Thursday, 5 December 2013

இஞ்சிப் பால்!!!

கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க.

ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?

ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.

அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.

அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?

1. நுரையீரல் சுத்தமாகும்.

2. சளியை ஒழுச்சு கட்டிடும்.

3. வாயுத் தொல்லை என்பதே வராது.

4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.

5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.

6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.

7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.

8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.

9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.

10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.

அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?

3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.

ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்.

மீதிப்பேர் சாப்பிடலாம்.

என்ன நாளையில இருந்து உங்க வீட்டில காப்பிக்கு பதில் இஞ்சிப்பால்தானே?


Wednesday, 4 December 2013

எளிய இயற்க்கை மருத்துவம்!!!

எளிய இயற்க்கை மருத்துவம் :-

நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 

தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

வாய் நாற்றம்

சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

உதட்டு வெடிப்பு

கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

குடல்புண்

மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

வாயு தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

மலச்சிக்கல்

செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

சீதபேதி

மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

பித்த வெடிப்பு

கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

மூச்சுப்பிடிப்பு

சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

தேமல்

வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

மூலம்

கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

தீப்புண்

வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

வரட்டு இருமல்

எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.


மூவி கிரியேட்டர்!!!


நம்மிடம்
உள்ள புகைப்படங்கள் வீடியோபடங்களை நாம் விருப்பபடி ஆடி யோ மற்றும் டிரான்ஸ்செக்ஷன்
சேர்த்து மூவி கிரியேட் செய்ய  இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது
இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்த்தும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.









இதில் Photo/Video Library.Audio
library,Transtions என மூன்றுவிதமான டேப்புகள் கொடுத்திருப்பார்கள்.இதில் முதலில் உள்ள Photo/Video Library என்பதனை கிளிக்
செய்து நமது கணிணியில் உள்ள புகைப்படங்களை தேர்வு செய்யவும்
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.










இதில்
நீங்கள் தேர்வு செய்த புகைப்படங்கள் கிடைக்கும்
இதனை டிராப் அன்ட் டிராக் முறையில் இழுத்துவந்து
வலதுபுறத்தில் கீழே உள்ள விண்டோவில்
 
விடவும்.










இப்பாது
உங்களுக்கு மேற்கண்டவாறு டிஸ்பிளே ஆகும்
.இதில் நமது புகைப்படங்கள் டைம் லைனில் டிஸ்பிளே ஆகுமஇதில மூன்று விதமான காலங்கள் கொடுத்துள்ளார்கள்.டெக்ஸ்,டிரான்ஸ்சிக்ஸன்.ஆடியோ என உள்ளதுஇதில் உள்ள டெக்ஸ்ட் கிளிக் செய்ய கீழ்கணட விண்டோ ஓப்பன் ஆகும்.










இதில்
நமக்கான வார்த்தையை தட்டச்சு செய்து புகைப்படத்தில்எந்த இடத்தில் வார்த்தை வரவேண்டுமோ அதனை தேர்வு செய்யவும்
மேலும் பாண்ட்களையும் தேர்வு செய்யவும்.பின்னர் பாண்ட்களுக்கு
தேவையான நிறத்தினையும் தேர்வு செய்யவும்
இறுதியாக ஓ.கே.தரவும்.


அடுத்த
தாக உள்ள டிரான்ஸ்சிஸன் தேர்வு செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்
.










இதில்
விதவிதமான டிரான்ஸ்சிஸன்கள் கொடுத்துள்ளார்கள்
நமக்கு தேவையாதை தேர்வு செய்ய நமக்கு ஒவ்வாரு
எபெக்ட்களும் நமக்கு டிஸ்பிளே ஆகும்
.










இதில்
அடுத்த்தாக உள்ள ஆடியோ தேர்வு செய்து நமது கணிணியில் உள்ள ஆடியோவினை தேர்வு செய்யவும்
இப்பாது உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்
.இதில் பாடலுக்கு தேவையான இடத்தினை தேர்வு
செய்துகாள்ளலாம்
.










 அனைத்து பணிகளும் முடிந்த்தும் நீங்கள்
இதில் மேற்புறம் உள்ள பைலில்
 Save Us Video கிளிக் செய்து வரும்
விண்டோவில் எந்த பார்மெட் வேண்டுமா அதனை தேர்வு செய்யவும்
கீழே
உள்ள விண்டோவினை பாருங்கள்
.















தேவையாதை
தேர்வு செய்தபின் இதில் உள்ள

Go  கிளிக் செய்யவும.
இதில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும்.








இறுதியாக
உங்களுக்கான மூவி வீடியோ ஆனது  நாம் தேர்வு செய்த இடத்தில் சேமிப்பாக மாறியிருக்கும்
.பயன்படுத்திப்பாருங்கள்.