Tuesday, 26 November 2013

ஒரே கிளிக்கில் ஆங்கில அர்த்தத்தை அறிந்துகொள்ள!! !

 ஆன்லைனில் எதாவது படித்து கொண்டிருக்கும் போது ஒரு ஆங்கில வார்த்தையின் சரியான அர்த்தம் புரியாமல் போனால் அதை முழுமையாக படிக்க முடியாமல் போகும்.  ஒரு வார்த்தையின் அர்த்தத்தைத் தேடி அலைய வேண்டாம் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் . எந்த வார்த்தையின் அர்த்தம் வேண்டுமோ அந்த வார்த்தையின் மேல் கர்சரை வைத்து கன்ட்ரோல் பட்டனை அழுத்திக் கொண்டு மவுசின் இடப்பக்கத்தைக் கிளிக்குங்கள் .  அல்லது அந்த வார்த்தையைத் தேர்ந்தெடுத்து கொண்டு Ctrl+Alt+W கிளிக் செய்து கூட உங்களுக்கு வேண்டிய ஆங்கில வார்த்தையின் அர்த்தத்தை அறிந்து கொள்ளலாம்.  ஒரு புதிய பக்கத்தில் அதன் அர்த்தம் நமக்குக் கிடைக்கும்.wordweb

யூடுப் விடியோக்களை ஆன்ட்ராய்ட் மொபைலில் டவுன்லோட் செய்ய!!!

இணைய இணைப்பைக் கொண்டு நம்முடைய ஆன்ட்ராய்ட் மொபைலில் பல விடியோக்கள் பார்த்து ரசிக்கிறோம். யூடுபில் இல்லாத விடியோக்களே இல்லை என்று கூட சொல்லலாம். அனைத்து மொழி பாடல்கள், காமெடி காட்சிகள், திரைப்படங்கள் அனைத்துமே குவிந்து கிடக்கின்றன. நம்முடைய மொபைலில் கண்டிப்பாக யூடுப் வீடியோ பார்த்து ரசித்திருப்போம். அதை டவுன்லோட் செய்ய முடிந்தால் இன்னும் வசதியாக இருக்கும். இணைய இணைப்பு இல்லாத நேரத்திலும் நமக்கு பிடித்த விடியோவை ரசிக்கலாம். விடியோவை டவுன்லோட் செய்ய பயன்படும் மென்பொருளைப் பற்றி தான் இந்தப் பதிவு . டவுன்லோட் செய்த விடியோவை MP3 ஆக கூட கன்வெர்ட் செய்து கொள்ளலாம். அதோடு எல்லா வித குவாலிட்டியிலும் விடியோக்கள் கிடைக்கின்றன என்பது கூடுதல் சிறப்பாகும் . இந்த மென்பொருள் இலவசமாகக் கிடைக்கிறது. கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் .
1. பச்சை வண்ண அம்புகுறி பகுதியைக் கிளிக் செய்து டவுன்லோட் செய்ய வேண்டும்
Screenshot_2013-03-24-01-13-58
2 . வரும் பக்கத்தில் டவுன்லோடை கிளிக் செய்யவும்
Screenshot_2013-03-24-01-14-18
 3. உங்களுக்குத் தேவையான குவாலிட்டி விடியோவைத் தேர்ந்தெடுக்கவும்
Screenshot_2013-03-24-01-14-26
 4. உங்களுக்குத் தேவையான வீடியோ டவுன்லோட் ஆகத் தொடங்கி விட்டது.
Screenshot_2013-03-24-01-14-39




பாடல்கள் கேட்டு மகிழ !!!

இணையத்தில் பாடல்கள் கேட்டு மகிழ நிறைய தளங்கள் ஆன்லைன் எஃம் வசதியினை வழங்கிவருகின்றன. முக்கியமாக வெளிநாடுகளில் இருக்கும் நம் மக்கள் இதனைப் பயன்படுத்தி வருகிறார்கள். இது போன்ற‌ த‌ள‌ங்க‌ளால் 24 ம‌ணி நேர‌மும் ந‌ம் செந்த‌மிழைக் கேட்கும் வாய்ப்பு ந‌மக்குக் கிடைத்திருக்கிற‌து.
ப‌ல‌ த‌ள‌ங்க‌ள் இசையினை வ‌ழ‌ங்கி வ‌ந்தாலும், நான் பாட‌ல் கேட்க‌ ப‌ய‌ன்ப‌டுத்தும் ஒரு ந‌ல்ல‌ த‌ள‌த்தைப் ப‌ற்றி இங்கு எழுதியிருக்கிறேன்.
இத் த‌ள‌த்தில் ப‌ல‌ த‌ர‌ப்ப‌ட்ட‌ பாட‌ல்க‌ள் குவிந்துகிட‌க்கின்ற‌ன‌. ம‌ற்ற‌ த‌ள‌ங்க‌ளில் ஒரு பாட‌ல் முடிந்த‌வுட‌ன், விள‌ம்ப‌ர‌ங்க‌ள், உரையாட‌ல்க‌ள் போன்ற‌வைக‌ள் ஒலிப்ப‌ர‌ப்ப‌ ப‌டும்.
ஆனால் இத்த‌ள‌த்தில் பாட‌ல்க‌ளின் ந‌டுவே இது போன்ற‌ இடையூறுக‌ள் இல்லை என்ப‌து சிற‌ப்பு.
ம‌ற்றொரு சிற‌ப்பான‌ அம்ச‌ம், பாட‌ல்க‌ளைத் த‌னித்த‌னியாக‌ப் பிரித்து வைத்திருக்கிறார்க‌ள்,
மேலே எண்க‌ள் கொடுக்க‌ப்ப‌ட்டிருக்கும், ஒவ்வொரு எண்ணுக்கும் த‌னித்த‌னியாக‌ புதிய‌ பாட‌ல்கள், ப‌ழைய‌ பாட‌ல்க‌ள், ர‌ஹ்மான் பாட‌ல்க‌ள், இளைய‌ராஜா பாட‌ல்க‌ள், யுவ‌ன்ச‌ங்க‌ர்ராஜா பாடல்க‌ள் ம‌ற்றும் ப‌ல‌ பிரிவுக‌ளாக‌ப் பாட‌ல்க‌ள் தொகுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.
இத்தளத்தில் அனைத்து பாட‌ல்க‌ளும் ந‌ல்ல‌ த‌ர‌மான‌ ஒலியில் கிடைப்ப‌து ம‌ற்றுமொருசிற‌ப்பு.
இப்பொழுதே கீழே க்ளிக் செய்து பாடல்கள் கேட்கத் தொடங்குகள் !!!