Saturday, 1 October 2022

பல்வலி தீர்வு!!!

*🌷🌷நொடி பொழுதில் பல் வலியை போக்கும் நாட்டு வைத்தியம்:! அனுபவ உண்மை!!*

தீராத பல்வலி உள்ளவர்கள் நாட்டு பெருங்காயம் எனப்படும் பால் பெருங்காய தூளை இந்த முறையில் பயன்படுத்தினாலே போதும் நொடி பொழுதில் பற்களில் உள்ள புழுக்கள் செத்து பல் வலியிலிருந்து நிரந்தர தீர்வினை பெறலாம்.வாங்க நாட்டு பெருங்காயத்தை எப்படி வாங்குவது மற்றும் தூள் தயாரிக்கும் முறை,இதனை சொத்தை பல்க்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பதனை பற்றி இந்த பதிவில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

முதலில் பெருங்காயத்தைப் தேர்ந்தெடுக்கும் முறை!

நாம் டப்பாக்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் தூள் பெருங்காயம்மனித உடலுக்கு கேடு விளைவிக்கும் ஒரு கெமிக்கலாகும்.

பால் பெருங்காயம் என்று சொல்லக்கூடிய பெருங்காயம்தான் உடலுக்கு பல நன்மைகளை பயக்கிறது.இது அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

பெருங்காயப் பொடி தயாரிக்கும் முறை!

நாட்டு மருந்து கடையில் இருந்து வாங்கி வரும் பெருங்காய கட்டியை சிறிது சிறிதாக உடைத்து,இதனை ஒரு வானிலையில் போட்டு நன்றாக சூடு படுத்திக் கொள்ள வேண்டும்.பின்பு சிறிது நேரம் ஆற விட்டு இதனை நன்றாக பொடி செய்து கண்ணாடி குப்பியில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.
கண்ணாடி பாட்டிலில் போடுவதற்கு காரணம்,
பெருங்காயத் தூளின் வாசனை மற்றும் மருத்துவம் குணம் மாறாமல் இருக்கும்.மேலும் இதனை நீண்ட நாட்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த பொடியை சொத்தைப் பல்லுக்கு எவ்வாறு பயன்படுத்துவது?

பொடி செய்து வைத்த பெருங்காயத் தூளை வானிலில் போட்டு சிறிது சூடுபடுத்தி அந்தத் தூளை சிறிதளவு சூட்டுடன் எடுத்து சொத்தைப்பல் உள்ள இடத்தில் வைத்தால் புழுக்கள் செத்து பல்வலி நொடிப்பொழுதில் குணமாகிவிடும்.

Wednesday, 7 September 2022

varicose veins medicine!!!

வெரிக்கோஸ் வெயின் எனும் நரம்புசுற்று (சிலந்தி) நோய்க்கு நிரந்தர தீர்வளிக்கும் கார்டோரியம் cardorium+எனும் ஆயூர்வேத டானிக் மேல் பூச்சுக்கு எங்கள் வைத்தியர் தயாரிப்பான கோடாசூரி தைலம் மிகுந்த நற்பலனை தருகிறது கடந்த ஆறுமாத காலமாக நான் அனுப்பி பலனடைந்தவர்கள் பலர் இந்த கோடாசூரி தைலம் மூட்டுகள் கழுத்து கை கால் வலி சதைவலிக்கும் நற்பலனை தருகிறது அதிக அளவில் கொடுத்துக்கொண்டிருக்கின்றேன்...இதனை தடவுவதால் சுற்றுநரம்புகள் தளர்ச்சி அடைகின்றன மேல் குறிபிட்டுள்ள டானிக்கும்  சேர்ந்து சாப்பிடுவதால் குறிகிய காலங்களில் நிரந்தர தீர்வை பெறலாம் முற்றி விட்டால் அறுவை ஒன்றே தீர்வு குறைந்த சிலவிலான இந்த வைத்திய முறை வலியில்லா வாழ்வுக்கு உங்களை அழைத்து செல்லும் 
நன்றி தேவையற்ற விமர்சனங்களை தவிற்க்கவும் நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்... Palaniyappan BSS Dip sidha.9942162388

Saturday, 3 September 2022

மைத்ரேய முகூர்த்தம்!!!

ராசிப்படியான பொது மைத்ர முகூர்த்த நேரம்

மனித வாழ்க்கையில் சில தருணங்களில் தடங்கல்களும், போதாத காலங்களும் வரும் என்று தீர்க்கதரிசனமாகச் சொல்லிவைத்த பெரியோர்கள், அவ்வாறான பிரச்னைகளும் தடைகளும் விலகுவதற்கான வழிமுறை களையும் விளக்கியிருக்கிறார்கள். 

விவாக முகூர்த்தம், பிரம்ம முகூர்த்தம், அபிஜித் முகூர்த்தம், லக்னநிர்ணய முகூர்த்தம் என்று பிரித்து வழிபாடுகளைச் செய்யச் சொன்னார்கள். இவற்றில் யாருமே அறிந்திராத மைத்ர முகூர்த்தமும் உண்டு. இந்த முகூர்த்தம், கடன்களை அடைக்க உகந்த நேரமாக உள்ளது. 

கடன் தொல்லையால் மீளமுடியாமல் தவிக்கும் அன்பர்கள், இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைக் கணித்து, அந்தத் தருணத்தில் கடனில் சிறு பகுதியையாவது அடைக்க முயற்சிப்பது சிறப்பு. கடன் கொடுத்தவர், இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக வாங்க மறுக்கிறார் எனில், சிறு சிறு தொகையாக நமது வங்கிக் கணக்கில் சேர்த்து சேமித்து, பிறகு மொத்தமாக அடைக்கலாம். அப்படி, மாதந்தோறும் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் நேரமானது மைத்ர முகூர்த்தமாக இருக்கும்பட்சத்தில் வெகு சீக்கிரத்தில் பணம் சேர்ந்து, மொத்த கடனும் அடைபடும். 
முடியாதவர்கள் டைரியிலோ அல்லது  டப்பாவிலோ பணத்தை போட்டு வைத்து சேமித்து கடனை அடைக்கலாம் 

ராசிப்படியான பொது மைத்ர முகூர்த்த நேரத்தை அறிந்து கொள்ளுங்கள். 

மேஷம் - வியாழன் காலை 9 - 10:30 மணி 

ரிஷபம் - வெள்ளி 8 மணி முதல் 10:30 வரை 

மிதுனம் - புதன் காலை 7:30 - 9 

கடகம் - திங்கள் மாலை 4 :30 - 6 

சிம்மம் - ஞாயிறு காலை 11 - 12:30 

கன்னி - வெள்ளி மாலை 5 - 6:30 

துலாம் - சனி காலை 10:30 - 12:00 

விருச்சிகம் - வியாழன் மாலை 3 -5 :30 

தனுசு - செவ்வாய் காலை 10:30 - 12 

மகரம் - சனி காலை 8 - 10:30 

கும்பம் - திங்கள் மாலை 3 - 5:30 

மீனம் - வியாழன் காலை 8 -10:30

அஸ்ட்ரோ
வெ.பழனியப்பன்