பலநாள் மூட்டுவலியால் அவதிப்பட்டு வந்த எனது தாயாருக்கு அப்போது வயது 64!!
அப்பல்லோ மருத்துவமனை, ராமசந்திரா.மியாட்டென அலைந்து திரிந்து கடைசியில் வயதாகிவிட்டது கால் மூட்டிலுல்ல குழம்பு வற்றி தேய்வு ஏற்பட்டுயிருப்பதால் மூட்டு மாற்று அறுவசிகிச்சை அதற்க்கு 5 லட்சம் செலவு 6 மாதம் ஓய்வு என பய்பாஸ் சீகிச்சையைவிட ஓவரா சொல்லிட்டாங்க
தற்ச்செயலா ஒரு உறவினர் பாட்டிக்கிட்ட பேசியபோது அவங்க சொன்ன நாட்டு வைத்தியம் நச்சுகொட்டை இலையை(கீரை) வதக்கியும், சமைத்தும் சுடச்சோற்றில் கலந்து ஒருமாதம் நாள்விட்டு அல்லது வாரமிருறை மூன்றுமுறை உட்கொண்டு மட்டுமல்லாமல், வாரத்திற்க்கு இரண்டுமுறை மூட்டில் பத்துப்போட்டுவர! 5 லட்சரூபாய்த்தீர்வு இலவசமாக கிடைத்ததோடு! வலி வேதனை ஆப்ரேஷன் பின் படுக்கை போய்விட்டது,( இலையை நரம்பு நீக்கி சமைக்கவேண்டும்) இப்போது அம்மாவிற்க்கு வயது 69 என்னுடன் இருசக்கரவாகணத்தில் கூட ஏறி உட்கார்ந்து வருகிறார்கள் கோவிலுக்கும் வங்கிக்கும் நடந்தே செல்கின்றனர்!
பாருங்கள் நமக்கு இறைவன் கொடுத்த இயற்கை எளிய தீர்வை நாம் தெரிந்துகொள்ளாமல் எடுத்தவுடன் ஆங்கில மருந்தும்! சற்றே நமது நாட்டு மருத்துவத்தையும் முயற்ச்சித்துப்பார்ப்போமே!! குறிப்பு : நச்சுக்கொட்டை இலை செடி சிறிய அதன் மரத்துண்டை வெட்டி நட்டாலும் நமது தோட்டங்களிலேயே வளர்ந்துவிடுகிறது, என்னுடைய தோட்டத்திலும் வைத்து தற்போது மரமாக வளர்ந்துள்ளது!
No comments:
Post a Comment