பிட்டேன். உடனே பொங்கலுக்குக் காப்பு கட்டியிருந்த கொத்தில் பூளைப்பூவை மட்டும் உருகி சுடுநீரில் காய்ச்சி வடித்துக் கொடுத்தார். "இந்தா இதக்குடி . அரை மணி நேரத்துல சரியாகிடும்" என்று கொடுத்தார். கால் மணி நேரத்திலேயே வலி குறைந்தது. காலையில் ஸ்கேன் செய்து பார்த்தேன் 8mm கல் இருந்தது. மருத்துவர் ஆபரேசன் பன்ன வேண்டுமென்று தற்போதைக்கு மாத்திரை சாப்பிடுமாறு கூறினார். நான் மாத்திரை வாங்கவே இல்லை. பூளைப்பூ வைத்தியத்தைத் தொடர்ந்தால் என்ன என்று மனதிற்குத் தோன்றியது. தினமும் குடிக்குமளவு தண்ணீரை எடுத்து அதில் கைப்பிடிப் பூளைப்பூவைப் போட்டு காய்ச்சிப் 6 அல்லது 7 நாள் குடித்திருப்பேன். வலி சுத்தமாகக் காணாமல் போயிருந்தது. மறுபடியும் ஸ்கேன் செய்து பார்த்தேன் 3mm மட்டும் இருந்தது. மறுபடியும் 5 நாட்கள் தொடர்ந்தேன். சிறுநீரகக் கல் இல்லாமல் போனது. பாட்டியின் வழி காட்டுதலால் ஆபரேசனில் இருந்து தப்பித்தேன். அதிலிருந்து வாரம் ஒருமுறை பூளைப்பூவில் கருப்பட்டி போட்டு டீ போல வைத்துக் குடித்துக் கொள்வேன்.

மனசின் வேலையை மாற்ற!!!

சிலரால் சிரிப்பதை நிறுத்த முடியாது, சிலரால் அழுகையை கட்டுப்படுத்த முடியாது. சிலருக்கு படுத்தால் உறக்கம் வராது, சிலருக்கு வேலை செய்யும் போதெல்லாம் உறக்கம் வரும். இப்படி பல விஷயங்களை பலர் எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் திண்டாடுவார்கள்.
நமது உடலை, நமது உணர்வுகளை, நமது உறக்க நிலையை, அவசரமாக வரும் சிறுநீர் முதற்கொண்டு பலவற்றை சின்ன சின்ன ட்ரிக்ஸ் மற்றும் ஹேக்ஸ் மூலம் நாமே கட்டுப்படுத்தலாம். அது எப்படி என இனி காணலாம்....
ஆழ்ந்த தூக்கம் வராமல் தவிப்பவரா நீங்கள், உறங்க வேண்டி படுத்த பிறகு, உங்க இமைகளை வேகமாக இமைத்தால் ஒருசில நிமிடத்தில் உறக்கம் வந்துவிடும்.
குளித்து முடிக்கும் போது, ஷவரில் குளிர் நீரை திருப்பிவிடுங்கள். இந்த குளிர்ந்த நீர், சருமத்தில் இருக்கும் நுண் துளைகளை மூடிவிடும். இதனால் பாக்டீரியா, அழுக்கு சேர்வதை தடுத்து, பருக்கள் அதிகரிக்காமல் காக்கலாம்.
சிறுநீரை அடக்க முடியாமல் தவிக்கும் போது, அருகே பாத்ரூமும் இல்லை என்றால், ஏதாவது உங்களுக்கு பிடித்த திண்பன்டத்தை சுவைப்பது போல் என்ன துவங்குங்கள். உங்கள் மூளையை திசைத்திருப்பி, சற்று நேரம் சிறுநீர் அவசரத்தின் அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும்.
உறங்க செல்வதற்கு முன்னர் நீங்கள் படிக்கும் விஷயம், அதிகாலையில் அதிகமாக ஞாபகத்தில் வைத்திருப்பீர்கள்.
உங்கள் நாக்கை பற்களின் பின் புறம் உறுதியாக வைப்பதால், தும்மலை தடுக்க முடியும்.
படுத்த பிறகும் உறக்கம் இல்லாமல், மயக்க நிலையில் மட்டுமே நீங்கள் இருக்கிறீர்கள் எனில், ஒருகாலை மட்டும் தரையில் படுபடி வையுங்கள். நல்ல உறக்கம் வரும்.
ஒற்றை தலைவலி இருந்தால், உங்கள் கைகளை குளிர்ந்த நீரில் வையுங்கள். இது, ஒற்றை தலைவலி குணமாக செய்யும்.
கொசு கடித்த இடத்தில் தொடர்ந்து அரித்துக் கொண்டே இருக்கிறதா? கொசு கடித்த இடத்தில் டியோடிரன்ட் தடவினால், அரிப்பை தடுக்க முடியும்.
முக்கியமாக வேலை செய்துக் கொண்டிருக்கும் போது தூங்கி, தூங்கி விளுகிரீர்களா? நன்கு மூச்சை இழுத்து, எவ்வளவு நேரம் முடியுமோ, அவ்வளவு நேரம் மூச்சை அடிக்கி , வெளிவிடுங்கள். தூக்கத்தை தடுக்க முடியும்.
அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டே இருக்கிறீர்களா? உங்களை நீங்களே கிள்ளி கொள்ளுங்கள். சிரிப்பு நின்றுவிடும்.
மிகுந்த சோகத்தில் இருக்கும் நேரத்தில், எதையாவது எழுதி வையிங்கள். சோகம் குறைந்து, இலகுவாக உணர்வீர்கள்.
மிகுந்த மூக்கடைப்பு இருந்தால், உறங்கும் போது அருகே ஒரு வெங்காயம் வைத்துக் கொண்டு உறங்குங்கள். காலை மூக்கடைப்பு சரியாகிவிடும்.
தொண்டையில் கிச்சுகிச்சு மூட்டுவது போன்ற உணர்வு உண்டாகிறதா? உங்கள் காதை இதமாக தேய்த்துக் கொடுங்கள், இந்த உணர்வு நின்றுவிடும்.
அழுகையை அடக்க வேண்டுமா? உங்கள் கண்களை அகல விரித்து, இமைக்காமல் வைத்திருங்கள் அழுகை நின்று விடும்.

Saturday, 8 October 2016

Marriage Mantram!!!


                                                    Image result for tamil iyer marriage.


|| மாங்கல்யம் தந்துநாநேந மம
ஜீவித
ஹேதுநா | கண்டே பத்நாமி
ஸூபகே ஸஜீவ ஸரதஸ்ஸதம் || இது மணமகன் சொல்வதாக
அமைந்த மந்திரம்.
‘‘உன்னோடு நான்
நீடுழி வாழ வேண்டி இந்த
மங்கல
நாணை உன் அழகிய கழுத்தில்
அணிவிக்கிறேன். எல்லாப்
பேறுகளும் பெற்று நீ
நூறாண்டு
நிறைவான வாழ்க்கை வாழ
இறைவன் அருள் புரியட்டும்!’’ ||ஸோம ப்ரதமோ விவிதே
கந்தர்வ
விவிதா: உத்ட்ராஹ
த்ரியோ அஹ்னித்தெபிதீஹ||
துரியஷ்டெமனுஷ்யஜஹ :
ஷோம ததத் கந்தர்வ கந்தர்வ த த்தயன; .
யே ரயின்ஷப்பூதரம் ஸ்காதத்
அக்னிர்மஹைமதோ இமாம்.
-★. இதன் பொருள்:★
"முதலில் சோமன் (சந்திரன்)
உன்னை
பாதுகாத்தான
பின் கந்தர்வன்
உன்னை பாதுகாத்தான் மூன்றாவதாக அக்னி
உன்னை
பாதுகாத்தான்
நான்காவதாக
மனிதனாகிய நான் உன்
பாதுகாவலன் ஆகிறேன்" இதன் உட்பொருள்:
1. ஒரு பெண் குழந்தை
பிறந்து
தானாக ஆடைகளை
அணியும் பருவம் (4 - 5 வயது)
வரை சந்திர ஒளியின் மென்மை, குளிர்மையை
ஒத்த
குணங்களை பெற்று
வளர்கிறது.
ஆகவே இப்பருவம் சந்திரனின்
ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் பருவம்
எனப்படுகிறது .
2. கந்தர்வன் என்பது
இசைக்கும்,
கேளிக்கைக்கும்
அழகியலுக்கும்
அதிபதியாக சொல்லப்படும்
தேவதை. ஒரு பெண்குழந்தையின் 5 - 11
வயது காலம் என்பது
குறும்பும், அழகும் நிரம்பி
வழிய, கள்ளம் கபடம் இல்லாமல்
துள்ளி திரியும் காலம்.
ஆகவே இது கந்தர்வனின் ஆதிக்கத்தில்
(பாதுகாவலில்) இருக்கும்
பருவம் எனப்படுகிறது.
3. அதன் பின் 11 - 16 வயது
பருவ
காலம், உடலில்
ஹோமோன்களின்
மாற்றத்தால் உடலமைப்பு
மெல்ல மாற உஷ்ண அழுத்த
மாற்றங்கள்
ஏற்பட்டு பூப்படையும்
பருவம்.
காமவெப்பம் மெல்ல உடலில்
தொற்றிக்கொள்ளும் மங்கை பருவம். ஆகவே இது
அக்னி
(வெப்பம்) யின் ஆதிக்கத்தின்
கீழ் வரும் பருவம்
எனப்படுகிறது
இப்படி ஒவ்வொரு பருவத்திலும்
ஒவ்வொரு தேவதைகளின்
அருளால்
பெண்மைக்குரிய
அம்சங்களை
எல்லாம் பெற்று மங்கையாய் அமர்ந்திருக்கும்
உனக்கு குறைவிலா நலமே
தர
இப்போது மானிடன் நான்
உன்
பாதுகாவலன்்ஆகிறேன். இது தான் இந்த
வேதமந்திரத்தின்
உட்பொருள். பசுபதி ..... பசு
என்றால்
ஆன்மா பதி என்றால்
காப்பவன். இதுவே திருமண
மந்திரத்திற்கான விளக்கம்.

Eyesight!!!

கண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை..!!!
கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது, நம் கண்ணாடி அணிகிறோம் இந்தக் கன்னாடியினுடைய பவர் நாள் செல்ல நாள் செல்ல அதிகரிக்கிறதா? அல்லது குறைகிறதா? கண்டிப்பாக அதிகரிக்கிறது, இதிலிருந்து என்ன புரிகிறது, கண்ணாடியின் பவர் அதிகமாகிறது என்றால் யங்கள் கண்ணினுடைய பவர் குறைகிறது என்று அர்த்தம்.
பாதி கெட்டுப்போன கண்ணை முழுவதுமாகக் கொடுப்பதற்குக் கண்ணாடி அணிய வேண்டுமா? இது என்ன மருத்துவம்? கண்ணில் நோய் வந்தால் குணப்படுத்துவதற்கு வைத்தியர் தேவையா? நோயை அதிகப்படுத்துவதற்கு வைத்தியர் தேவையா? கிட்டப்பார்வை, தூரப்பார்வை சரி செய்ய நமது உடலுக்கே தெரியும் அதற்குத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் கெட்டுப் போய் உள்ளன, இது முதல் காரணம். இரண்டாவது கண் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் இல்லை. மூன்று இரத்தத்தின் அளவு குறைவாக உள்ளது. நான்கு கண் கெட்டுப்போய் விட்டது என்று, நம் மனது கெட்டுப்போய் விட்டது. ஐந்து நம் உடலிலுள்ள கண்ணைக் குணப்படுத்தும் அறிவு கெட்டுப் போய்விட்டது.
கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, குளுகோமோ, புரை மற்றும் பல நோய்களுக்கான தண்ணில் கிடையாது. இரத்தத்தில் தான் நோய் எந்த மருந்தும், மாத்திரையும், ஆப்ரேஷனும் செய்யாமல் கண்ணாடி அணியாமல் கண்ணில் வரும் நோய்களைக் குணப்படுத்த முடியும். எனவே நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், கண்ணில் வரும் அனைத்து நோய்களுக்கும் கண் காரணம் கிடையாது. இரத்தத்தில் தான் நோய், அதிலும் மேலே சொல்லப்பட்ட ஐந்தும் தான் காரணம். இந்த ஐந்தையும் சரிப்படுத்துவதன் மூலமாக நமது நோய்களை நாமே குணப்படுத்திக் கொள்ளலாம்.
கண் பார்வை குறைபாடு நீங்க
முருங்கைப் பூவுடன் பசும்பாலை சேர்த்து நன்றாக காய்ச்சி காலை மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகமாகும்; கண் பார்வை குறைபாடு நீங்கும்.
கண்ணில் வெள்ளெழுத்து நோய் உள்ளவர்கள் முருங்கைப் பூ பொடியுடன் தேன்கலந்து அருந்தி வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் உருவாகும் வெண்படலமும் மாறும். முருங்கை பூவை பாலில் வேகவைத்து – பிறகு அந்த பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும்.
இரவு உணவுக்குப் பின் கை, வாய் இவைகளை கழுவிய பின் ஒவ்வொரு கண்ணிலும் மூன்று மூன்று துளிகள் சுத்தமான நீர்விட்டு இமைகளை மென்மையாக தேய்த்து சந்திர தரிசனம் (நிலவைப் பார்த்தல்) செய்தல் மிகவும் நல்லது.
வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. இதனால் கண் நரம்புகள் சூடு குறைந்து பார்வையை தெளிவுபெறச் செய்யும்.
முதுமைக் காலத்தில் கண்டிப்பாக தலைப்பாகை, செருப்பு அணிந்து நடத்தல் வேண்டும்.
இரவு படுக்கைக்குச் செல்லும் முன் உள்ளங்கால்களில் பசுநெய்யை நன்றாக தேய்த்து, அரிசித் தவிட்டை நன்றாக அதன்மேல் தடவி பின்பு பாதங்களை பருத்தியினாலான துணி வைத்து கட்டிவிடவும். விடியற்காலையில் எழுந்தவுடன் கட்டை அவிழ்த்து இரு பாதங்களையும்
குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும.
மதிய உணவில் பண்ணைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை, காரட் சேர்த்துக்கொள்ள வேண்டும். இரவில் பால் சாதம் சாப்பிடுவது நல்லது. இரவு உணவுக்குப்பின், பால், பழம் சாப்பிடுவது நல்லது. ஒருவேளை உணவில் நெய் சேர்த்துக் கொள்ளலாம். நான்கு மாதத்திற்கு ஒருமுறை பேதி மருந்து , மாதம் ஒருமுறை நசிய மருந்து பயன்படுத்தினால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும். பித்தத்தை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்கவும். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உச்சி வெயிலில் அலையக் கூடாது.
முதுமையில் ஏற்படும் பார்வைக் குறைபாட்டை வெள்ளெழுத்து என்று அழைக்கின்றனர். இது குணமாக:
முருங்கை விதை – 100 கிராம்
மிளகு – 100 கிராம்
இரண்டையும் நன்றாக கலுவத்திலிட்டு மெழுகு போல் அரைத்து ஒரு வெங்கலத்தாம்பளத்தினுள் தடவி வெய்யிலில் வைத்தால் தாம்பளம்
சூடேறி எண்ணெய்கசியும். அதனை வடிகட்டி பத்திரப்படுத்தவும்.
இந்த எண்ணெயில் 1 சொட்டு எண்ணெய் கண்ணில் விட வெள்ளெழுத்து பாதிப்பு குணமாகும்.
பொதுவாக கண்களில் வரும் நோய்களில், வயதானவர்களுக்கு காணப்படுவது கண்புரை. இதை ஆங்கிலத்தில், “காட்டிராக்ட்” என்பர். கண்களில் உள்ள லென்ஸ், ஒளி அனுப்பும் தன்மையை இழக்கிறது. இதனால், கண்பார்வை குறைகிறது. பிறந்தது முதல், கண் லென்ஸ் ஒளிக்கதிர்களை விழித்திரைக்கு அனுப்பி, கண் பார்வை தருகிறது. கண்புரை ஏற்பட்டபின் இது மாறுபடுவதால், பார்வை குறைவு ஏற்படுகிறது. கண் புரை நோய், 40 வயது முதல் துவங்கலாம். முதலில், தூரப்பார்வை குன்றுதல், வாகனங்கள் ஓட்டுவதில் சிரமம் மற்றும் பார்வை தன்மை குறைபாடு ஆகியவை உண்டாகும். கண்ணாடி நம்பர் அடிக்கடி மாறக்கூடும். இவ்வாறு ஏதேனும் பிரச்னை இருந்தால், கண் மருத்துவரிடம், கண் புரை நோய் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கண் புரையை, அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும்.
கண் பார்வை குறைபாடு சரி செய்யலாம் ....
வீட்டில் எல்லோரும் செய்யக்கூடிய ஒரு எளிய முறை ஒன்று சொல்லப் போகிறேன். நாம் நம் பூஜை அறையில் தினமும் தீபம் ஏற்றுவோம். அந்த தீப ஒளியை தினமும் 15 நிமிடம் பார்த்து வந்தால் பல நன்மைகளை அடையலாம். அந்த தீபத்தில் இருந்து வரும் ஒளியை கண் அசைக்காமல் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் போது, நமது மனமும் அடங்கும், கண்களுக்கும் மிகவும் நல்லது. கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை, கண் எரிச்சல் போன்ற பல நோய்கள் சரியாகும். எவ்வளவு மனம் பாரமாக இருந்தாலும் சரி குறைந்துவிடும். பல பிரச்சனைகளுக்கு பதில் கிடைக்கும் என்பது மிகப்பெரிய உண்மையாகும். நமக்கே தெரியாமல் அதில் இருந்து நிறைய சக்திகள் நமக்கு கிடைக்கும். அந்த சக்தி என்ன மாற்றத்தை தரும் என்பதை பற்றி கூறுகிறேன்.
1.மனக் கவலை தூள் படும்
2.முடிவு எடுக்கும் திறன் ஏற்படும்
3.கண்கள் புத்துணர்ச்சி பெறும்
4.நாம் புதிய தெம்புடன் காணப்படுவோம்
5.ஆசைகள் நம்மை அடக்குவது போய், நாம் ஆசைகளை அடக்கிவிடுவோம்
6.ஒரு புதிய மனிதராய் காணப்படுவோம்
7.ஒற்றைத்தலைவலி சரியாகும்
எனவே எல்லோரும் இதை தினமும் குறைந்தது 15 நிமிடம் அதற்கு மேலும் செய்யலாம். தொடர்ந்து செய்து வந்தால் பலன் அடைவது நிச்சயம்.
நன்றி:- வாட்ஸ் அப்
Image may contain: 1 person , people smiling

சிரார்த மந்திரம் !!!



                                             Image result for images for srardham                                      






கீழ் கண்ட மந்திரங்களை அங்கிருந்த ப்ரோகிதர் தாய்க்காக பிண்டம் வைக்கும் போது விளக்கத்துடன் சொன்னார். அப்போது அங்கிருந்த ஒவ்வொருவரும் அழுதேவிட்டனர்... சிறிது நிதானமாகப் படியுங்களேன் .. உங்கள் கண்களில் கண்டிப்பாக ஒரு சொட்டு கண்ணீராவது வரும்.

உங்கள் தாயை நினைத்து..♥♥♥♪♥♥♥ கயா கயா கயா. என்று சொல்வது ஆதி சங்கரர் தனது தாயின் கடைசி காலத்தில் தான் வாக்கு கொடுத்தபடி அவளருகே வந்து அவள் மரணத்திற்கு பிறகு அவளது அந்திம கிரியைகளை செய்து இயற்றிய மனம் நெகிழும் மாத்ரு பஞ்சகம் 5 ஸ்லோகங்கள் விஷ்ணு பாதம் பித்ரு ஸ்ரார்தம் கயாவில் செய்வது உசிதம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அக்ஷயவடத்தருகே பிண்ட பிரதானம் செய்வது ஒரு வழக்கம். ''கயா கயா கயா. என்று சொல்வது நமது பித்ருக்களுக்கு ஸ்ரத்தையோடு அவர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் நாம் செய்யும் கடமை சம்பந்தப்பட்டது. . ஒவ்வொரு ஹிந்துவும் வாழ்வில் ஒரு தடவையாவது செல்ல வேண்டிய இடம் கயா. குடும்பம் சகல சம்பத்துகளும் ச்ரேயஸும் பெறும். ஒரு 16 ஸ்லோகங்கள் கொண்டது மாத்ரு .ஷோடசி. தாய்க்கு மகன் அளிக்கும் 16 பிண்டங்கள் பற்றியது. அதன் அர்த்தம் புரிந்துகொண்டால் அவசியம் புரியும். தாயின் அருமை தெரியும்.


ஜீவதோர் வாக்ய கரணாத் ப்ராத்யாப்தம் பூரி போஜணாத் கயாயாம் பிண்ட தாணாத் த்ரிபி: புத்ரஸ்ய புத்ராய '' அடே பயலே, அம்மா அப்பா உயிரோடு இருக்கும்போதே அவர்கள் சொல்படி நட. அவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள். அவர்கள் ஆசீர்வாதம் தான் உன் படிப்பு மூலம் கிடைக்கும் சர்டிபிகேட்டை விட உன்னை நன்றாக வைக்கும். அவர்கள் காலம் முடிந்த பிறகு அந்தந்த திதியில் அவர்கள் பசியை போக்கு. அவர்களுக்கு தேவை அல்வா, ஜாங்கிரி,கீ ரோஸ்ட் அல்ல. வெறும் எள்ளும் தண்ணீரும் தான். முடிந்தால் ஒரு தடவை கயாவுக்கு குடும்பத்தோடு போ. அங்கு நீ அளிக்கும் பிண்ட ப்ரதானம் அவர்களுக்கு தேவை. ''புத்'' என்ற நரகத்திலிருந்து பெற்றோரை காப்பற்றுகிறவன் தான் 'புத்ரன்' என்று சாஸ்திரம் சொல்கிறது. நான் சொல்லவில்லை. 


“அக்ஷய வடம், அக்ஷய வடம்” என்று ஒரு வார்த்தை காதில் விழுகிறதே. அது என்ன? கயாவில் நாம் 64 ஸ்ரார்த்த பிண்டங்களை அங்கு தான் இடுகிறோம். ஸ்ராத்தம் பண்ணுபவர்கள் கயாவில் பித்ருக்களுக்கு, நமது முன்னோர்களுக்கு மட்டுமல்ல, தெரிந்தவர்கள் அறிந்தவர்களுக்கும் 'திருப்தியத', திருப்தியத' என்று மனமுவந்து அளித்து அவர்களை வேண்டுகிறோமே. அக்ஷய வடம் என்பது ஒரு மஹா பெரிய வ்ருக்ஷம். 'வடம்' (தமிழில் சின்ன 'ட") ஆல மரம். சென்னைக்கருகே ல் திரு ஆலம் காடு (திருவாலங்காடு - வடாரண்யம் என்று பெயர் கொண்டது.) இந்த அக்ஷய வடத்தின் கீழே நிழலில் தான் பிண்ட பிரதானம் இடுவார்கள். இதில் முக்யமாக 64 பிண்டங்களில் பெற்ற தாய்க்கு மட்டுமே 16 பிண்டங்கள். ஆந்த 16 பிண்டங்களை அம்மாவுக்காக ஒவ்வொரு வாக்யமாக சொல்லி இடுகிறோம். அந்த பதினாறு தான் “மாத்ரு ஷோடஸி”.


1. கர்பஸ்ய உத்கமநே துகம் விஷமே பூமி வர்த்மநி | தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் || ''கொஞ்சமா நஞ்சமா நான் உன்னை படுத்தியது. ஒரு பத்து மாத காலம் எப்படியெல்லாம் உன்னை உதைத்திருக்கிறேன். என்னையும் சுமந்தபடி மேடும் பள்ளமுமாக நீ அலைந்தாயே. நான் கொடுத்த கஷ்டத்தை துளி கூட நீ பொருட்படுத்த வில்லை. என்னை திட்டவில்லையே. சந்தோஷமாக என்னை உள்ளே அடக்கிய உன் வயிறை எண்ணற்ற முறை ஆசையாக தடவி கொடுத்தாயே. இதோ நான் செய்த 

பாவங்களுக்காக உனக்கு இந்த முதல் பிண்டம். பரிகாரமாக ஏற்றுக்கொள்வாயா?

2. மாஸி மாஸி க்ருதம் கஷ்டம் வேதநா ப்ரஸவே ததா | தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் || ''ஏன் சோர்ந்து போயிருக்கிறாய். உன் பிள்ளை உள்ளே படுத்துகிறானா? பிரசவ காலம் கஷ்டமானது தான். மாசா மாசம் நான் வளர வளர உனக்கு துன்பத்தை தானே அதிகமாக கொடுத்துக் கொண்டே வந்தேன். இந்தா அதற்கு பரிகாரமாக நான் இடும் இந்த இரண்டாவது பிண்டம். ஏற்றுக்கொள் அம்மா. .


3. பத்ப்யாம் ப்ரஜாயதே புத்ரோ ஜநந்யா: பரிவேதநம் | தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் || அம்மா, நான் அளித்த வேதனையில் நீ பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொண்ட தாங்கமுடியாத துன்பம் நான் உன்னை வயிற்ருக்குள் இருந்தபோது உதைத்தது தானே. அதற்காக ப்ராயச்தித்தமாக இந்த 3வது ஸ்பெஷல் பிண்டம் உனக்கு. என் தாயே. 4. ஸம்பூர்ணே தசமே மாஸி சாத்யந்தம் மாத்ருபீடநம் | தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||.


''அம்மா, இந்த 4 வது பிண்டம் உனது பூரண கர்ப காலத்தில் நீ என்னால் பட்ட வேதனைக்காக -- ஒரு பரிசு -- என்றே ஏற்றுக்கொள். என்னைப் பொருத்தவரை எனது பிராயச்சித்தம் என்று நான் இடுகிறேன்.


5. சைதில்யே ப்ரஸவே ப்ராப்தே மாத விந்ததி துஷ்க்ருதம் | தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் || ''ஏண்டி மூச்சு விடறது கஷ்டமாக இருக்கா. கொஞ்ச காலம் தான் பொறுத்துக்கோ'' .என்று உன் உறவுகள், நட்புகள் கேட்குமே. அவ்வாறே மனமுவந்து நான் விளைத்த துன்பத்தை, வேதனையை நீ தாங்கினாயே. அதற்கு பரிகாரம் தான் இப்போது என் கையில் நான் தாங்கும் இந்த ஐந்தாவது பிண்டம். ஏற்றுக்கொள் என் அருமைத் தாயே.''.


6. ' பிபேச்ச கடுத்ரவ்யாணி க்வாதாநி விவிதா நி ச| தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் || ''குழந்தை வயித்திலே இருக்கும்போது இதெல்லாம் எனக்கு வேண்டாம். அப்புறமா சாப்பிடறேன்'' என்று உனக்கு பிடித்ததை எல்லாம் கூட வேண்டாமே என்று உதறினாயே. எனக்காகவே பத்தியம் இருந்தாயல்லவா. நான் நோயற்று வளர, வாழ எத்தனை தியாகம் செய்தாய். நான் உனக்கு செய்த பாவத்திற்கு தான் இந்த ஆறாவது பிண்டம். அம்மா இதற்கு மேல் என்னால் என்ன செய்ய முடியும் சொல்?' .


7. அக்நிநா சோஷயேத்தேஹம் தரிராத்ரோ போஷணேந | தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் || ''நான் குவா குவா என்று பேசி பிறந்து சில நாட்கள் தான் ஆகிறது. அப்போது நீ பசியை அடக்கி வெறும் வயிற்றோடு எத்தனை நாள் சரியான ஆகாரம் இன்றி தூக்கமின்றி வாடினாய். எனக்கு மட்டும் பால் நேரம் தவறாமல் கிடைத்ததே. அந்த துன்பத்தை நான் உனக்கு கொடுத்ததற்கு பரிகாரம் தான் இந்த 7வது பிண்டம்..


 8. ராத்ரௌ மூத்ரபுரீஷாப்யாம் க்லிந்ந: ஸ்யாந்மாத்ரு கர்பட | தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் || இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. கண்ணில் நீரும் சுரக்கிறது. எத்தனை இரவுகள் அசந்து தூங்கும் உன் புடவையை ஈரம் பண்ணியிருக்கிறேன். படவா என்று செல்லமாக தானே சிரித்துக்கொண்டே வேறு துணி எனக்கும் மாற்றினாய். இதற்கு நான் உனக்கு இடும் கைம்மாறு தான் இந்த 8 வது பிண்டம். இதையாவது ஈரமில்லாமல் தருகிறேனே. \.

 9. ''தயா விஹ்வலே புத்ரே மாதா ஹ்யந்தம் ப்ரயச்ச தி | தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் || ''நான் சுகவாசி. எனக்கு எப்போது தாகம், பசி, தூக்கம், எதுவுமே தெரியாது.நீ தான் இருந்தாயே, பார்த்து பார்த்து அவ்வப்போது, எனக்காக நீ இதெல்லாம் செய்தாயே. இந்த பெரிய மனது பண்ணி என்னை வளர்த்த உனக்கு நான் எவ்வளவு துன்பம் தந்திருக்கிறேன். அதற்காக பிராயச் சித்தமாக இந்த 9வது பிண்டம். .


10. திவாராத்ரௌ ஸதா மாதா ததாதி நிர்பரம் ஸ்தநம் | தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் || ''ஒரு சின்ன செல்ல தட்டு என் மொட்டை மண்டையில். ''கடிக்காதேடா..'' . நான் பால் மட்டுமா உறிஞ்சினேன். என் சிறு பல்லால் உன்னை கடித்தேனே. வலித்ததல்லவா உனக்கு. இந்தா அதற்காக ப்ளீஸ் இந்த பிண்டத்தை ஏற்றுக்கொள் அம்மா .


11. மாகே மாஸி நிதாகே சசிரேத்யந்த து கிதா | தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் || ''வெளியே பனி, குழந்தைக்கு ஆகாது. இந்த விசிறியை எடு. குழந்தைக்கு உள்ளே வியர்க்கும். வாடைக்காத்து. ஜன்னலை மூடு. எனக்கு காத்து வேண்டாம். குழந்தையைப் போர்த்தவேண்டும். கம்பளி கொண்டுவா. குழந்தைக்கு குளிருமே.'' காலத்திற்கேற்றவாறு என்னை கருத்தில் கொண்டு காத்த என் தாயே, நான் பிரதியுபகாரமாக கொடுப்பதெல்லாம் இந்த சிறு பிண்டம், 11வதாக எடுத்துக்கொள்.'.


12. புத்ரே வ்யாதி ஸமாயுக்தே மாதா ஹா க்ரந்த காரிணி தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் || எத்தனை இரவுகள், எத்தனை மன வியாகூலம். குழந்தை நெற்றி எல்லாம் சுடறதே, சுவாசம் கஷ்டமாயிருக்கே. சளி உபாதையாக இருக்கிறதே என்று வருந்தி, நாமக் கட்டி, மஞ்சள், விபூதி, பத்து எல்லாம் தடவி மடியில் போட்டு ஆட்டி, தட்டி, என்னை வளர்த்தாயே, கண்விழித்து உன் உடல் . அதற்காகத்தான் இந்த 12வது பிண்டம் தருகிறேன்..
.


13. யமத்வாரே மஹாகோரே மாதா சோசதி ஸந்ததம் | தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் || நான் இந்த பூலோகத்தில் இப்போது கார், பங்களா வசதிகளோடு கை நிறைய காசோடு . ஆனால் இதெல்லாம் அனுபவிக்காமல் நீ யமலோகம் நடந்து சென்று கொண்டிருக்கிறாயே. என் கார் அங்கு வராதே. வழியெல்லாம் எத்தனை இடையூறு. அவை எதுவுமே உனக்கு துன்பம் தராமல் இருக்க நான் தர முடிந்தது இந்த 13வது பிண்டம் தான் அம்மா. .


14. யாவத்புத்ரோ ந பவதி தாவந்மாதுச்ச சோசநம் | தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் || நான் இப்போது, பெரிய டாக்டர், எஞ்சினீயர், வக்கீல், ஜட்ஜ், ஹெட்மாஸ்டர், கம்ப்யூடர் ஸ்பெஷலிஸ்ட் -- நீ இல்லாவிட்டால் நானே எது.? ஏது? ஆதார காரணமே, என் தாயே, இந்த 14வது பிண்டம் தான் அதற்கு பரியுபகாரமாக உனக்கு என்னால் தர முடிந்தது..


15. ஸ்வல்ப ஆஹாரஸ்ய கரணீ யாவத் புத்ரச்ச பாலக: | தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் || திருப்பி திருப்பி சொல்கிறேனே. நான் வளரத்தானே நீ உன்னை வருத்திக்கொண்டாய். நீ வேண்டியதை திரஸ்கரித்தாய். நான் புத்தகத்தில் தான் ''தன்னலமற்ற'' தியாகம் என்று படிக்கிறேன். நீ அதை பிரத்யக்ஷமாக புரிந்து அனுபவித்தவள். எனக்காக நீ கிடந்த பட்டினி, பத்தியம் எல்லாவற்றிற்கும் உனக்கு நான் தரும் பிரதிஉபகாரம் இந்த 15வது பிண்டம் ஒன்றே. .


16. காத்ரபங்கா பவேந்மாதா ம்ருத்யு ஏவ ந ஸம்சய | தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் || நான் சுய கார்யப் புலி. சுயநல விஷமி. உன்னில் நான் உருவாகி, கருவாகி, சிறுவனாகி, பெரியவனாகி, இப்போது உன் மரண வேதனையை சற்றே உணர்ந்தவனாக கண்ணில் நீரோடு தரும் இந்த 16வது கடைசி கடைசி பிண்டத்தை ஏற்றுக்கொள் என் தாயே. தெய்வமே. என்னை மன்னித்து ஆசிர்வதி. மஹா பூதாந்தரங்கஸ்தோ மஹா மாயா மயஸ்ததா ஸர்வ பூதாத்மகச்சைவ தஸ்மை ஸர்வாத்மனே நமஹ ( எவர் எல்லா உயிரினங்களில் உள்ளுறைபவராகவும் மஹா மாயையையுடையவராகவும் ஸர்வ பூதாத்மகமாகவும் இருக்கிறாரோ அந்த ஸர்வாத்மனை நமஸ்கரிக்கிறேன் )